முகப்பு / பாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம் (பக்கம் 4)

பாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம்

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 7

அயோத்தி என்ற அந்த அற்புதமான நகரத்தின் மன்னராக தசரதர் இருந்தார். அவர் வேதம் அறிந்தவர். மற்ற விஷயங்களையும் மனதில் உள்வாங்கி அதை ஆலோசித்து ஏற்றுக் கொள்பவர். வாழ்க்கையைப் பற்றிய தொலைநோக்கு உடையவர். அன்புடையவர். இஷ்வாகு குலத்தில் தோன்றிய மாவீரர். தன்னுடைய வலிமையால் பகைவர்களை அடக்கியவர். நல்ல நண்பர்களை பெற்றவர். குபேரனைப் போல பெரும் செல்வந்தர். அதே சமயம் புலன் அடக்கம் உடையவர். மக்களை மிக கவனமாக, கம்பீரமாக காப்பாற்றி வருபவர். …

மேலும் படிக்க »

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம்- 6

அவருடைய ஆசிரமத்தின் இன்னொரு பகுதியில் லவ குசர்கள் வாழ்ந்து வந்தார்கள். இராமருடைய அம்சமாக இருந்தார்கள். வால்மீகி அவர்களை ஊன்றி கவனித்தார். மற்ற எல்லா சீடர்களோடு அவர்கள் இருவரையும் முதன்மையாக வைத்து மொத்த காவியத்தையும் மனனம் செய்யும்படி சொல்லிக் கொடுத்தார். தினம் தினம் பாடம் நடத்தினார். எழுதிய நாட்களும், பாடம் சொல்லும் நாட்களுமாய் அந்த ஆசிரமம் அமைதியாக இருந்தது . அந்தக் காப்பியத்தை சொல்லவும் முடியும். பாடவும் முடியும். லவ குசர்கள் …

மேலும் படிக்க »

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் 5

’’மரா மரா மரா’’ உள்ளுக்குள்ளே சொல் ஒன்று சுழன்று சுழன்று ஓடியது . அவன் மனதை இறுக்கியது. ஆழ அமிழ்த்தியது. அவன் மீது இலைகள் தலையில் விழுந்தன. தூசு படிந்தது . மறுபடியும் இலைகள் விழுந்தன. தூசு படிந்தது. மீண்டும் இலைகள் விழுந்தன. தூசு படிந்தது . அவன் மீது பெரிய மண் மேடு தானாக ஏற்பட்டது . அந்த மண் மேட்டில் எறும்புகளும், கரையான்களும் குடிபுகுந்தன. குழி தோண்டி …

மேலும் படிக்க »

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 4

’’அரிசி மூட்டை உணவாகும். அதை எடுத்து சந்தோஷமாக சாப்பிட்டு விட்டார்கள். அரிசி மூட்டையை கொள்ளையடித்து அதற்கு இரண்டு பேரை காயப்படுத்தி அல்லது யாரையாவது கொன்ற பாவம் இருக்கிறதே , அது யார் கணக்கு.’’ ’’தெரியவில்லையே.’’ ’’குடும்பத்திற்காகத்தானேப்பா அடித்து கொள்ளையடித்தாய்.’’ ’’ஆமாம்.’’ ’’குடும்பத்திற்காகத்தானே கொலையும் செய்தாய்.’’ ’’ஆமாம்’’ Sorkoyil-சொற்கோயில்Aanmeegathin Puthiya Parinamam.JOIN GROUP ’அப்படியானால் அந்த கொலையும், கொள்ளையும் கூட அவர்களுக்கு பங்கு சேர்க்க வேண்டுமல்லவா. அரிசி மட்டும்தான் சேர்ப்பார்களா.’’ ’’சேர்ப்பார்களய்யா’’ …

மேலும் படிக்க »

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் – 3

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணத்தில் வால்மீகியின் கதை இல்லை. யாராவது இடைச்செருகலாய் எழுதி இருப்பார்கள். ஆனால் இந்தக் கதை சொல்லுகின்ற செய்தி மிகச் சிறப்பாக இருப்பதால் இன்றைய வாழ்க்கையோடு ஒத்துப் போவதால் இங்கு பரிமாற விரும்புகின்றேன். கடும் தவத்தில் இருந்த அந்த முனிவர் பல வருடங்களுக்குப் பிறகு மெல்ல கண் திறந்தார். அவர் கண்களிலிருந்து ஒரு ஒளி கிளம்பி மெல்ல காற்றில் படர்ந்தது . அப்படி அடைந்த ஒளியை ஏதோ உணவு …

மேலும் படிக்க »

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் – 2

புதருக்கு நடுவே இருந்து வில்லோடும் அம்புகளோடும் ஒரு வேடன் தோன்றினான். அடித்து வீழ்த்திய பறவையை ஆவலோடு பார்த்தான். துணையின் இருப்பை இழந்த பெண் பறவை, ஆண் பறவைக்கு அருகே வந்து அலறி அலறி கத்தியது. . அம்பை பிடுங்க முயற்சி செய்தது . மெல்ல மெல்ல ஆண் பறவையின் உயிர் அடங்கிற்று. ரத்தம் பெருக்கெடுத்து நெஞ்சு கிழி பட்டிருக்கும் ஆண் பறவையைப் பார்த்து பெண் பறவை பல்வேறு விதமாக ஈனக்குரலெடுத்து …

மேலும் படிக்க »

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் – 1

பிரபஞ்சம் அமைதியாக மிகச் செம்மையாக தன் பணிகளை இடையறாது செய்து கொண்டிருந்தது. பூமியிலுள்ள எல்லா உயிரினங்களும் வாழ்க்கையை பரிபூரணமாக அனுபவித்துக் கொண்டிருந்தன. பிறப்பும் இறப்பும் ஒரு மாறுதல் என்பதை உணர்ந்தவையாக இருந்தன. அதனாலேயே அதிக துக்கமற்று வாழ்ந்தன. உலகம் தோன்றிய நாள் முதல் அந்த நேரம் வரை இவ்வுலகத்தில் எல்லா விஷயங்களையும் முற்றிலும் உணர்ந்த ஒரு சக்தி நாரதர் என்ற பெயர் தாங்கி ஒரு ரீங்காரத்தோடு அந்த பர்ணசாலைக்கு அருகே …

மேலும் படிக்க »

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம்

எழுத்துச் சித்தர் பாலகுமாரன், ஸ்ரீமத் வால்மீகி இராமாயணத்தை அவருடைய பாணியில், அவருடைய நடையில் தொடர்ந்து இங்கே எழுதுகிறார். இராமாயணத்தை மீண்டும் மீண்டும் ஏன் எழுத வேண்டும்? ஏன் மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும் என்ற கேள்விகளுக்கான தன் விளக்கத்துடன் ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் எழுதத் தொடங்குகிறார் பாலகுமாரன். ஸ்ரீமத் இராமாயணம் ஏன் எழுதப்பட வேண்டும். ஏன் மறுபடி மறுபடி படிக்கப்பட வேண்டும். அப்படி என்ன உணர்வு இது. என்ற கேள்விஒருவருக்கு …

மேலும் படிக்க »