முகப்பு / மனம் மலரும் கதைகள் / அன்புக்குப் பணிந்த அங்குலிமாலா

அன்புக்குப் பணிந்த அங்குலிமாலா

ஷ்ரவந்தி நாட்டின் எல்லையில் உள்ள காட்டில் அங்குலிமாலா என்பவன் வசித்து வந்தான். அவன் ஒரு தேர்ந்த வழிப்பறிக் கொள்ளைக்காரன். அந்த பக்கம் பயணம் சென்றவர்களையும், தான் தங்கியிருந்த இடத்தை நெருங்கி வந்தவர்களையும் கொள்ளையடித்து கொலையும் செய்து வந்தான். அவனுக்கு அஞ்சி மக்கள் அந்த வழியே போவதையே நிறுத்திவிட்டனர்.

இந்த பெரும் கொள்ளைக்காரன் அவர்களது உடமைகளை எல்லாம் சூறையாடுவதோடு அல்லாமல் , அவர்களுடைய சுண்டு விரலை வெட்டியும் வந்தான். அந்த விரல்களை கட்டி மாலையாக கழுத்தில் அணிந்திருந்தான் அவன்.

ஒரு நாள் அங்குலிமாலா யாராவது அந்த பக்கம் வருவார்களா என்று காத்துக் கொண்டிருந்தான். அவன் கட்டி வந்த சுண்டு விரல் மாலைக்கு மேலும் சில சுண்டு விரல்கள் அவனுக்குத் தேவை பட்டது. அப்போது தொலைதூரத்தில் சந்நியாசி ஒருவர் வருவதைப் பார்த்தான். “ ஏய் !, சந்நியாசி! அங்கேயே நில்! “ என்று அவரை நோக்கி ஒடியபடியே கத்தினான். மூச்சிறைக்க அவரிடம் ஓடினான் அவன். எவ்வளவு விரைவாக ஓடியும் அவரை எட்டிப் பிடிக்க அவனால் முடியவில்லை . உடனே, ! ”ஓடாதே, நில் அங்கேயே ! “ என்று கோபத்தில் கத்தினான். அந்த சந்நியாசி வேறு யாருமல்ல. புத்த பகவானே அங்ஙனம் வந்து கொண்டிருந்தார். அவர் அமைதியாக, ”நான் அசையக் கூட இல்லை. நீதான் ஓடி வருகிறாய்என்று கூறினார். “ நீ என்ன சொல்கிறாய்? “ என்று அவரை நெருங்கிவிட்ட அவன் வியப்போடு கேட்டான். ”குழந்தாய்!, நீ இன்னும் உன் மனதிற்கு அமைதி தேட வேண்டியவனாக இருக்கிறாய்என்றார் புத்தர் கனிவுடன். “!, யாரிவன்? என்னை குழந்தை என்று அழைக்கிறானே! அங்ஙனமே என்னை நினைத்துத்தான் சொல்கிறான்என்று தனக்குள் வியந்து கூறிக் கொண்டான் அந்த திருடன்.

நான் யாரென்று உனக்குத் தெரியுமா? உன் அறிவுரை எனக்குத் தேவையில்லை. எனக்குத் தேவையெல்லாம் உன் சுண்டு விரல்தான்இடி முழக்கம் போன்ற குரலில் புத்தரைக் கேட்டான் திருடன்.

அப்படியா!, ”இதோ எடுத்துக் கொள்என்று தன் இரு கைகளையும் அவனெதிரே நீட்டினார் புத்தர்.

உன் விரல்களோடு உன் உயிரையும் பறித்துவிடுவேன்என்று மேலும் அச்சுறுத்தினான் அங்குலிமாலா. உனக்கு அது மன அமைதியை தருமென்றால் என் உயிரையும் நீ தயக்கமின்றி எடுத்துக் கொள்ளலாம்என்று பொறுமையாக பதிலுறைத்தார் புத்தர்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

அங்குலிமாலா அவன் வாழ்நாளில் அதுவரை அத்தகைய அமைதியான அன்பான ஒருவரை சந்தித்ததே இல்லை. அவரது பொறுமையும், சாந்தமும் , கருணையும், கனிவும் அவனிடத்தில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. உடனே, நெடுஞ்சாண் கிடையாக அவர் கால்களில் பணிந்தான். கண்களில் நீ சோர, “ தலைவா , இனி நான் யாரையும் கொல்ல மாட்டேன்என்று உறுதி கூறினான்.

புத்தர் அவனை வாரி எடுத்து அணைத்துக் கொண்டார். காட்டை அடுத்திருந்த ஒரு மடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த ஆனந்தபிண்டகர் என்ற துறவியிடம், இதோ மற்றொரு சகோதரர் அங்குலிமாலாஎன்று அறிமுகப்படுத்தினார்.

அடுத்த நாள் காலையில் ஸ்ரவந்தி நாட்டு மன்னன் அந்த மடத்திற்கு வந்து புத்த பகவானுக்கு தன் வணக்கத்தை தெரிவித்தான். அவனைக் கூர்ந்து பார்த்த புத்தர், “ நீ எதோ படையெடுப்புக்கு கிளம்புவது போல தெரிகிறதேஎன்று கேட்டார்.

ஆம், ஐயா!, நான் அங்குலிமாலாவைக் கண்டுபிடித்து உடன் அவனைக் கொன்றுவிடவே விரும்புகிறேன்.  நான் ஏற்றுச் செல்லும் பணிக்குத் தங்களின் மேலான ஆசிகளைப் பெற்றுச் செல்லவே இங்கு வந்தேன்என்றான் மன்னன் பணிவாக.

! அரசனே!! அங்குலிமாலா தன் கொடுரமான வழியை விட்டுவிட்டு , ஒரு துறவியைப் போல வாழ்வை மேற்க்கொண்டுவிட்டானானால் அப்போது நீ என்ன செய்வாய்என்று அரசனைக் கேட்டார் புத்தர்.

பிரபுவே!, இதிலென்ன சந்தேகம்.? அவனை நான் தலை தாழ்த்தி வணங்குவேன். ஆனால் அங்குலிமாலா ஒரு துறவியாவதை என்னால் கற்பனை செய்து கூட பார்க்கமுடியவில்லை. பிரபோஎன்று வியந்து கூறினான் அரசன்.

வா!, வந்து அந்தப் பக்கம் பார்! “ அவன் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கிறான்என்றார் புத்தர் அமைதியாக.

என்ன விந்தை இது ! “ தெய்வமே ! என் உடல் வலிமை, மன வலிமை எல்லாம் பயன்படுத்தியும் அவனை அடக்க முடியாமல் திணறினேனே! ஆனால் தாங்கள் ஒரு விரலைக்கூட அசைக்காமல் அவனை வெற்றி கொண்டுவிட்டீர்களே! உயிரினங்களை விரும்பும் கனிந்த இதயமும் அன்புடன், அமைதியுமான பாங்குடன் கூடிய புத்த பிரான் நீடுழி வாழ்க !” இங்ஙனம் பரவசமாக கிளர்ந்து கூறியவனாக அரசன் புத்தர் பிரான் திருவடிகளில் வீழ்ந்தான்

About admin

மேலும் படிக்கவும்

தர்மத்தின் பாதை – 2

“அய்யா! அது மிக சுலபம். கட்டாயம் நீங்கள் புரிந்து கொள்ளும்படியான ஒரு ஏற்பாட்டை செய்கிறேன். என்னுடன் வாருங்கள்என்று, அந்த செல்வந்தரின் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன