மகா அவதார் பாபாஜி-3

ங்கோதூரத்தில் தெரிந்த பிரகாசமான ஒளியை நோக்கி இருவரும் நடக்க ஆரம்பித்தனர். அருகில்நெருங்கநெருங்ககண்களைகூச வைக்கும்அளவிற்கு வெளிச்சம் கூடிக்கொண்டேபோனது
இறுதியாய் கண் முன்னே ஜொலித்துக்கொண்டிருந்த அந்தத் தங்கமாளிகைக்குள் நுழைந்தனர்.
லாஹிரி மகாசாயர் அம்மாளிகையை பிரமிப்பாய் பார்த்தார். ஒவ்வொரு இடமும் தங்கம் தங்கம்.
“என்ன அப்படி பார்க்கிறாய்! இம்மாளிகை உனக்குத்தான். சென்ற பிறவியில் தங்கத்தால் ஆன மாளிகையில் வசிக்க விரும்பினாய். அது நிறைவேறவில்லை. தற்போது அதை நிறைவேற்றி பிறவிப் பெருங்கடலிலிருந்து உன்னை மீட்டெடுக்கப் போகிறேன்.” மாளிகையின் மத்தியில் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த பாபாஜி கூறினார்.
அவரை விழுந்து வணங்கினார் மகாசாயர். பாபாஜி தொடர்ந்தார்.
“கிரியா யோகத்தை உனக்கு போதிப்பதன்மூலம் தீட்சை அளிக்கிறேன். இதனால்உலக பந்தங்களிலிருந்து நீ விடுபடுவாய். இக்கிரியா யோகத்தை மற்றவர்களுக்கும் போதிக்கவேண்டும்.” என்றவாறே கைகளை உயர்த்தி தரையில் சக்தியை பாய்ச்சினார். உடன் அவ்விடத்தில் ஒரு ஹோம குண்டமும்அதற்கு தேவையான பொருட்களும் வந்துசேர்ந்தன.விடியும்வரைதொடர்ந்து தீட்சைக்கான சடங்குகள் நடந்தேறின. பொழுது புலரும் சற்று நேரத்திற்கு முன்பாக அனைத்தும் முடிந்து மகாசாயருக்கு தீட்சை வழங்கினார் பாபாஜி.
“லாஹிரி… சில நொடிகளுக்கு உன் கண்களை மூடிக்கொள்…” கட்டளையிட்டார் பாபாஜி.
மீண்டும் லாஹிரி மகாசாயர் கண்களை திறந்தபொழுது தங்கமாளிகை மாயமாகியிருந்தது. பழைய இடத்திற்கே அனைவரும் திரும்பியிருந்தனர்.
“நேற்றிலிருந்துநீ ஒன்றும் சாப்பிடாமல் இருக்கிறாய். என்னநினைக்கிறாயோ அதை இந்த மண்சட்டிக்குள் இருந்து எடுத்து சாப்பிடு” மண்பாத்திரம் ஒன்றை நீட்டினார் பாபாஜி.
மகாசாயர் மனதில் நினைத்த பண்டங்கள் அனைத்தும் அதில் நிரம்பியது. எடுக்க எடுக்க உணவுப்பொருட்கள் வந்துகொண்டே இருந்தன. வயிறு நிரம்ப சாப்பிட்டுவிட்டு “தண்ணீர் வேண்டும்” என்றார்.
மண் பாத்திரம் நீரால் நிரம்பியது. அதைக்குடித்து முடித்த மகாசாயரின் தலையில் கைவைத்து நிர்விகல்ப சமாதியை அளித்தார் பாபாஜி. இதனால்ஏழு நாட்கள் மனம் முழுவதும் ஆன்மிகத்தில் லயித்து ஆனந்த பெருவெள்ளத்தில் மூழ்கி கிடந்தார் லாஹிரி மகாசாயர். எட்டாவது நாள் தன்னிலைக்கு வந்தவர் பாபாஜியிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார்.
“உங்களுக்கு சேவகம் செய்துகொண்டு நான்இங்கேயே தங்கிவிடவேண்டும்…”
“தவறு லாஹிரி… வழக்கமானஉனது பணிகளுக்கிடையே கிரியா யோகத்தை பரப்புவதே உனக்கான கட்டளை. என்னைவிட்டு பிரிகிறோமே என வருந்தாதே. நீஎப்பொழுது அழைத்தாலும் நான் வருவேன். போய் வா…” வழியனுப்பி வைத்தார் பாபாஜி.
தன் அலுவலகம் வந்து சேர்ந்தவருக்கு, மீண்டும் பழைய இடத்திற்கே மாறுதல் செய்யப்படுவதாக கடிதம் வந்திருந்தது. சொந்த ஊருக்கு புறப்பட்டார் லாஹிரி மகாசாயர். அதன்பிறகுதகுதியானவர்களுக்கு கிரியா யோகத்தை கற்றுக்கொடுத்து நல்வழிப்படுத்தினார். பலமுறை அவரின் முன்னால் தோன்றிய பாபாஜி, எப்பொழுதும் மகாசாயரின் உடன் இருப்பதை உறுதி செய்துள்ளார்.
லாஹிரி மகாசாயரின் முக்திக்கு பின்னர், அவரது சீடர் யுக்தேஷ்வர் கிரியாலும், இவரின் சீடர் யோகானந்தராலும் கிரியா யோகம் வழிவழியாக அனைவருக்கும் போதிக்கப்பட்டு வருகிறது.
இதேமாதிரிசென்ற நூற்றாண்டில் நடந்த சம்பவம் இது…
தமிழ்நாட்டில் கோட்டை போல் வீடுகட்டி வாழ்ந்துவரும் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தை சேர்ந்தவர் எஸ்.ஏ.ஏ.ராமையா. சென்னை பல்கலைக்கழகத்தின் நிலவியல் பட்டதாரி. தனது மேற்படிப்பு சம்மந்தமாக அமெரிக்கா சென்றவரை எலும்புருக்கி நோய் தாக்கியது.
நோயின்கடுமையால் மிகவும் அவதிப்பட்டார். மேலும் அருகிலிருந்து கவனித்துக்கொள்ள ஆட்கள் இல்லாததால்கவலை வேறு உடலை உருக்கியது.
ஷீரடி பாபாவின் மீது பக்தி கொண்டிருந்த ராமையாவுக்கு, சாய்பாபா ஒரு தினத்தில் காட்சிகொடுத்தார். ‘மகா அவதார் பாபாஜியை வணங்கு’மாறு சொல்லிவிட்டு மறைந்தார். அதன்படி வணங்கிவர, அவரது உண்மையான பக்தியை பாராட்டி அவரின் முன் தோன்றினார் பாபாஜி. அன்றிலிருந்து அவரின் தீவிர பக்தராகிப்போனார் ராமையா.
இதற்கிடையே நோயின் தாக்கம் அதிகரித்தது. ராமையாவால் தாங்கமுடியாத அளவு வலியும் வேதனையும் கூடியது. இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தவராய் தற்கொலைக்கு முயன்றார் ராமையா.
அப்பொழுது ஒரு குரல்…
“என்னை நம்பிவிட்டு தற்கொலைக்கு முயல்வதா? இனி உன் நோய் எனதே…” என்றது.
ராமையா தற்கொலை எண்ணத்தை கைவிட்டார். அடுத்த நாளே அவரது நோய் குணமானது. தீவிரஎலும்புருக்கி நோய் திடீரென காணாமல் போனது கண்டு மருத்துவர்கள் வியந்தனர்.
பாபாஜியின் முழுமையான அருளே தன்னை குணமடையச் செய்தது என்பது ராமையாவிற்கு புரிந்தது.
அன்று இரவு கனவில் தோன்றினார் பாபாஜி. கால்களை நொண்டிக்கொண்டே நடந்தவரிடம் கேட்டார் ராமையா “என்ன ஆனது? ஏன்நொண்டுகிறீர்கள்?”
“உனது நோயை நான் தற்காலிகமாக வாங்கிக்கொண்டுள்ளேன்” என்று சொல்லி மறைந்தார்.
இவரைப்போலவேஜவஹர்லால் நேருவின் நண்பரான டாக்டர் வி.டி.நீலகண்டனுக்கும் பல சுவாரஸ்யமான அனுபவங்கள்ஏற்பட்டுள்ளன. அவருக்குஉண்டான பல உடல் உபாதைகளை பாபாஜி குணப்படுத்தினார்.
பாபாஜிபற்றியஇவரதுமூன்றுபுத்தகங்களில், தனக்கு நேர்ந்த அனுபவங்களை விளக்கியுள்ளார்.
ராமையாவும், நீலகண்டனும் இணைந்து‘கிரியா யோக சங்கம்’ ஒன்றை நிறுவினர். இதன்மூலம் கிரியா யோகத்தை உலகம் முழுதும் பரப்பத்தொடங்கினர்.
ஒருமுறை நீலகண்டன் வீட்டிலும், மற்றொருமுறை ராமையா வீட்டிலும் நேரில் தோன்றி அருள் வழங்கியிருக்கிறார் பாபாஜி.
இவர்களுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கபீர்தாசர், பாபாஜியிடம் தீட்சை பெற்றிருக்கிறார். ஆதிசங்கரரின் யோக தீட்சை குருவாக மகா அவதார் பாபாஜி இருந்துள்ளார். இதுகுறித்து தனது முதன்மை சீடரான லாஹிரி மகாசாயரிடம் அவர் தெரிவித்துள்ளார்.
பாபாஜி, கிருஷ்ணரின் அவதாரம் என்பது பரமஹம்ச யோகானந்தரின் கருத்து. பல மகான்களுக்கும், கிருஷ்ண ரூபத்தில் காட்சி கொடுத்திருக்கிறார் பாபாஜி.
முழு நம்பிக்கைவைத்து அவரை வணங்கிவர, வாழ்க்கையில் தீராத கஷ்டங்களும், குணமாகாத நோய்களும் தீர்ந்துவிடுவதாக பாபாஜியின் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். தற்போதைய காலகட்டத்தில் சொரூபமாய் காட்சி கொடுக்கவில்லைஎன்றாலும், சூட்சும ரூபத்தில் பாபாஜி வருவதாக தெரிவிக்கின்றனர்.
“எவர் ஒருவர் தூய்மையுடனும், ஒருமுகப்பட்ட மனதுடனும் பாபாஜியின் பெயரை உச்சரிக்கிறாரோ, அவருக்கு மகா அவதார் பாபாஜியின் அருளாசி முழுமையாய் கிட்டும்” என்கிறார் அவரது முதன்மை சீடர் லாஹிரி மகாசாயர்.
அதற்கேற்ப மகா அவதார் பாபாஜியை உண்மையான பக்தியோடு வழிபடுவோம். அவரருள் பெறுவோம்.
—————————————————————————————————————————————–
பாக்ஸ் நியூஸ்:
பாபாஜியின் குகை உத்தரகாண்ட் மாநிலத்தில் தோணகிரி மலையில் குகுசினா கிராமத்தில் உள்ளது. இங்கு செல்வதற்கு, டெல்லியிலிருந்து290 கி.மீ. தொலைவிலுள்ள கத்கொடம் எனும் ஊருக்கு ரயிலில் பயணம் செய்யவேண்டும். இங்கிருந்து141 கி.மீ. தொலைவிலுள்ளதுவாரஹட் என்ற இடத்தை ராணிகேத் வழியாக அடையலாம். இதற்கு கார், ஜீப் மற்றும் பேருந்துகளில் செல்லலாம். துவாரஹட்டிலிருந்து2௦ கி.மீ. தொலைவிலுள்ள குகுசினாவிற்கு செல்ல கார் அல்லது ஜீப்புகள் கிடைக்கும். இவ்விடத்திலிருந்து நடைபயணத்தை ஆரம்பித்தால் சுமார் ஒரு மணி நேரத்தில் பாபாஜியின் குகையை அடையலாம்.
—————————————————————————————————————————————–

About சரவணக்குமார்

சரவணக்குமார்
வங்கி ஊழியரான சரவணக்குமார், எழுத்தாற்றல் மிக்கவர். ஆரம்பகாலத்தில் சிறுசிறு பத்திரிகைகளில் எழுதிவந்தார். இவரது எழுத்தாற்றலைக் கண்டு, முன்னணி பத்திரிகைகள் பலவும் இவருக்கு அழைப்பு விடுத்தன. மேலும் அறிய

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன