முகப்பு / வலைத்தலம் / சோதனையா? அருட்பார்வை உங்களுக்கு அருகில்..

சோதனையா? அருட்பார்வை உங்களுக்கு அருகில்..

ப்பல் ஒன்று கடலில் வழிதவறிச்செல்லும்போது புயலில் சிக்கி மூழ்கிவிடுகிறது.

அதில் ஒருவன் மட்டும் எப்படியோ தப்பிவிடுகிறான். அருகிலுள்ள தீவில் அவன்
கரையேறுகிறான்.

இறைவாஇங்கிருந்து எப்படியாவது என்னைத் தப்பிக்க வைத்துவிடு. ஆள் அரவமற்ற இந்தத் தீவில் எத்தனை நாள் நான் தனியே இருப்பது? என் மனைவி மக்களைப் பார்க்கவேண்டாமா?” என்று பிரார்த்திக்கிறான்.

ஏதாவது ஒரு வடித்தில் தனக்கு உதவிக்கரம் நீளும் என்று
தினசரி எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்துவிடுகிறான். எந்த உதவியும் கிடைத்தபாடில்லை. இப்படியே நாட்கள் ஓடுகின்றன.

தன்னைக் காத்துக்கொள்ள, தீவில் கிடைத்த பொருட்கள், மற்றும் கப்பலின் உடைந்த
பாகங்கள் இவற்றைக் கொண்டு சிறிய குடிசை ஒன்றைக் கட்டுகிறான்.

அதில் கரை ஒதுங்கிய கப்பலில் இருந்த தனது பொருட்கள் மற்றும்
உடமைகள் சிலவற்றை மட்டும் பத்திரப்படுத்தி, தானும் தங்கிவந்தான்..

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

இப்படியே சில நாட்கள் ஓடுகின்றன. இவன் பிரார்த்தனையை மட்டும் விடவில்லை.

கடவுள் ஏதாவது ஒரு வடிவில் வந்து நமக்கு உறுதியாக உதவுவார் என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டான்.

ஒரு நாள் இவன் உணவு தேடுவதற்காக வெளியே சென்றுவிட்டுத் திரும்புகையில், அவன் கண்ட காட்சி அவனைத் திடுக்கிட வைத்தது.

பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்என்பது போலஎது நடக்கக் கூடாதோ அது நடந்துவிட்டது.

இவன் தங்குவதற்கென்று இருந்த ஒரே குடிசையும் வானுயுர எழும்பிய புகையுடன் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது.

குடிசைக்குள் இருந்த உடைமைகள் அனைத்தும் தீக்கிரையாகியிருந்தன.

அதைப் பார்த்த இவன் அலறித் துடித்தான். எல்லாமே போய்விட்டது. இவனிடமிருந்த மிச்சசொச்சப் பொருட்களும் போய்விட்டன.

இறைவா! என்னைக் காப்பாற்றும்படிதானே உன்னை மன்றாடினேன். நீ என்னவென்றால் இருப்பவற்றையும் பறித்துக்கொண்டாயேஇதுதான் உன் நீதியோ…?” என்று கதறி அழுகிறான்.

மறுநாள் காலை ஒரு கப்பலின் சthதம் இவனை எழுப்பியதுஇவன் இருந்த தீவை நோக்கி அது வந்துகொண்டிருந்தது.

அப்பாடாநல்ல வேளைஒருவழியாக இங்கிருந்து
தப்பித்தோம். யாரோ நம்மைக் காப்பாற்ற வருகிறார்கள்.”
என்று உற்சாகத்தில் துள்ளிக் குதித்தான்.

கப்பல் சிப்பந்திகள் சிலர் வந்து இவனை, லைஃப் போட்டில் வைத்து அழைத்துச் சென்றார்கள்.

தான்  இங்கே தீவில் மாட்டிக்கொண்டிருப்பது எப்படி தெரியும் என்று
அவர்களிடம் அவன் கேட்க, “தீவில் ஏதோ பற்றி எரிந்து புகை எழும்பியதைப் பார்த்தோம்….

யாரோ தீவில் கரை ஒதுங்கிக் காப்பாற்ற வேண்டி சிக்னல் கொடுக்கிறார்கள் என்று
நினைத்தோம்என்கிறார்கள் அவர்கள்.

அப்போதுதான் இறைவன் குடிசையை எரித்த காரணம் இவனுக்குப் புரிந்தது. இறைவனுக்கு நன்றி சொன்னான்.

அந்த வழியில் கப்பல்கள் வருவதே  மிக மிக அரிதான நிலையில், குடிசை மட்டும் தீப்பிடித்து எரியவில்லை என்றால் தன் நிலை என்னவாகியிருக்கும் என்று அவனுக்குப் புரிந்தது.

அவசரப்பட்டு இறைவனை நிந்தித்ததை நினைத்து வெட்கினான்.

வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் நாம் இப்படித்தான் இறைவனை
அவசரப்பட்டு தவறாக எடைபோட்டுவிடுகிறோம்.

நம்மைக் காக்கவே அவன் ஒவ்வொரு கணமும் காத்திருக்கிறான். அவன் தரும் சோதனைகள் அனைத்தும் நம்மை வேறொரு மிகப் பெரிய ஆபத்திலிருந்து காக்கவே என்று நாம் புரிந்துகொண்டால், எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளவேண்டியதில்லை.

சோதனை என்றால்இறைவனின் அருட்பார்வை உங்கள் மீது விழுந்துவிட்டது, விரைவில் நல்லது நடக்கும் என்று நம்புங்கள்.

About admin

மேலும் படிக்கவும்

உயர்ந்தவர் யார்?

துறவி ஒருவர் பல ஆண்டுகளாக ஒரு புண்ணிய நதிக்கரையில் கடுமையான தவ வாழ்வை மேற்கொண்டிருந்தார். உயர்குடிப் பிறந்தவன் என்ற கர்வம் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன