முகப்பு / எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

பாலகுமாரன்

சூரியனை அறிமுகப்படுத்துவது போலத்தான் இவரை அறிமுகம் செய்வது. எழுத்துச் சித்தர் என்று போற்றப்படும் பாலகுமாரனுக்கு தமிழர் வழும் எல்லா நாடுகளிலும் வாசகர்கள் உண்டு. இவர் தொடாத துறையே இல்லை எனும் அளவுக்கு, பல நாவல்கள், கட்டுரைகள், ஆன்மீக நூல்கள் என 250க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். வாசகரை நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கே கொண்டு செல்லும் ஆற்றல் பெற்றவை இவரது எழுத்துகள். வாசிக்கும்போதே காட்சிகள் நம் மனக்கண்ணில் விரியும்.

கிரேசி மோகன்

இவரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. நகைச்சுவையிலும் நாடகத் துறையிலும் கொடிகட்டிப் பறப்பவர். கமலஹாசனின் பல படங்களுக்குக் கதை வசனம் எழுதியுள்ள்ளார். பல் வெளிநாடுகளிலும் தனது நாடகங்களை அரங்கேற்றியுள்ளார். எவ்வளவு புகழ் பெற்றபோதும் எளிமையாகப் பழகக் கூடியவர். பேசும்போதே இயல்பாக நகைச்சுவை கொட்டும். இங்கே வாசகர்களின் கேள்விகளுக்கு, அவருக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக பதில் அளிக்கிறார்.

பி.என்.பரசுராமன்

பி.என்.பி. என்று சொன்னால், ஆன்மீக உலகத்தில் அறியாதவர்கள் இருக்க முடியாது. பல ஆன்மீக இலக்கியங்களில் ஆழங்கால் பட்டவர். காலத்துக்கு ஏற்ப ஆன்மீகக் கருத்துகளை சொற்பொழிவுகள் மூலம் மக்களுக்குச் சொல்லி வருகிறார். பிரபலமான பல தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஆன்மீகம் பற்றி பேசி வருகிறார். பல முன்னணி ஆன்மீக இதழ்களுக்கு ஆலோசகராகவும் கவுரவ ஆசிரியராகவும் இருந்து வருகிறார்.

டாக்டர் லக்‌ஷ்மிநரசிம்மன்

நரம்பியல் நிபுணரான இவர், சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள நரம்பியல் துறையின் இயக்குனராகப் பதவி வகிக்கிறார். பக்தி இலக்க்கியங்களையும் சங்க இலக்கியங்களையும் ஆழ்ந்து வாசித்துள்ளார். ஆன்மீகத்திலும் தமிழிலும் தீவிர பற்றுகொண்டவர். பாசுரங்களை இக்கால நிகழ்வுகளுடன் இணைத்து எழுதி வாசகர்களைக் கவர்ந்து வருகிறார். மருத்துவரான இவரது தமிழறிவு கேட்போரை வியக்க வைக்கும்.

சரவணக்குமார்

வங்கி ஊழியரான சரவணக்குமார், எழுத்தாற்றல் மிக்கவர். ஆரம்பகாலத்தில் சிறுசிறு பத்திரிகைகளில் எழுதிவந்தார். இவரது எழுத்தாற்றலைக் கண்டு, முன்னணி பத்திரிகைகள் பலவும் இவருக்கு அழைப்பு விடுத்தன. ஆன்மீகம் மட்டுமின்றி, கலை, பண்பாடு தொடர்பாகவும் பல முன்னணி இதழ்களில் இவர் இப்போது எழுதி வருகிறார். பிரபலங்களைப் பேட்டி எடுத்து எழுதும் பத்திரிகையாளராகவும் தன்னை வளர்த்துக்கொண்டுள்ளார். எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாத பண்பாளர்.

கீதா சுப்பிரமணியன்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்தவர் கீதா சுப்பிரமணியன். இயற்பெயர் நாராயணி. எழுத்தாளரான இவருடைய கணவரின் விருப்பப்படி கீதா என பெயரை மாற்றிக்கொண்டார். இயல்பிலேயே எழுத்தார்வம் கொண்ட இவர், திருமணத்துக்குப் பின் கணவரின் ஊக்குவிப்பால் அதிகம் எழுதத் தொடங்கினார். பல முன்னணி வார இதழ்களில் துணுக்குகள், சமையல் குறிப்புகள் எழுதி வந்தார். இப்போது, ஆலயங்கள் பற்றியும், ஆன்மீகக் கட்டுரைகளும் எழுதி வருகிறார்.

ஆரூர் ஆர். சுப்பிரமணியன்

துணைக் கலெக்டராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணிக்காலத்தில் இவரது நேர்மைக்காகவும் சேவைக்காகவும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரின் பாராட்டைப் பெற்ற்றவர். சிறு வயது முதலே ஆன்மீகத்திலும் எழுத்திலும் ஆர்வம் மிக்கவராக வளர்ந்தார். ஆன்மீகத்துறையில் பல நூல்கள் எழுதியுள்ளார். இவர் எழுதிய “மதம் கடந்த மகான்” என்ற ஷீர்டி சாய் பாபா பற்றிய நாடகம் சமீபத்தில் அரங்கேறியது. பல அமைப்புகள் இவரைப் பாராட்டி விருதுகள் கொடுத்துள்ளன்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

டாக்டர் ஆதலையூர் சூரியகுமார்

பள்ளி ஆசிரியரான இவர், கல்வித்துறையில் பல சாதனைகள் புரிந்தவர். கல்வித்துறை அதிகாரிகள், மாவட்ட ஆசிரியரின் பாராட்டுகளைப் பெற்றவர். நாவல்கள் உட்பட பல் நூல்கள் எழுதியுள்ளார். பல விருதுகளையும் பட்டங்களையும் பெற்றூள்ளார். பல துறைகளிலும் எனது எழுத்தாற்றலால் முத்திரை பதித்துள்ளார்.

இரா. குமார்

சொற்கோயில் இணைய இதழின் ஆசிரியர். தினமலர் நாளிதழின் செய்தி ஆசிரியர், தினகரன் நாளிதழின் இணையாசிரியர் என முன்னணி நாளிதழ்களில் செய்திப்பிரிவின் உயர் பொறுப்பில் இருந்தவர். பத்திரிகைத் துறையில் 33 ஆண்டுகள் அனுபவம் பெற்ற்றவர். பல நூல்கள் எழுதியுள்ளார்.

சுமிதா ரமேஷ்

திருச்சியைச்சேர்ந்தவர். அரபு நாட்டில் வசிக்கிறார். கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு சிறிது காலம் ஆசிரியப் பணியில் இருந்தார். கணவர் இவரை ஊக்குவித்து, விசுவின் அரட்டை அரங்கத்தில் பேசவைத்தார். இப்போது, அமெரிக்காவிலிருந்து இயங்கும் தமிழ்குஷி ரேடியோ என்ற இணைய வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகவும்,தயாரிப்பாளராகவும் பணிபுரிகிறார். ஃபேஸ்புக்கில் எழுத ஆரம்பித்து,பல பத்திரிகைகளில் கட்டுரைகள், கதைகள் எழுதி வருகிறார். திருவரங்கம் வாழ் அரங்கனின் பக்தை என்று பெருமையோடு சொல்லிக்கொள்பவர்.

சோம வள்ளியப்பன்

திரு சோம. வள்ளியப்பன், 1990களில் எழுதிய பல சிறுகதைகள், ஆனந்த விகடன், கல்கி போன்ற வார இதழ்களில் வெளியாகியுள்ளது.எழுத்தாளர், மேலாண்மை ஆலோசகர், தன்னம்பிக்கை பேச்சாளர், நிர்வாகப் பயிற்சியாளர் எனப் பன்முகத் திறமை பெற்றவர். இதுவரை 54 நூல்கள் எழுதியுள்ளார். இதில் இரண்டு நூல்கள் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். பங்குச்சந்தை பற்றிய இவரது நூல் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவர் எழுதிய அள்ள அள்ள பணம் என்ற நூல் ஒன்றரை லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்று சாதனை படைத்துள்ளது. 500க்கும் மேற்பட்ட மேலாண்மை பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். பொருளாதாரம், வர்ததகம், பங்குச் சந்தை பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவற்றில் பங்கேற்றுள்ளார். தமிழகம் முழுவதும் பல கல்லூரிகளின் மேடை நிகழ்ச்சிகளில் உரையாற்றி வருகிறார்.