ஷீரடி பாபா 21

ருசி பேதம்.

மகான் ஷீரடி பாபாவின் அதீத பக்தரான பாபு சகேப் ஜோக்குற்கு அதற்கிணையான பக்தி, மதிப்பு, பிரேமை , இவற்றை அக்காலகட்டத்திலேயே ஒரு மடம் ஸ்தாபித்து வாழ்ந்துகொண்டிருந்த மகான் ஸ்ரீ ஸகாராம் மகாராஜிடமும் கொண்டிருந்தவர். அவர் அடிக்கடி ஷீரடி சென்று பாபாவை தரிசிப்பது போலவே, அந்த மடம் சென்று மகான் ஸ்ரீ ஸகாராம்ஜியியும் வணங்கி வருவார்.

ஒரு சமயம் மகான் ஸகாராமை தரிசிப்பதற்காக அவரின் இருப்பிடமான மடத்திற்கு சென்றிருந்தார் ஜோக். தான் விரும்பியவாறே நீண்ட நேரம் அந்த மகாராஜின் தரிசனம் பெற்ற மகிழ்ச்சி சூழ , அவர் மடத்தின் முன் பக்கத்தை நோக்கிச் சென்றார். இன்னும் அரை மணி நேரத்தில் அவர் அங்கிருந்து புறப்பட இருந்தார். அப்போது அவர் தற்செயலாக அவர் பார்வை அங்கிருந்த இரண்டு மாமரங்களின் மீது சென்றது. அப்போதுள்ள பருவநிலை சாதகமாக இருந்ததால் அந்த மரங்களில் கொத்துக் கொத்தாய் மாங்காய்கள் காய்த்திருந்தது.

ஜோக்கிற்கு , அப்போது , சென்ற முறை மடத்திற்கு தரிசனம் பெற வந்தபோது, ஸ்ரீ ஸகாராம் மகாராஜ்ஜி சொன்ன விஷயம் நினைவுக்கு வந்தது. அந்த மகானுக்கும் பாபாவிற்கும் முன்பே தொடர்பிருந்தால் , ஒரு முறை பாபாவும் மடத்திற்கு வருகை தந்தபோது , இரண்டு இறையடியார்களும் ஆளுக்கு ஒரு மாங்கன்றை மட வாயிற்புறத்தில் நட்டதையும் , அதன் பிரம்மாண்ட வளர்ச்சி குறித்து ஸ்ரீ ஸகாராம் மகிழ்ச்சியுடன் அந்த நாள் குறித்து தன்னுடன் பகிர்ந்து கொண்டதையும் ஜோக் அப்போது நினைவுகூர்ந்தார்.

ஜோக் அதனால் ஆவலோடு மகான்கள் நட்ட மரங்களில் இருந்து இரண்டு மாங்காய்களை பறித்து பத்திரப்படுத்திக் கொண்டார். அவர் அடுத்து ஷீரடி பயணம் மேற்கொள்ள இருந்ததால் அந்த காய்களை மகானுக்கு சமர்ப்பிக்க விரும்பினார். அவ்வூர் வீதியில் ஜோக் நடந்து வருகையில் ஏதோ சந்தேகம் ஏற்படவே, தம் பையில் உள்ள மாங்காய்களை எடுத்துப் பார்க்க , அவை பழங்களாக இன்னும் சில தினங்களாகலாம் என்பதை அறிந்தார்.

எனவே மகானை தரிசிக்கும் முன்பாக நல்ல பழுத்த மாங்கனிகள் சிலவற்றை கடைவீதில் வாங்கி அவற்றையும் மாங்காய்கள் வைத்திருந்த பையில் வைத்துக்கொண்டார் ஜோக்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

ஷீரடியை அடைந்தவுடனேயே ஜோக், பழங்கள் அடங்கிய பையுடன் மசூதி சென்று பாபாவைக் கண்டு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து, தான் கொண்டு வந்த மடத்து மாங்காய்கள், விலைக்கு வாங்கிய மாங்கனிகளை ஒரு மரத்தட்டில் வைத்து மகானிடம் சமர்ப்பித்தார். பிறகு கனியாத இரண்டு மாங்காய்களைக் காட்டி அவை ஸகாராமும் பாபாவும் மடத்தில் நட்ட மரத்தில் இருந்து பறிக்கப்பட்டது என்ற விபரத்தை ஜோக் கூற , பாபா ஆனந்தமடைந்தார்.

அப்போது ஜோக் சமர்ப்பித்த தட்டிலிருந்து , மரத்திலிருந்து அவரே பறித்த காய்களை மட்டும் எடுத்துக்கொண்டு, பக்கத்தில் நின்றிருந்த ஷாமாவிடம் அவைகளை தந்து, துண்டங்கள் போட்டு அனைவருக்கும் கொடு என்று ஆக்ஞையிட்டார். “என்ன இது ?” கனிகள் இருக்க பாபா ஏன் காய்களை துண்டுகளாக்கி அனைவருக்கும் கொடுக்கச் சொல்கிறார் என ஜோக்கிற்கு ஒரே குழப்பம்.

துண்டுகள் போடப்பட்ட மாங்காய்கள் ஒவ்வொன்றையும் பாபா, ஜோக் உள்ளிட்ட அனைவருக்கும் ஷாமாவால் பகிர்ந்தளிக்கப் பட்டது. பாபா , அத்துண்டை தம் வாயில் போட்டு ருசித்தவாறு “ஜோக் !நீர் மாந்துண்டை சாப்பிடும் !!” என உபசரித்தார். உடனே அதனை தன் வாயில் போட்டுக்கொண்ட ஜோக் , வியப்படையும் அதீத இனிப்பு சுவையாக அந்த மாங்காய் துண்டுகள் இருந்தது. அதனை சாப்பிட்ட அங்குள்ள மற்றோரும் அருமையான தித்திப்பான மாம்பழங்கள் அவை என்று ஒருமனதாக தெரிவித்தனர்.

அப்போது , குறும்பாக நகைத்த பாபா , ” என்ன ஜோக்ஜி ! மாங்காய்கள் எப்படி இனிப்பான பழங்களானது என்று யோசிக்கிறிர்களா ? ” எனக் கேட்ட போது தான் அறிந்தார் மகானின் திருவிளையாடல்களில் இதும் ஒன்று என்று.

இறையருள் பெற்ற மகான்களின் கைபட்ட கருங்கல்லும் தங்க்கட்டியாகி விடாதா என்ன !!,

About ஆரூர் ஆர் சுப்ரமணியன்

ஆரூர் ஆர் சுப்ரமணியன்
துணைக் கலெக்டராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணிக்காலத்தில் இவரது நேர்மைக்காகவும் சேவைக்காகவும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரின் பாராட்டைப் பெற்ற்றவர். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

ஷீரடி பாபா 22

ஒரு தவறு செய்தால்… பாபாவை பக்தர்கள் தரிசித்துக் கொண்டிருந்தனர். அப்போது அக்கூட்டத்திலிருந்த ஒருவர் மட்டும் மகானின் முகத்தை தன்பால் ஈர்க்க …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன