முகப்பு / மகான்கள் / பூலோக தெய்வங்கள் / மகான் ஷீரடி பாபா / ஷீரடி பாபா -18 -வித்தியாசமான மருத்துவர்

ஷீரடி பாபா -18 -வித்தியாசமான மருத்துவர்

சார் ! சார் ! மிஸ்டர் பிள்ளை!”

பிள்ளை என்பவரின் வீட்டில் வாசற்புறம் நின்று கொண்டு அவருடைய நெருங்கிய நண்பர் தீட்சித் உள் நோக்கி குரலெழுப்பினார். ஷீரடி மகானின் திவிர பக்தரான அவர் அடிக்கடி ஷீரடி சென்று பாபாவை தரிசிக்கும் பழக்கமுடையவர்.

சில நாட்களுக்கு முன்னால் , பிள்ளையின் உடல்நிலை குறித்து விசாரிக்க வந்திருந்த தீட்சித் , தற்போது அவர் உடல்நிலை என்னவென்பதை அறிந்துகொள்ளவே மீண்டும் வந்திருந்தார்.

தீட்சித்தின் குரலை கேட்டுவிட்ட அவ்வீட்டுப் பணியாள் விரைவாக வெளியே வந்து அவரைப் பார்த்துவிட்டுகும்பிடுறேங்க!… வாங்கவாங்கஎசமான் உள்ளே ரூமிலே படுத்திருக்காருஎன சொல்லிவிட்டு, வந்தவரை மரியாதையுடன் பிள்ளை படுத்திருந்த அறை பக்கமாக அழைத்துச் சென்றான்.

தன் நெருங்கிய நண்பர் அறைக்குள் நுழைந்ததை பார்த்துவிட்ட பிள்ளை, தன் உடல்நிலையைக் கூட பொருட்படுத்தாமல் மெல்ல படுக்கையில் இருந்து எழுந்தவாறே, “ குட் மார்னிங் ! “ என பலகீனக் குரலில் வரவேற்றார். அதைக் கண்டு பரபரப்பான நண்பர்மிஸ்டர் பிள்ளை !, நீங்க எழுந்திருக்க வேண்டாம்நமக்குள் ஏன் இந்த சம்பிரதாயம் எல்லாம்என தடுத்தார்

இப்ப எப்படி இருக்கீங்க?”

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

என்னத்த சொல்றது? என்னத்த சொல்றதுகொஞ்ச நாளா இந்த நரம்பு சிலந்தி வியாதி என்னைக் கெட்டியாக பிடிச்சிக்கிட்டு விடமாட்டேன்னு அடம்பிடிக்குது. எத்தனையோ வைத்தியம் பார்த்தாச்சு. ஒண்ணும் பிரயோசனம் இல்லை. இதுக்கு முன்னாடி உங்களுக்கே தெரியும், நான் அடிக்கடி ஷீரடி போய் பாபாவை தரிசனம் பண்ணுவேன். அந்த மகான் வாத்சல்யத்தோடஎன்ன பாவ்!, என்று கூப்பிடும் அழகே தனி…” ம்இந்த பாழா போன வியாதி என்னை எங்கேயும் போக விடாம பிசாசு போல பிடிச்சிட்டு தொங்குது. சீக்கிரம் செத்துட்டா கூட நல்லதுன்னு தோணுது. “ என விரக்தியாக பதிலளிக்க , அவரை தீட்சித் சமாதானம் செய்ய முயன்றார்.

கவலைபடாதீங்க மிஸ்டர் பிள்ளை, ஏதோ தற்காலிகமாக உங்க நேரம் சரியில்லைஅவஸ்தை பட்டுகிட்டு இருக்கீங்கஎல்லாம் கொஞ்ச நாள்தான். நம்ம பாபாவை வேண்டிக்கிங்கநல்லபடியா சரியாகிடும். தைரியத்தை இழக்கவேண்டாம். நான் இன்று மாலை ஷீரடிக்கு புறப்படுகிறேன்” என்றார்.

அப்படியா! “ என ஆனந்தத்துடன் சொன்ன பிள்ளை, “ நண்பரே!, தரிசனம் பண்ணும் போது என்னோட வேதனைகளை மகானிடம் தயவு செய்து எடுத்துச் சொல்லுங்க. ஷீரடியிருந்து வந்தபின் மகான் தந்த உதி பிரசாதம் கொண்டுவந்து கொடுங்க,!” என அன்புடன் கோரிக்கை வைத்தார்.

அப்படியே செஞ்சுடுறேன்என தீட்சித் வாக்குக் கொடுத்துவிட்டு , சற்று நேரம் பிள்ளைக்கு தைரியமூட்டும் வார்த்தைகளை கூறிவிட்டு ,அவரிடம் விடைபெற்றார். பிள்ளையின் அப்போதைய மோசமான உடல்நிலை உண்மையிலேயே அவருக்கு மிகுந்த மனக்கலக்கத்தை அளித்தது.

தீட்சித் மறுநாள் மகான் பாபாவை தரிசனம் செய்துவிட்டு, அவரிடம் பிள்ளையின் பாதிக்கப்பட்ட உடல்நிலை குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.  உன்னிப்பாக கேட்டுக் கொண்ட மகான்என் பாவ் நீண்ட நாள் வாழ்வான்! அவனைக் கைவிட மாட்டேன். உடனே யாரையாவது அனுப்பி பிள்ளையை சுமந்துகொண்டு இங்கு வர ஏற்பாடு நடக்கட்டும்என அக்ஞையிடவே, அதனை செயல்படுத்த தீட்சித் உடனே அங்கிருந்து புறப்பட்டார்.

சில மணி நேரங்களில் எல்லாம் உடல் முழுதும் மருந்து தடவி கட்டு போட்ட நிலையில் இருந்த பிள்ளையை சிலர் தூக்கிக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தார்கள். மசூதியில் தன் இருக்கையில் வீற்றிருந்த பாபா , அதிலிருந்து எழுந்து நேரே பிள்ளையிடம் சென்றுஎன் அருமை பாவ்!, எதற்கும் கவலை வேண்டம். உன் முன் வினை உன்னை பற்றியிருக்க, அப்பாவம் தீர்க்க அவஸ்தைபடுகிறாய். கடவுளிடம் உன்னை முழுமையாக சரண்படுத்திக்கொள். உனக்கு இப்போது தேவை இறை நினைப்பும் பொறுமையுமே!’ என கருணையுடன் கூறினார். இதனால் சற்று மன தைரியம் பெற்ற பிள்ளை மிக சிரமப்பட்டு மகானை வணங்கினார்.

பிறகு தீட்சித்தை அருகில் அழைத்த மகான், “ உடனே பிள்ளைக்கு போட்டுள்ள கட்டுகளை அகற்றச் சொல்லும். “ என உத்தரவு கொடுத்துவிட்டு பாவ்!, உன் தீராத வியாதியை ச்க்கீரமா ஒரு காக்கை கொத்தி குணமாக்கும் …” காக்காய் கொத்தினா இந்த காயம் பரவியுள்ள உடல் இன்னும் மோசமாகாதா ? என அங்குள்ள மற்றவர் அனைவரும் திகைத்தனர்.

பாபா, பிள்ளையை தன் இருக்கையில் இருந்து அகற்றச் சொல்லி , அவரை கீழே அமர வைக்க ஆணையிட , அதன் படியே செய்யப்பட்டது. இப்போது பிள்ளை மசூதி சுவரில் தலையை சாய்த்து அமர்ந்து தனது இரண்டு புண் உள்ள கால்கலையும் வசதியாக நீட்டிக்கொண்டார்.

என்ன, அப்துல் வரும் நேரமாச்சேஇன்னும் வரலையா ?” என கேட்டுக் கொண்டிருக்கும் போதே மகானின் தீவிர பக்தனான அப்துல்வந்துவிட்டேன் ஐயனே!” என உள்ளே நுழைந்து அவரை வணங்கிவிட்டு தன் பணியை ஆரம்பித்தார். தினசரி மசூதிக்கு வந்து அதனை சுத்தம் செய்துவிட்டு, அங்குள்ள விளக்குகளை சுத்தப்படுத்தும் பணியும் அவருடையதாக இருந்தது.

சற்று நேரத்திற்கெல்லாம் ஒவ்வொரு வேலையாக முடித்துக் கொண்டே வந்த அப்துல், அங்கே நடந்து வருகையில் , கீழே அமர்ந்து காலை நீட்டிக் கொண்டிருந்த பிள்ளையின் கால்களை பார்க்காது மிதித்துவிட்டார். அதனால் மிகுந்த வலியோடு பிள்ளைஐயோ !” என அலற , அப்துல் உள்ளிட்டோர் அதிர்ச்சியாகிவிட்ட்னர். அப்போது அவர்கள் கண்ட காட்சி இது தான்

நோயாளி பிள்ளையின் மிதிபட்ட கால்களிலிருந்து வேகமாக சீழ் வெளிப்பட , அதிலிருந்து எழு சிலந்திகள் கலந்து பூமியில் விழுந்தன. வலி கொடுத்த வேதனை தாங்காமல்அய்யயோஎன ஓலமிட தொடங்கினார். பிறகு மகனிடம் , “ பாபா ! என் நோய் தீர்க்க ஏதோ காக்கை வரும் என்றீர்களேஅது எப்போது தான் வரும் “? என ஈனஸ்வரத்தில் கேட்டார்.

என்ன பாவ்? நீ இன்னும் இங்கு வந்த காக்கையை பார்க்கவில்லையா? உன் காலை மிதித்தானே அப்துல் , அவன் தான் நான் சொன்ன காக்கை!. இனி உனக்கு எந்த வைத்தியமும் தேவையில்லை. வாடாவுக்கு சென்று ஓய்வெடு. அது போதும். “ என பரிவுடன் கூறிவிட்டு பிள்ளையை அங்கிருந்து வாடாவுக்கு அழைத்துச் செல்ல ஆக்ஞையிட்டார்.

மறுநாளில் இருந்து பிள்ளையை அவரது உறவினர்கள் மசூதிக்கு அழைத்துவர , கால்களில் மிதிபட்ட புண்ணிலிருந்து மகான் பாபாவின் உத்தரவுப்படி உதீ பூசப்பட்டது. அனைவரும் வியக்கும்படி , பல மாத காலமாக பிள்ளைக்கு தொல்லை தந்துகொண்டிருந்த சிலந்தி வியாதி குணமாகிவிட்டது. அதுவும் பத்தே தினங்களில்!.

பிள்ளை ஷீரடி மகானிடம் விடைபெறுகையில், அவர் பிரசாதமளித்து விட்டு குறும்புச் சிரிப்புடன் , மசூதி சுவரில் தற்செயலாக வந்து அமர்ந்த காக்கையைக் காட்டிஇதை மறந்துவிடாதே !” எனச் சொல்ல, அனைவரும் சிரித்தனர்.

About ஆரூர் ஆர் சுப்ரமணியன்

ஆரூர் ஆர் சுப்ரமணியன்
துணைக் கலெக்டராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணிக்காலத்தில் இவரது நேர்மைக்காகவும் சேவைக்காகவும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரின் பாராட்டைப் பெற்ற்றவர். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

ஷீரடி பாபா 22

ஒரு தவறு செய்தால்… பாபாவை பக்தர்கள் தரிசித்துக் கொண்டிருந்தனர். அப்போது அக்கூட்டத்திலிருந்த ஒருவர் மட்டும் மகானின் முகத்தை தன்பால் ஈர்க்க …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன