ஞானம் பெற வழி

அந்தக் காவலாளி சொன்னதுஅதிர்ச்சியாகவும் குழப்பமாகவும்இருந்தது.

பிரம்ம ஞானம் பெறவேண்டும் என்பதற்காக தனது தந்தையின் ஆலோசனைப்படி, ஜனக மகாராஜாவைத் தேடி வந்திருந்தார் சுகமுனிவர். ஜனக மகாராஜா இல்லற ஞானி; துறவிகளால் போற்றப்படும் அரசர்.

அவரின் அரண்மனை வாயில்காவலனிடம், ‘‘சுக பிரம்ம மகரிஷி அவர்கள் வந்திருப்பதாகச் சொல்”. காவலாளி உள்ளே சென்று வந்தவன் ‘‘அவரை மட்டும் வரச் சொல் என்று அரசர் கூறியதாகக் கூறினான்.
என்னுடன் யாரும் வரவில்லை. நான் மட்டும்தான் தனியாக வந்திருக்கிறேன். ஆனால் அரசர் இவ்வாறு கூறுகிறாரே? குழப்பம் மிகுந்தது.

தான் பிரம்மச்சாரியாக இருந்து கற்ற கல்வி அனைத்தும் சூன்யமானது. சிந்தித்தார். இறைவனை அகத்திலும் நிறுத்தி வழிபாடு செய்தார். ஓரளவு புரிந்தது. ‘‘சுக பிரம்ம மகரிஷி அவர்கள் என்ற நீளத்தைக் குறைத்து ‘அவர்கள் என்ற உயர் சிறப்பு அடைமொழியை நீக்கி ‘சுக பிரம்ம மகரிஷி வந்திருப்பதாக சொல்லுங்கள் காவலரே என்றார்.

போனவன் வந்தான். சுவாமி இன்னும்தங்களுடன் மூன்று பேர் இருக்கிறார்களாம். அவர்களையும் விட்டு விட்டுவரச்சொன்னார் என்றான. ஓரளவு புரிந்தது. ‘சுக பிரம்ம ரிஷி வந்திருப்பதாகச் சொல் என்று சொல்லி அனுப்பினார். உள்ளே போய் உடனே வந்தான் காவலாளி.

‘ஐயனே..இன்னும் இருவர் உள்ளனராம் என்றான. ‘‘சுகப் பிரமம்..வந்திருப்பதாகச் சொல் என்றார்.அடுத்த கணம் உள்ளே சென்று வந்தான்.
‘‘சுவாமி… இன்னும் ஒருவர்… என இழுத்தான். எல்லாம் புரிந்தது. ‘‘அன்பனே..நான் சுகன் மட்டும் வந்திருப்பதாகச் சொல்.. எனக் கூறி காத்திருந்தார்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

ஆம்! ஆத்ம ஞானம் யாருக்கு? ‘அவர்கள்.. என்ற அடைமொழிக்கா? ‘மக என்ற சிறப்புக்கா? ‘‘ரிஷி என்பதற்கா? ‘பிரம்மம் என்பதற்கா? யாருக்கு உபதேசம்? தன் ஆன்மாவுக்குத்தானே உபதேசம். தெளிவடைந்தார்.  ஞானமூர்த்தியான ஜனகரைப் பார்க்காமலேயே ஞானத்தின் முதல்படி தெரிந்தது. 

நம்மைப் பற்றி நாமே உயர்வாக நினைக்கின்ற எண்ணம் ஆணவத்தை உருவாக்கிவிடும். ‘‘தான் என்ற அகங்காரம் மேலோங்கினால் என்னதான் உபதேசித்தாலும் ஞானம் கைவராது. அகங்காரம் நம்முள் புகாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும். காவலாளி வந்தான். வணங்கினான். ‘உள்ளே வாருங்கள்.. என்று பணிவுடன் அழைத்தான்.‘சுகன் உள்ளே நுழைந்தார்.

About admin

Avatar

மேலும் படிக்கவும்

கடவுள் எப்படி கை கொடுப்பார்?

ஆற்றின் கரை உடைப்பால், அந்தக் கிராமமே மூழ்க ஆரம்பித்துவிட்டது. எல்லோரும் வெளியேறத் தொடங்கிவிட்டனர். ஒருவன் மட்டும், “நான் உங்களைப் போல …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன