ஷீரடி பாபா 24

வம்புக்கு வந்த வம்பா

கோபர்கானில் உள்ள தனது வீட்டுக்கு முன் உள்ள கூடத்தில் வைக்கப்பட்டிருந்த லக்கேஜுகளை சரிபார்த்துக் கொண்டிருந்தார் பாலா சாகேப் மிரீகர்.

அவரது தந்தை மாம்பலத்தார் சர்தார் காகா சாகேப், மிரீகரைப் பொன்றே ஷீரடி பாபாவின் தீவிர பக்தர். அவர் ஊருக்கு வடக்கே உள்ள சீதலி என்ற இடத்திற்கு பயணம் செய்வதற்காக சில ஏற்பாடுகளை பாலா செய்துகொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அவருடைய அன்னை “பாலா, போகும் வழியில் நம்ம பாபாவை தரிசித்துவிட்டு போயேன்“ என்று வாஞ்சையுடன் சொன்னார். ”அம்மா, நான் முதலில் ஷீரடி சென்றுவிட்டுதான் இந்தப் பயணத்தையே தொடங்க உத்தேசித்துள்ளேன்“ என்று அன்புடன் பதிலளித்தார்.

சீதலி பயணத்தின் போது இடையில் வந்த ஷீரடியில் தனது மூட்டை முடிச்சுக்களுடன் இறங்கிக் கொண்ட பாலா சாகேப் மிரீகர், உடனடியாக மகான் சாயி தரிசனம் தந்துகொண்டிருந்த துவாரகாமயிக்கு சென்றார்.

மகான் பாபாவை மனம் குளிர தரிசனம் செய்து வணங்கிய பாலாவை ஆசிர்வதித்தபடியே, “என்ன பாலா? உன் குடும்பத்தில் அனைவரும் நலமா?“ என்று விசாரித்தார். அப்போது பாபா, பாலாவை சற்று கூர்ந்து நோக்கியபடியே “ இதோ இந்த துவாரகாமாயி இருக்கிறாளே, அவள் தாய்க்குச் சமம், எனவே தன் மடியில் அமரும் குழந்தைகள் அனைவரையும் கண்காணித்து , அவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளையும் துன்பங்களையும் தூளாக்கிவிடும் கருணை படைத்தவள் தெரியுமா” என்று கூறி பிரசாதமும் வழங்கினார்.

“வருகிறேன் பகவானே “ என, பாபாவிடம் சொல்லி வணங்கி எழுந்து நின்றார் பாலா. அவருடைய, தலையில் கைவைத்து ஆசிர்வதித்த ஷீரடி நாதன், ”என்ன பாலா, உனக்கு வம்பாவைத் தெரியுமா?” என்ன புரியலே… அதான் பாம்பு ‘ என்று தன் கைகளால் பாம்பு படம் எடுப்பது போல சைகை காட்டினார்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

பாபா ஏன் இப்போது இதனைக் கூற வேண்டும் என்று பாலா திகைத்து நின்றார். அப்போது மகான் மர்மப்புன்னகையுடன் “கவலை தவிர்! எந்த பாம்பும் துவாரகாமயிக்கு முன்பு அடங்கிவிடுமாக்கும்” என்று சொல்லி போய்வா என்று சைகை காட்டினார்.

அந்த இடத்தை விட்டு 20 அடி தூரம்தான் பாலா சென்றிருப்பார். “ பாலா, இங்கே வா !” என கை தட்டிக் கூப்பிட்ட மகான், “இதோ இந்த ஷாமாவையும் துணைக்கு அழைத்துக்கொண்டு போகலாமே உன்னுடன்” என்று ஆலோசைனை கூறினார் அருகிலிருந்த அணுக்கத் தொண்டர் ஷாமா , மறுபேச்சின்றி . உடனே புறப்பட்டுவிட்டார். தன்னிடம் ஓடி வந்த அவரிடம், “ நான் பார்த்துக்கொள்கிறேன், நீங்கள் என்னுடன் வந்தால் நீங்கள் தினசரி பாபாவுக்கு செய்யும் தொண்டுகள் யாவும் பாதிக்கப்படும்” என மறுத்துச் சொல்லவே, சுவரில் அடிக்கப்பட்ட பந்து போல மகானிடம் திரும்பி வந்தார் ஷாமா. பாலா தன்னை திருப்பி அனுப்பிவிட்ட காரணத்தைச் சொன்னார். . அதைக் கேட்ட பாபா, “ அப்படியா, எது எது எப்படி நடக்கவேண்டுமோ, அது அது அப்படித்தான் நடக்கும் “ என்று பூடகமாக சொன்னார்.

மசூதியை விட்டு சிறிது தூரம் கடந்த பாலாவிற்கு மகான் வலியுறுத்தியும் தான் ஷாமாவிடம் மறுத்தது குறித்து சற்று மன உறுத்தல் ஏற்பட்டது. மீண்டும் மசூதிக்கு வந்தார். அப்போது ஷாமா யாரிடமோ பேசிக்கொண்டிருப்பதைக் கண்டார். “ ஷாமா!, வாங்க, என்னோட பயணத்துணையா…“ என்று பாலா அழைத்தார். சற்று வியப்புற்ற ஷாமா, : “ஒரு நிமிடம், பகவானிடம் தகவல் சொல்லிவிட்டு வருகிறேன்” என்று பாபாவிடம் விரைந்தார்.

பாலாவும் ஷாமாவும்அங்கிருந்து ஒரு குதிரை வண்டியில் பயணத்தை துவக்கினார்கள். வண்டி சீதலி ஊரை நெருங்க இரவு நேரமாகிவிட்டது. வழியில் ஒரு அனுமார் கோயில் தென்படவே, அங்கு இறங்கி தரிசித்துவிட்டு ஓய்வு பெறலாம் என்று பாலா கூறினார். , ஷாமாவும் ஒத்துக்கொண்டார்.

அனுமன் தரிசனம் பெற்று, அங்குள்ள விளக்கொளியில், தான் கொண்டுவந்திருந்த புத்தகத்தை படிக்கத் தொடங்கினார் பாலா. ஷாமா சற்று தள்ளி அமர்ந்து, ஸ்லோகங்களை உச்சரிக்கத் தொடங்கினார்.

பாலா, படிக்கும் சுவாரஸ்யத்தில் தன் வேஷ்டியில் ஒரு கருநாகம் படுத்திருந்ததை உணரவோ, கவனிக்கவோ இல்லை. அப்போது அந்த பக்கம் வந்த கோயில் பணியாளர் ஒருவர், பாம்பை கவனித்துவிட்டு , “ அய்யோ , பாம்பு !” ஏன்று அலறினார். சத்தம் கேட்டு பாலா நடுங்கினார். ஷாமா திகைத்தார்., அந்த பாம்பு, படுத்திருந்த இடத்தை விட்டு சரசரவென கிளம்பத் தொடங்கியது.

பணியாளர் போட்ட கூச்சல் கேட்டு அங்குள்ள சிலர் ஓடிவந்து, தடியால் பாம்பை அடித்துக் கொன்றனர். கொடிய விஷம் கொண்ட அந்த கருநாகம் கடித்த அடுத்த கணமே மரணம் நிச்சயம். என அங்குள்ளோர் பேசிக்கொண்டனர்.

மகானின் தரிசனம் பெறுகையில் “பாம்பு குறித்து பாபா ஏன் எச்சரிக்கை செய்தார் என. அப்போதுதான் பாலா சாகேப் மிரீகருக்கும் ஷாமாவிற்கும் புரிந்தது அப்போதே கண்ணீருடன் ஷீரடி நாதனுக்கு மானசீகமாக நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

“எவர் ஒருவர் என்னிடம் பரிபூரணமாய் சரணாகதி அடைகிறார்களோ , அவரை நான் மரணத்தின் பிடியிலிருந்து விடுவிப்பேன்” என்பது மகான் ஷீரடி பாபாவின் அருளுரைகளில் ஒன்று.

About ஆரூர் ஆர் சுப்ரமணியன்

ஆரூர் ஆர் சுப்ரமணியன்
துணைக் கலெக்டராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணிக்காலத்தில் இவரது நேர்மைக்காகவும் சேவைக்காகவும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரின் பாராட்டைப் பெற்ற்றவர். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

ஷீரடி பாபா 21

ருசி பேதம். மகான் ஷீரடி பாபாவின் அதீத பக்தரான பாபு சகேப் ஜோக்குற்கு அதற்கிணையான பக்தி, மதிப்பு, பிரேமை , …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன