முகப்பு / மகான்கள் / பூலோக தெய்வங்கள் / மகான் ஷீரடி பாபா / ஷீரடி பாபா – 19 – விட்டோபா தந்த அதிசய தரிசனம்

ஷீரடி பாபா – 19 – விட்டோபா தந்த அதிசய தரிசனம்

காதாரா என்று ஷீரடி நாதனால் செல்லமாக அழைக்கப்படும் தார்கட் என்ற பிரமுகர்.  பாபாவின் அனுக்கத் தொண்டர்களில் குறிப்பிடத்தக்கவர். அவரது மொத்த குடும்பமும் மகான் சாய் பாபாவை வழிபடுவதும் , தரிசிப்பதும் தாங்கள் செய்த பாக்கியமாக கருதி வாழ்பவர்கள். தார்கட்டின் மனைவி அடிக்கடி ஷீரடி சென்று மகானின் தரிசனம் பெறுவதையும், அவருக்கு சேவை புரிவதையும் தன்னுடைய முக்கிய கடமையாக கொண்டிருந்தார்

இருந்தாலும் அப்பெண்மணிக்கு,  தான் சார்ந்த இந்து மதத்திலும் தீவிர ஈடுபாடு உண்டு. தன் வாழ் நாள் லட்சியமாக ஒரு முறை பண்டரிபுரம் சென்று அங்கு குடிகொண்டுள்ள சுவாமி விட்டோபாவின் தரிசனம் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். தன்னைச் சார்ந்த உறவினர்கள் நண்பர்களிடையே கூடநீங்களும் பண்டரிபுரம் சென்று விட்டோபாவின் தரிசனம் பெற்று வாருங்கள்என்று கூறிவந்தார்

எல்லா வசதிகள் இருந்தும் தார்கட் அம்மையாருக்கு பண்டரிபுரம் யாத்திரை மட்டும் ஏனோ நழுவிக்கொண்டே இருந்தது. ஒரு நாள் அவரது தத்துப் பிள்ளை ஜோதிந்திரா தார்கட்டிடம் இது பற்றி பிரஸ்தாபித்து, “ இருவரும் விட்டோபா தரிசனம் பெற பண்டரிபுரம் போகலாமாஎனக் கேட்டபோது , அவன்  நீங்கள் பாபாவின் அனுமதி பெற்று வாருங்கள். அப்போது பார்ப்போம்”  என்று கூறித் தட்டிக்கழித்துவிட்டான்.

தனது அடுத்த ஷீரடி பயணத்தின் போது இதற்கான அனுமதியை மகானிடம் பெற்று வர வென்ண்டும் என்று அம்மையார் அப்போதே தீர்மானித்துவிட்டார். அவ்வாய்ப்பு வெகு விரைவிலேயே அவருக்கு கிடைத்தது. , தரிசன நேரம் முடிந்து மகான் ஏகாந்தமாய் இருக்கையில் , தனது விட்டோபா தரிசன ஆசையை வெளியிட்டார் அந்தப் பெண்மணி. அவரை உற்றுப் பார்த்த பாபா, ”தாயே ! உனக்கு எல்லாமே ஷீரடி மட்டுமே, அனாவசிய அலைச்சல் உனக்கு ஏன்? “ என்று கூறினார். இதனால் அந்தப் பெண் பெரும் ஏமாற்றமடைந்தார்.

இருந்தும் தனது ஆசையை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. அடுத்தமுறை பாபாவை தரிசனம் செய்தபோது மீண்டும் தனது விருப்பத்தை அவரிடம் சொனார். ” விட்டோஒபா தரிசனம் பெற வேண்டும் என்பது, எனது வாழ்நாள் லட்சியம்” என்று கெஞ்சும் குரலில் பாபாவிடன் சொன்ன்னார்.  , அம்மையாரின் உறுதி நிலையை மகான் புரிந்துகொண்டு , “சரி, தாயே!, நீ பண்டரிபுர தரிசனம் பெற எந்தத் தடையும் இல்லை. உன் ஆசை நிறைவேறும்.கவலை விடு!” என்று கூறி அனுமதி தந்தார். மகிழ்ச்சியில் அப்பெண்மணியின் மனம் துள்ளியது

ஷீரடியில் இருந்து அவசரமாக தனது ஊர் திரும்பிய அம்மையார் , தன் கணவனிடமும், பிள்ளையிடமும் இந்த நற்செய்தியைச் சொன்னார்.  அவர்களும் பண்டரிபுர பயணத்தை மனமார ஏற்றுக்கொண்டனர்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

தார்கட்டிற்கு வேறு ஏதோ அவசர வேலை வந்துவிட்டதால் , மனைவியுடன் பண்டரிபுர யாத்திரைக்குத் துணையாக மகன் ஜோதிந்திராவை அனுப்பிவைத்தார்.

பண்டரிபுரத்தில் சில நாட்கள் தங்கும் அளவுக்கு அனைத்தையும் எடுத்துக்கொண்டு மறுநாளே இருவரும் பயணப்பட்டார்கள். அவ்வூரில் ஒரு அறை எடுத்துக் கொண்டு தங்கிய அவர்கள் , காலையிலேயே குளித்து , சுத்தமான ஆடைகள் உடுத்தி, பூஜைப் பொருட்களுடன் பண்டரிபுர நாதனின் ஆலயத்திற்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். பகவான் தரிசனம் பெறும் வரை நீர் கூட அருந்தக் கூடாது என்று அந்தப் பெண்மணி உறுதி பூண்டிருந்தார்

தரிசன வேளையில் ஆலய அர்ச்சகரை சந்தித்த அம்மையார் புனித கருவறைக்குள் சென்று விட்டோபாவை பூஜிக்க வேண்டும் என்ற தன் தீரா ஆசையை வெளிப்படுத்தினார். கோயில் மரபுப்படி உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது என்று நிர்தாட்சன்யமாக மறுத்துவிட்டார். அப்பெண்மணி மானசீகமாக அந்தக்கணமே ஷீரடி நாதனை துதித்து வேண்டினார். அதற்கு கை மேல் பலன் கிடைத்தது. , சற்று நேரத்திற்கெல்லாம் பெண்மணியிடம் திரும்பி வந்தார் அர்ச்சகர். இதற்கான அனுமதியை ஆலய நிர்வாகத்திடம் தான் பெற்றுவிட்டதாக கூறினார்.  அம்மையார் மகிழ்ச்சியடைந்து,  மகன் ஜோதிந்திராவுடன் விட்டோபா குடி கொண்ட புனித கருவறைக்குள் சென்று , பூஜிக்கத் தொடங்கிவிட்டார். எவருக்கும் சுலபத்தில் கிடைக்காத அரிய வாய்ப்பு இது.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு நிதானமாக பூஜையை நடத்தினார் தார்கட் அம்மையார். பூஜையின் நிறைவாக பூ மாலையை விட்டோபாவுக்கு சூட்டும் நேரமும் வந்தது. அம்மையார் உருவத்தில் சற்று குள்ளமாக இருப்பார். அதனால் பகவானுக்கு மாலை சூட்ட எட்டவில்லை.  “ சரி , இறைவன் அமர்ந்திருந்த பீடத்தில் கால் வைத்து மாலை போடலாம் என்றால் , அது புனிதக் குறைவாகும் என்பதால் அர்ச்சகர் அதற்கு அனுமதிக்கவில்லை

இப்போது என்ன செய்வது? மாலையை இறைவன் கழுத்தில் போட்டால்தான் அம்மையார் கொண்ட நீண்ட நாளைய விருப்பப்படி பூஜை முற்று பெற்றதாக அர்த்தம். திகைத்து நின்ற அவர், உடனிருந்த தன் மகன் கொடுத்த யோசனையின் படி அங்கு நின்றவாறே மகான் ஷீரடி நாதனை கண் மூடித் துதிக்கத் தொடங்கினார். மீண்டும் சில நிமிடங்கள் சென்றன. எதோ குதிக்கும் சப்தம் அம்மையார் காதில் கேட்கவே, சடென்று அவர் கண் விழிக்க, அச்சரியமும் பரவசமும் அடையும் வகையில் பகவான் விட்டோபா சிலையே, எதிரே நின்று கொண்டிருந்தது. உடனே மெய் சிலிர்க்க தன் கையில் வைத்திருந்த மாலையை பகவான் கழுத்தில் சூட்டினார் அந்த அம்மையார். அடுத்த கணம் அந்த புனித இறை சிலை அங்கிருந்தே ஒரு குதி குதித்து , தனது பீடத்தை மீண்டும் அடைந்தது.  அணிவிக்கப்பட்ட மாலை ஜொலிக்க , பழைய நிலையில் காட்சி தரத் தொடங்கியது. இந்த நிகழ்வு தார்கட் அம்மையார், ஜோதிந்திரா மட்டுமல்ல, ஆலய அர்ச்சகர்கள், பக்தர் கூட்டம் என அங்கிருந்த அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது. அனைவரும் ஒரே குரலில்விட்டோபா கி ஜெய் !” என பல முறை கோஷமிட்டனர். அதன் பிறகு அர்ச்சகர்களும் பக்தர்கள் பலரும் அம்மையாரை நமஸ்கரித்து ஆசி வேண்டினர்

தனது லட்சிய ஆசை நிறைவேறிய மன நிறைவுடன் ஊர் திரும்பிய தார்கட் அம்மையார், அடுத்த நாளே , இவ்வாறு அற்புத நிகழ்ச்சிகள் நடத்தக் காரணமான பகவான் பாபாவிற்கு நன்றி கூற ஷீரடி புறப்பட்டார்

மகான் பாபாவை தார்கட் அம்மையார் நமஸ்கரித்து பண்டரிபுர அற்புதத்தை கூற முற்படும் முன்பே , பாபாவே , “ தாயே !, விட்டோபாவின் அற்புத தரிசனம் எப்படி ? “ என புன்முறுவலோடு கேட்க, அவர்ஆண்டவனே ! தங்கள் கருணையால் அல்லவா எனக்கு விட்டோபா வித்தியாசமாக அருளினார். ” என பதில் கூறும்போதே , அவருடைய கண்கள் நீரைச் சொரிந்தன. குரல் தழுதழுத்தது. ” தாயே !. அல்லா மாலிக் !!” எனச் சொல்லி மகான் அவருக்கு உதி பிரசாதம் அளித்து ஆசிர்வதித்தார்

கடவுளின் அருளின்றி என்னால் எதையும் செய்ய இயலாது

About ஆரூர் ஆர் சுப்ரமணியன்

ஆரூர் ஆர் சுப்ரமணியன்
துணைக் கலெக்டராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணிக்காலத்தில் இவரது நேர்மைக்காகவும் சேவைக்காகவும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரின் பாராட்டைப் பெற்ற்றவர். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

ஷீரடி பாபா 22

ஒரு தவறு செய்தால்… பாபாவை பக்தர்கள் தரிசித்துக் கொண்டிருந்தனர். அப்போது அக்கூட்டத்திலிருந்த ஒருவர் மட்டும் மகானின் முகத்தை தன்பால் ஈர்க்க …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன