முகப்பு / மனம் மலரும் கதைகள் / துணை வருவாள் துர்க்கையம்மன்-2

துணை வருவாள் துர்க்கையம்மன்-2

ஆமா. . . கெணத்துத் தண்ணிய வெள்ளமா கொண்டு போகப்போகுது. . . நீ நல்லபடியாக வேலையில சேர்ந்து. . .பயம் இல்லாமல் பத்திரமா. . . இருக்கணும் ஆத்தா.. . பட்டீஸ்வரம் துர்க்கைன்னா. . . பகையாளி பத்து மைல் தூரத்திற்கு ஓடிடுவான். . உங்க அப்பனுக்கு இது ஒண்ணுல தான் புத்தி ஒழுங்கா வேலை செஞ்சிருக்கு. . . இல்லைன்னா வெட்டி வீராப்பு பேசிகிட்டு திரிவான். . .
“அப்பாவ கலாய்கலன்னா. . . உங்களுக்கு தூக்கமே வராது. . . வாங்க மாமா சாமி கும்பிடலாம். . .” சரண்யா மாமாவை முறைத்தப்படியே சொன்னாள்.
கண்கள் மூடி மனமுருக வேண்டிக்கொண்டாள் சரண்யா. “ஜெய ஜெய தேவி… “ஜெய ஜெய தேவி…துர்கா தேவி சரணம்.” அவள் மனசுக்குள் மந்திரங்களை முணுமுணுத்தாள்.
துர்க்கையம்மன் பாதங்களில் இருந்து எடுத்து வந்த குங்குமத்தை சரண்யாவின் நெற்றியில் வைத்துவிட்டார் அர்ச்சகர்.
திடீரென்று அவள் உடல் முழும் புது ரத்தம் பாய்வது போல் இருந்தது… அதோடு .. புவிதமான நம்பிக்கையும்…அவளுடைய ரத்த நாளங்களில் பாய்வது போல் உணர்ந்தாள்.
சோழர் காலத்துக் கோயில். . . சரண்யா. . . எவ்வளவு பிரம்மாண்டம் பாத்தியா..?
பிரகாரம் சுற்றிவரும் போது முருகன் மாமா சொல்லிக்கொண்டு வந்தார்.
கோயில் பூஜைகளை முடித்துவிட்டு வரும் போதே இருட்டி விட்டது. இரவு சாப்பிட்டு விட்டு ரயில் ஏறிய போது மணி பதினொன்று.
நினவு கலைந்த போது . . . இவளுக்கு நேராகவே ஒருவன் பாட்டிலைத் திறந்து குடித்துக்கொண்டிருந்தான். அந்த கம்பார்ட்மெண்ட்டில் வேறு பெண்கள் இருப்பது மாதிரி தெரியவில்லை. பக்கதுத் சீட்டில் ஒரு பெரியவர் இருமியபடி தூக்கம் வராமல் உட்கார்ந்திருந்தார்.
கரடு முரடான ஒரு கம்பார்ட்மென்ட்டில் மாட்டிக் கொண்டதாகப்பட்டது சரண்யாவிற்கு. மேல் படுக்கையில் படுத்திருந்தவன் தனது தாடியத் தடவிக்கொண்டு இவளை ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டிருந்தான். இரண்டு சீட்டுக்கும் நடுவில் நான்கு பேர் சீட்டு விளயாடிக் கொண்டிருந்தார்கள், ரயிலில் பாதிபேர் ஆழ்ந்த தூக்கத்திற்கு போய் விட்டார்கள். சூழ்நிலைகள் எல்லாமும் சோதனயாகவே இருந்தது சரண்யாவிற்கு.
பயத்தில் கொஞ்சமாய் வேர்த்தது அவளுக்கு. இ ன்னும் இரண்டு மணி நேரம் போக வேண்டுமே!. யோசிப்பதற்குள் ஒருவன் கிண்டலடிக்க ஆரம்பித்தான். “பாப்பாவுக்கு எந்த ஊரு-?” கண்ணத்துல பல்லாங்குழி விழுது. அப்ப பல்லடமாத்தான் இருக்கணும்.
இன்னொருவன் கொஞ்சமாய் இடித்தான்.
அப்போதுதான் கருவாட்டுக்கூடையுடன் ஒருத்தி வந்து டாய்லெட் பக்கத்தில் உட்காருவதை கவனித்தாள் சரண்யா. . . வந்தவளுக்கு நாற்பது வயது இருக்கும். வாட்ட சாட்டமாக இருந்தாள்.
“ஒரு கம்பார்ட்மென்ட்லயும் . . . இடம் தர மாட்றாங்கப்பா. ..கருவாட்டுக்கூட நாறுதாம். . . தூக்கம் வரமாட்டேங்குதுன்னு துரத்தி விடறாங்க.. . இந்த ரயில்ல நம்ம பொளப்புதான் நாறப்பொளப்பா. . . இருக்கு. . .” தனியாக புலம்பிக் கொண்டிருந்தாள் கருவாட்டுக்காரி.
அவளிடம் எழுந் போய் சொல்லலாமா…. என்று எழுந்தாள் சரண்யா..
அதற்குள் ஒருவன் சரண்யாவின் துப்பட்டாவை பிடித்து இழுத்தான்.
ஏய் . . . . ராஸ்கல். .
கத்தினாள் சரண்யா. . .
கருவாட்டுக்காரி பதறியடித்து ஓடிவந்தாள். வாய் நிறைய வெற்றிலையைப் போட்டு குதப்பிக் கொட்டிருந்தாள். நாக்கு ரத்தமாக சிவந்து கிடந்தது. மூக்குத்தி மின்னியது. இந்த மூக்குத்தியை எங்கேயோ பார்த்தது போல் இருந்தது சரண்யாவிற்கு,
“டேய் என்னங்கடா.. . பேமானிங்களா. . . அந்த புள்ளயாண்ட என்னடா… ராங்கு பண்றீங்க. . .”
பக்கா லோக்கலாகப் பேசினாள்.
பார்றா. . . இந்தக்காவ . . . இவளத் தூக்கி முதல்ல வெளிய வீசுங்கடா . . அப்புறம் அந்த மயிலைப் பார்துத்க்கலாம். . . அவன் சொல்லி முடிப்பதற்குள். . . அவனை ஓங்கி அறைந்தாள் கருவாட்டுக்காரி. . . அவன் பொறி கலங்கிப் போய்விட்டான். . .
ஓங்கி அறைந்தால் ஒண்ணரை டன் என்பார்களே அப்படி இருந்தது அடி…
எச்சிலை ஜன்னல் வழியாகத் துப்பினாள்
பொட்டப்புள்ள கிட்ட இன்னாடா. . . நக்கல் பண்றீங்க. . . முறைத்துக்கொண்டே இருந்தவனின் முகத்தில் இந்த முறை அறை. . . அவன் ரத்தம் வழிய இருக்கையில் சாய்ந்தான். தாறுமாறாக தரையில் விழுந்தவர்களை எட்டி உதைத்தாள் கருவாட்டுக்காரி.
“தறுதலைகளா. . . இன்னா வேணும் உனக்கு. . .”
ஏதோ பேச எழுந்தவனை எழுந்திருக்க விடாமல் முகத்தில் அறைந்தாள் அவள்.
“கருவாட்டுக் கூடைய வைச்சி. . . நசுக்கியே கொண்ணுடுவேன்..இனிமே எங்கயும்.. எந்த புள்ளங்க கிட்டவும் சேட்ட பண்ணக்கூடாது. . . கஸ்மாலங்களா.. . ஓடிப்போயிடுங்க. . .”
அதற்குள் பக்கத்து கம்பார்ட்மெண்டில் இருந்தவர்கள் எல்லாம் கூடிவிட்டார்கள்.
“கருவாட்டுக்காரி.. . உப்புகளத்துலயே வளர்ந்த பொம்பளப்பா.. அதான் அவனுகள உரிச்சு உப்புக் கண்டம் போட்டுடுச்சி.. .” பெரியவர் இருமிக்கொண்டே சொன்னார்.
களேபரம் அடங்குவதற்குள் சரண்யா இறங்க வேண்டிய ஸ்டேஷனே வந்துவிட்டது.
கருவாட்டுக்காரி சொன்னாள்..
“இந்தப் பரதேசிகளோட கத்தி. . . தொண்டையே வறண்டு போச்சு. . . ஆத்தா. . உடம்பெல்லாம் காய்ச்சல் வந்த மாதிரி சுடுது. . . வாய் ஒரு மாதிரி கசப்பா . . இருக்கு. . . எனக்கு ஒரே ஒரு எலுமிச்சம்பழம் வாங்கிக் குடு ஆத்தா. . .”
சரண்யா ப்ளாட்பாரத்தில் இறங்கி ஓடினாள். ப்ளாட்பாரம் நள்ளிரவிலும் பரபரப்பாக இருந்தது. ப்ளாட்பாரக்கடையில் தொங்கிக் கொண்டிருந்த பாக்கெட்டில் இருந் இரண்டு எலுமிச்சம் பழங்களை எடுத்துக்கொண்டு ஓடினாள்.
கருவாட்டுக்காரி உட்கார்ந்திருந்த இடத்தில் போய் தேடினாள். அவளைக் காணவில்லை. பெட்டி முழுக்கத் தேடினாள். . . கருவாட்டுக்கார அம்மா. . . இந்தாங்க நான் எலுமிச்சம்பழம் வாங்கிட்டு வந்திருக்கேன் அவள் கத்திக் கதறினாள்.. யாரையுமே காணோம்…
அதற்குள் சரண்யாவின் அப்பா ப்ளாட்பாரத்க்துகு வந்துவிட்டார்.
யார தேடற சரண்யா. . . ?
அவளால் எவும் பேச முடியவில்லை. முத்து மூக்குத்தி மறுபடியும் இவள் கண்களில் பளீரென மின்னியது. . .
அப்பா.. . இந்தாங்கப்பா. . . ரெண்டு எலுமிச்சம்பழம். இதை பட்டீஸ்வரம் துர்க்கையம்மன்கிட்ட சேர்த்துடுங்க அப்பா. . . அம்மன்தான் என்கிட்ட எலுமிச்சம்பழம் கேட்டுச்சி. . . என்னால கொடுக்க முடியலப்பா.. . அதுக்குள்ள ரயில் கிளம்பிடுச்சி . .சரண்யா தேம்பித் தேம்பி அழு படி நடந்ததியெல்லாம் அப்பாவிடம் சொல்ல ஆரம்பித்தாள்.

About முனைவர். ஆதலையூர் சூரியகுமார்

Avatar

மேலும் படிக்கவும்

தர்மத்தின் பாதை – 1

நம் தமிழகத்திலிருந்து, ஒரு குடும்பம், காசிக்குச் சென்று, ஏதோ ஒரு காரணத்தால் அங்கேயே தங்க நேரிடுகிறது. அது. அந்தண குலம் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன