முகப்பு / வலைத்தலம் / கடவுள் எங்கே? எப்படி இருப்பார்?

கடவுள் எங்கே? எப்படி இருப்பார்?

கடவுள் எப்படி இருப்பார் என அரசன் கேள்விக்கு துறவி சொன்ன விளக்கம்.

அரசனுக்கு கடவுள் எப்படி இருப்பார் என சந்தேகம் .அவரின் சந்தேகத்தை யாரும் புரியும்படி சொல்லவில்லை

அச்சமயம், துறவி ஒருவர் கடவுள் பற்றி தங்களுக்கு பதில் அளிக்கிறேன் என சொன்னார்
, ஒரு மெழுகு வர்த்தியை ஏத்தி, அரசே இந்த மெழுகு வர்த்தியின் தீபம் எந்த திசையைக் காட்டுகிறதுன்னு கேட்டார்.

அவர், அது மேல் நோக்கி காட்டுகிறது… எந்த திசையையும் குறிப்பிட்டுக் காட்டவில்லை எனச் சொன்னார்.

“சரி”ன்னு சொல்லிட்டு மெழுகு வர்த்தியை திருப்பி திருப்பி மேலும் கீழும் குறுக்கும் நெடுக்குமாக வைத்தார்

அப்போதும் தீபம் மேல் நோக்கியே நின்றது.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

“அரசே! நாம் தீபத்தை சாட்சியாக ஏற்றுக் கொண்டு கடவுள் நமக்கு மேலே இருக்கிறார் என்பதை அறிவோமாக. வர் வேறு எந்த திசையிலும் இல்லை”

“அடுத்து நீங்கள் கேட்ட கேள்வி. கடவுள் எப்படி இருக்கிறார்”

”இதுக்கு பதில் சொல்லணும்னா எனக்கு ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் பால் வேணும் “அரசே!
இந்தக் கிண்ணத்தில் உள்ள பாலில் கொஞ்சம் தயிர் சேர்த்தால் என்னவாகும்?”

”அது தயிராகும்” என அரசர் பதிலளித்தார்.

“ஆமாம். அந்தத் தயிரைக் கடைந்தால் வெண்ணெய் ஆகும்.

அந்த வெண்ணெய்யை உருக்கினால் அது நெய் ஆகும். சரிதானே?” என்று துறவி கேட்க அரசர் ஆமோதித்தார்.

“அப்படியானால் இந்தக் கிண்ணத்தில் உள்ள பாலுக்குள் தயிர், மோர், வெண்ணெய், நெய் எல்லாம் இருக்குன்னு ஒத்துக்கறீங்களா-ன்னு கேட்டதும் அரசர் “ஆமாம். ஒத்துக்கறேன்.”-னு சொன்னார்.

“சரி அரசே! இந்தப் பாலில் எந்த பாகத்தில் தயிரும், எந்த பாகத்தில் மோரும், எந்த பாகத்தில் வெண்ணெயும், எந்த பாகத்தில் நெய்யும் இருக்குன்னு பிரிச்சுக் காட்ட முடியுமா” ன்னு கேட்க, அரசர், “அது எப்படி முடியும்? எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று அடக்கம்” என்றார்.

”அது போல்தான் கடவுள் நம் எல்லோருக்குள்ளும் அடக்கமாக இருக்கிறார். அவர் எங்கும் நீக்கமற எல்லாமாயும் வியாபித்திருக்கிறார். அவர் இல்லாத பொருள் உலகில் எதுவும் இல்லை” என்றார் துறவி.

“சரி! இரண்டு கேள்விகளுக்கு சரியான விடையளித்தாய். என் மூன்றாவது கேள்விக்கு பதில்? கடவுள் என்ன செய்துகொண்டிருகிறார்?

“அரசே! நான் உங்கள் இரண்டு கேள்விக்கு சரியாக விடை அளித்து விட்டதால், நான் உங்களுக்கு குருவாகிறேன். நீங்கள் சிஷ்யன் ஆகிறீர்கள். எனவே, குரு கீழேயும் சிஷ்யன் மேலேயும் இருப்பது சரியல்ல. நீங்கள் சிம்மாசனத்தை விட்டு இறங்கி வந்து கீழே நில்லுங்கள. நான் அங்கே அமர்ந்து

உங்கள் கேள்விக்கு பதில் சொல்கிறேன்”-னு துறவி சொன்னதும்,
துறவியை அரியணையில் உட்கார வைத்துவிட்டு, அரசர் கீழே இறங்கி நின்றார்.

உடனே துறவி ”யாரங்கே இந்த மதிகெட்ட மன்னனை சிறையிலடைத்து சித்தரவதை செய்யுங்கள்” எனக் கட்டளை யிட்டான்.

அரசனும் அவையோரும் திகைத்துப் போய் நிற்கவே, துறவி சிரித்துக் கொண்டே, “அரசே பயப்படவேண்டாம். நான் அரசனாக நடித்தேன். அவ்வளவுதான். சற்று முன்னர் தாங்கள் அமர்ந்திருந்த அரியணையில் இப்போது இறைவன் என்னை அமர வைத்து உங்களை என் ஆணைக்கு அடிபணிய வைக்கும் சாதாரண மனிதனாக மாற்றி விட்டார். இதைத்தான் இறைவன் இப்போது செய்தார்.. ஆண்டியை அரசனாக்கவும், அரசனை ஆண்டியாக்கவும் கடவுள் ஒருவனாலேயே மாற்ற முடியும்.”

அரசன் உண்மை உணர்ந்து கடவுளுக்கும் துறவிக்கும் நன்றி கூறினார்.

About admin

Avatar

மேலும் படிக்கவும்

எல்லாருக்கும் மகிழ்ச்சி தருவது எது?

தஞ்சையை ஆண்ட மன்னர் இராஜராஜ சோழனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. உலகில்_அனைவருக்கும் #மகிழ்ச்சியைதரக்கூடியபொருள் எது என்பதே அவர் கேள்வி. ‘மன்னரின் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன