ஹலோ கிரேசி

“அருச்சுனன் பார்த்த விச்வருபத்தை ,பார்வையற்ற திருதராஷ்டிரனும் பார்த்தான் ….இதுதான் “குருட்டு அதிர்ஷ்டம் ” என்பதோ ….!

சகோதரி திரதிராஷ்டிரன் கண்ணனின் விஸ்வரூபம் கண்டது

சஞ்சயன் என்கிற சத்சங்கத்தால் என்று சொல்லாமல் சொல்லி அடியேனுடைய திருதராஷ்டிர விழிகளுக்கு ‘’விடிகாலை வெளிச்சம்’’ அளித்தமைக்கு நன்றி சகோதரி….இனி வெண்பா….

”நெல்லுக்குப் பாய்ச்சிய நீரோடி, கூடிவளர்,
புல்லுக்கும் பாயுமாப்போல், பாண்டவ, -வில்லுக்(கு),
இருட்டினைப் போக்க கிருட்டிணன் காட்டல்,(விஸ்வரூப தரிசனம்)
குருட்டதிர்ஷ்ட மல்ல சத்சங் கம்’’……..

“கடவுள் கையில் நாம் ஒரு ’’கருவி’’. எப்போது அதை மறந்து எல்லாம் ‘’நான்தான்’’ என்று ‘’கர்வி’’(கர்வம்) ஆகிறோமோ அப்போதே நாம் அம்பேல்தான்…

உடம்புல தொப்பை விழுந்தா ஜிம்முக்குப் போய் தொப்பையை குறைச்சுக்கலாம். மனசுக்கு தொப்பை விழுந்தா ரொம்ப ஆபத்து. அது வராம இருக்க நிறைய படிக்கணும்.

நான் நிறைய படிப்பேன். வியாசரை மறந்து போவோம். ஆனா மகாபாரதத்தை மறக்க மாட்டோம். சின்ன வயசில் இருந்தே நிறைய படிப்பேன். ல.ச.ரா, கி.வா.ஜ, நா.பார்த்தசாரதி, கல்கி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், பாலகுமாரன் எல்லார் எழுத்தும் படிப்பேன். என் மனைவி இரவில் படுக்க வரும்போது என்னை சுத்தி படுக்கைல இருக்கிற புஸ்தகங்களை எல்லாம் நகர்த்தி வெச்சுட்டு அவங்க இடம் பண்ணிதான் படுத்துப்பாங்க. என் நண்பன் சு.இரவி தான்(தற்சமயம் ‘’பூனா’’வில் வசிக்கிறான்)….எனக்கு ‘’அனா ஆவன்னா’’ சொல்லித் தந்தது ‘’பூனா சு. இரவிதான்’’….’’ எழுத்தறிவித்த இரவியவன்’’… எனக்கு கம்பன், காளிதாசன், காளமேகம் இவர்களை அறிமுகம் செஞ்சு வெச்சான். இவங்க தான் எனக்கு கிரியா ஊக்கி( inspiration)…..

நல்லரசனையுள்ளவன் அனைத்து எழுத்தாளர்களையும் படிப்பான். என் எழுத்துதான் வேதம்னு என்னிக்குத் திமிர் வந்துச்சோ ”போயே போச்!…போயிந்தி! It’s GONE”….!

“வாழ்க்கையின் அர்த்தம் என்ன கிரேசி….?

என் பார்வையில் ‘’வாழ்கையின் அர்த்தம்’’….

உங்கள் வயசுக்கு என் சித்தாந்தம் சரியில்லை எனப் படலாம்….என் வயசு என்னவென்றே எனக்குத் தெரியாது….ஆனால் வயசு ஏற ஏறத்தான் வேதாந்தம் பிடிபடும்….’’கிளரொளி இளமை கெடுவதன் முன்னம்’’ என்று நம்மாழ்வார் சொன்னது போல(Before The Bubling Youth Fades) ஏதேனும் செய்து ‘’வாழ்க்கையின் அர்த்தத்தைப்’’ புரிந்து கொள்….ரமணராகவோ, ஏஆர். ரஹ்மானாகவோ, டெண்டூல்கர் ஆகவோ இளமையில்தான் முடியும்….\உன்னால் முடியும் தம்பி தம்பி….

‘’வாழ்க்கையின் அர்த்தம் வெகுளி, பயம்அஸூயை,

சூழ்கையில் சும்மா இருத்தலே, -கூழ்கை

கிடைத்ததை உண்டு, குஷியாக ஈசன்,

படைத்ததை வேடிக்கை பார்’’

“அடியேன் எப்பேர்பட்ட சினிமாவாக இருந்தாலும் ‘’சமீபத்தில்’’(முதல் ரோவில் அமர்ந்து) பார்ப்பதில்லை….கண் கெட்டுவிடும் என்ற அச்சத்தால்…கன்னட ஜி.வி.அய்யரின் ‘’ஆதி சங்கரர்’’ சமஸ்கிருத சினிமா….அஃப்கோர்ஸ் சப்-டைட்டிலோடுதான்….

சங்கர ஜெயந்தி அன்று… சிருங்கேரி சாரதாம்பாள் கோயிலில் ஆச்சர்யாளுக்கு அபிஷேகம்….60 வயதில் அதை முடிக்கல, இதை முடிக்கணும் என்று புலம்புகிறோமே….! 32 வயதுக்குள் ‘’சங்கர லிங்காஷ்டகம், குருவாஷ்டகம், ஷண்முக புஜங்கம், பஜகோவிந்தம், கனகதாராஸ்தவம் போதாதென்று ஷண்மத ஸ்தாபகம் செய்து விட்டு 4 சங்கர மடங்கள் ஸ்தாபித்த அந்த திராவிட சிசுவை பார்த்து அடியேன் வேண்டிக் கொண்டது…. ”அய்யனே 4 நிறுவினாய்…என்னையும் சேர்த்து நின்னொடு ஐவராக்கு’’….ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர….

About கிரேசி மோஹன்

கிரேசி மோஹன்
இவரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. நகைச்சுவையிலும் நாடகத் துறையிலும் கொடிகட்டிப் பறப்பவர். கமலஹாசனின் பல படங்களுக்குக் கதை வசனம் எழுதியுள்ள்ளார். மேலும் அறிய

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன