முகப்பு / இறைத்தமிழ் இன்பம் / எல்லாம் அவனது ! – பாசுரம் – 16

எல்லாம் அவனது ! – பாசுரம் – 16

தொள தொள காவி ஜிப்பா; காவி வேட்டி; நீண்டு , சுருண்ட தலை முடி; அடர்த்தியான தாடி. . வந்தவரை உற்றுப் பார்த்தார், யார் கேட்டாலும், கொடுத்து உதவும் தனிகரான வீட்டுத் தலைவர். ‘உள்ளே வாருங்கள் . உட்காருங்கள்; அடியேன் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் ?’ என்றார் . வந்த ஆசாமி சற்று நேர மௌனத்திற்குப் பிறகு, ‘ நண்பா ! நாம் எல்லோருமே சகோதரர்கள் ; என் சொத்து உன் சொத்து ; உன் சொத்து என்னுடைது ஆகும்; உன் சொத்தில் ஒரு பகுதியைக் கொடுத்தால் நான் நிம்மதியாக வாழ்வேன் ‘ என்றார் சாமியார். சாமியாரின் கண்களை உற்று நோக்கினார் தனிகர் . சாமியாரின் கண்கள் அவரது கபடத்தையும், போலித்தனத்தையும் பறை சாற்றிக் கொன்டிருந்தன. ‘அவ்வளவுதானே ! சற்றே பொறுங்கள் ! வந்து விடுகிறேன்’‘ என்று சொல்லி உள்ளே போனார். ‘ இந்த மாதிரி முட்டாள் மனிதர்கள் நாலு பேர் இருக்கிற வரை நமக்கு வண்டி ஓடும், என்று நினைத்தவாறே கண்மூடி இருந்தார் சாமியார் . ‘மன்னிகணும் ! ரொம்ப நேரம் ஆயிடுத்து ! நீங்கள் சொன்னது ரொம்பச் சரி ! என்னுடைய சொத்துகளைக் கணக்குப் போட்டேன் ! மொத்த உலக ஜனத்தொகையால் வகுத்தா 0.001 பைசாதான் வந்தது. அதனால் இந்த சின்ன ஊர் மக்களை மட்டும் எடுத்துக் கொண்டு கணக்கிட்டதில் தலைக்கு 22 பைசா வந்தது; இப்பொழுது 25 பைசா நாணயம் கூட வழக்கில் இல்லை; அதனால் என் மனைவியிடமும், மகனிடமும் பேசி அவர்களின் அனுமதியையும் பெற்று விட்டேன் ! என் ஷேரையும் சேர்த்தால் 88 பைசா ஆகிறது. அதை முழுதாக்கி முழு ரூபாயாகக் கொடுக்கிறேன். தேவரீர் ஏற்க வேண்டும், என்று விழுந்து வணங்கி ஒரு ரூபாய் நாணயத்தைக் கொடுத்தார் வீட்டின் தலைவர் !

அடங்கெழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன்

அடங்கெழில் அஃது என்று – அடங்குக உள்ளே

திருவாய் மொழி 1.2.7

முற்றிலும் அழகிய எம்பெருமானுடைய திருமண் – ஐஸ்வர்யங்களை எல்லாம் பார்த்து, அவை எம் பெருமானுடைய சொத்து என்று துணிந்து, பெருமாளிடம் அடங்கி, ஒடுங்கி, லயித்துப் போகுக ! என்கிறது நம்மாழ்வாரின் இப்பாசுரம்.
ராஜகுமாரன் ஒருவன் அழகியத் தோட்டத்தைக் கண்டான்; காவல் ஏற்பாடுகளைக் கண்டு உள்ளே நுழைய அஞ்சினான். ‘இது உன் தகப்பனாரின் உடைமை; உள்ளே வந்து அனுபவி’ எனக் கூறப்பட சுவாதினத்துடன் உள்ளே நுழைந்து திளைத்தான்.

‘பெருமானது ஐஸ்வர்யம் அளவற்றது என்பது உண்மையே; அப்படிப்பட்ட ஐஸ்வர்யமெல்லாம் நமது நாதனுடைய ஐஸ்வர்யம் அல்லவா ! ‘ என்று நினத்தால் எம்பெருமானுக்கும் நமக்குமுள்ள உறவை உணர்வோம்.; கூச்சம் தொலையும் என்பது இப்பாசுரத்திற்குத் தேர்ந்த கருத்தாம். கட்டடங்கா அழகியதான அனைத்து செல்வத்தையும் பார்த்து, இது இறைவனுடையது என்று நினந்து, அச்செல்வத்திற்குள் நீயும் ஒரு செல்வமாக அடங்குக என்று பறைசாற்றப்படுகிறது.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

காஞ்சிப் பெரியவர் சொன்னார் – தானைத் தூக்கி எறிந்தால் குழம்பு ரஸமாகும் ! எல்லாம் எனது என்ற எண்ணங்களை விட்டு விட்டு எல்லாம் எம் பெருமானின் சொத்து என்று நினைத்து அவனுள் அடங்கினால் வாழ்க்கை இனிக்கும் ரஸமாகும்.

இது வேறு ஒரு நிலைக்கும் பொருந்தும். அரசாங்கப் பணத்தைக் கையாளும் தலைவர்கள் இது மக்கள் சொத்து என்பதை அறிந்து அடக்கத்துடன் நடக்கவேண்டும். தேசத்தின் நீர், நில ஆதாரங்களைப் பொதுமக்கள் உபயோகிக்கையில் ‘இது நம் தேசத்தின் சொத்து; இதைப் பத்திரமாகப் பாதுகாத்து நம் சந்ததியருக்குச் சேர்ப்பித்துவிடவேண்டும்’ என்ற எண்ணத்துடன் செயல்பட வேண்டும்.

இன்னும் விரிந்து ‘இது இப்பூவுலகின் சொத்து; பெருமாள் இதன் எஜமானன் என்ற எண்ணம் வந்தால் ஆழ்வாரின் நிலைப்பாட்டிற்கே வந்துவிடுவோம் ! உடையவன், உடைமை என்ற பெருமாள் சம்பந்தத்தை விளக்குகிறது பிரசித்தி பெற்ற இப்பாசுரம்.

ஆழ்வார் திருவடிகளே சரணம் !

About டாக்டர் லக்‌ஷ்மிநரசிம்மன்

டாக்டர் லக்‌ஷ்மிநரசிம்மன்
நரம்பியல் நிபுணரான இவர், சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள நரம்பியல் துறையின் இயக்குனராகப் பதவி வகிக்கிறார். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

சிவன் விளையாடல் – 9

வேல் பெற்ற உக்கிர குமார பாண்டியன் பாரதத்தை புகழ்ந்து பாடும்போது, சுந்தரம் பிள்ளை நீரால் சூழப்பட்ட இந்த உலகிற்கு அழகு …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன