முகப்பு / இறைத்தமிழ் இன்பம் / இன்றோ, நாளையோ, நிச்சியமாக நல்லதே நடக்கும் ! – பாசுரம் 18

இன்றோ, நாளையோ, நிச்சியமாக நல்லதே நடக்கும் ! – பாசுரம் 18

ராமுவிற்கு பாட்டிமீது பரம விசுவாசம். பரீட்சைக்கு, இண்டர்வியுவிற்கு எதுவானாலும் பாட்டியைச் சேவிக்காமல் போகமாட்டான். ‘இன்னைக்கு இண்டர்வியுவிற்குப் போறேன் பாட்டி’ என்று சேவித்தான். ‘மகராஜனாகப் போய்விட்டு வா ! ‘ என்று ஆசிர்வதித்து அனுப்பினாள் பாட்டி. இரண்டு நாட்கள் கழித்து ரிஸல்ட் வந்தது – ‘நாட் ஸெலக்டட்’. ஒருமாதம் கழித்து வேறு ஒரு நேர்முகத் தேர்வு. பாட்டியை வணங்கி ஆசி பெற்றுச் சென்றான். வெற்றி கிடைக்கவில்லை. மூஞ்சியைத் தூக்கிக்கொண்டு பாட்டி முன் நின்றான்.

’போடா ! கப்பல் கவிழ்ந்தாற்போல் ஏன் சோகமா இருக்கே ! இப்படித்தான் அப்துல்கலாம் தனக்குப் பிடித்த பைலட் வேலை கிடைக்கவில்லை என்ற போது, ரிஷிகேசில் சுவாமி சிவானந்தா முன் நின்றார். ‘நீ உடனே டெல்லிக்குப் போ! உனக்கான வேலை காத்திருக்கிறது ! ‘ என அறிவுறுத்தி டெல்லிக்குச் திரும்பச் சொன்னார் சிவானந்தா! கலாம் வாழ்க்கைப் பாதையையே மாற்றிய DRDO வேலை கிடைத்தது. ஒழுங்காக சந்தியாவந்தனம் எல்லாம் பண்றயோ ! அது பண்றவரை உனக்கு ஒரு குறையும் இல்லை போடா !’ என்று தைரியம் கொடுத்தாள் பாட்டி.
மூன்று மாதம் கழித்து மறுபடியும் ஒரு இண்டர்வியு. பாட்டியை சேவித்து ஆசி கோரினான். ‘ஏண்டா ! நானும் ஒவ்வொரு முறையும் அட்சதை போட்டு ஆசிர்வாதம் பண்ணுகிறேன் ! அந்த குருவாயுரப்பன் இந்தத் தடவையாது என் பேரனைக் கண் திறந்து பார்க்க வேண்டும், என்றாள். மூன்று வாரம் கழித்து, ‘பாட்டி வேலை கிடைச்சிடுத்து முப்பதினாயிரம் சம்பளம் !’ என்று கூவிக்கொண்டே வந்தான் ராமு.” குருவாயூரப்பன் கண் திறந்துட்டான். அவன் கைவிடமாட்டான்…போய் பெருமாள் சந்நிதி முன்னால் வைத்து சேவி ‘ என்றாள் பாட்டி.

திருமழிசை ஆழ்வார் என்ன சொல்கிறார் ?

இன்றாக நாளையேயாக இனிச்சிறிது

நின்றாக நின் அருள் என்பாலதே — நன்றாக

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

நான் உனை அன்றி இலேன் கண்டாய்* நாரணனே

நீ என்னை அன்றி இலை.

நான்முகன் திருவந்தாதி (7)

நாராயணா ! உன்னுடைய கிருபை முழுவதும் என்பாலதே ! அந்தக் கிருபையின் வெளிப்பாடு இன்றேயாக இருக்கலாம் ! நாளையாகவும் இருக்கலாம் ! இன்னும் சிறிது காலம் ஆகலாம் ! எப்போது என்பது விஷயமே இல்லை ! கட்டாயம் நல்லது நடக்கும் ! சர்வநிச்சியமாக, உன்னை விட்டால் எனக்கு வேறு புகல் கிடையாது ! உமக்கும் என்னைவிட்டால் வேறு யார் இருக்கிறார்கள் ?
நீ சேஷி! நான் சேஷபூதன்! நீ ஆண்டான்! நான் அடிமை ! இந்த உறவு யுகயுகமாய்த் தொடர்கிறது ! நீ இன்றி நான் இல்லை! நான் இன்றி நீ இல்லை!

கடமையைச் செவ்வனே செய்க! கட்டாயம் நாரணன் நல்லதைச் செய்வான்!

ஆழ்வார் திருவடிகளே சரணம் !

About டாக்டர் லக்‌ஷ்மிநரசிம்மன்

டாக்டர் லக்‌ஷ்மிநரசிம்மன்
நரம்பியல் நிபுணரான இவர், சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள நரம்பியல் துறையின் இயக்குனராகப் பதவி வகிக்கிறார். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

சிவன் விளையாடல் – 9

வேல் பெற்ற உக்கிர குமார பாண்டியன் பாரதத்தை புகழ்ந்து பாடும்போது, சுந்தரம் பிள்ளை நீரால் சூழப்பட்ட இந்த உலகிற்கு அழகு …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன