முகப்பு / மனம் மலரும் கதைகள் / கடவுள் எப்படி கை கொடுப்பார்?

கடவுள் எப்படி கை கொடுப்பார்?

ஆற்றின் கரை உடைப்பால், அந்தக் கிராமமே மூழ்க ஆரம்பித்துவிட்டது. எல்லோரும் வெளியேறத் தொடங்கிவிட்டனர். ஒருவன் மட்டும், “நான் உங்களைப் போல பயந்து ஓடமாட்டேன். நான் பக்தன்; கடவுளை நம்புகிறவன். கடவுள் என்னைக் காப்பாற்றுவார்” என்று சொல்லிவிட்டு அங்கேயே தங்கிவிடுகிறான்.

அன்று இரவு, வீட்டுக்குள் வெள்ளம் புகுந்துவிட்டது. அவன், கூரை மீது ஏறி நின்றுகொண்டு கடவுளை நோக்கிப் பிரார்த்தனை செய்தான். அப்போது, கிராமத்தினர் சிலர் படகில் ஏறி, தப்பிச் சென்றுகொண்டிருந்தனர். பக்தனைப் பார்த்துவிட்டு, “வந்து படகில் ஏறிக்கொள்; தப்பிச் சென்றுவிடலாம்” என்று அழைத்தனர். இவனோ, “வரமாட்டேன். கடவுள் என்னைக் காப்பாற்றுவார்” என்று கூறிவிடுகிறான்.

வெள்ளம் மேலும் அதிகரித்தது. கூரையும் மூழ்கத் தொடங்கியது. அருகில் இருந்த மரத்தில் ஏறிக்கொண்டான். அப்போது பக்கத்து கிராமத்தினர் அவ்வழியாகப் படகில் சென்றனர். இவனைப் பார்த்துவிட்டு அழைக்கின்றனர். “கடவுளை நம்புகிறவன் நான். அவர் காப்பாற்றுவார்” என்று சொல்லி, படகில் ஏற மறுத்துவிடுகிறான்.

மேலும் மேலும் வெள்ளம் அதிகரித்தது, மரத்தையே சாய்க்கிறது வெள்ளம். அப்போது, மீட்புக் குழுவினர் வந்து இவனைக் காப்பாற்ற முயல்கின்றனர். அப்போதும் ஏற மறுத்துவிடுகிறான்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறான். ஒரு சுழலில் சிக்கித் தவிக்கிறான். உயிருக்குப் போராடும் நிலையில், “கடவுளே…உன் பக்தன் நான். உன்னையே நம்பியிருந்த என்னை நட்டாற்றில் விட்டுவிட்டாயே….இது நியாயமா என் பக்தியில் என்ன குறை கண்டாய்?” என்று கேட்டான்.

அப்போது, அவன் முன் கடவுள் தோன்றினார். கடவுள் சொன்னார்….

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

“பக்தனே! உன் பக்தியில் குறை எதுவும் இல்லை. உன்னைக் காப்பாற்றுவதற்காக அடுத்தடுத்து மூன்று முறை படகுகளை அனுப்பினேன். மூன்று வாய்ப்புகளையும் நீதான் தவற விட்டாய்.”

About admin

Avatar

மேலும் படிக்கவும்

தர்மத்தின் பாதை – 1

நம் தமிழகத்திலிருந்து, ஒரு குடும்பம், காசிக்குச் சென்று, ஏதோ ஒரு காரணத்தால் அங்கேயே தங்க நேரிடுகிறது. அது. அந்தண குலம் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன