முகப்பு / பாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம் (பக்கம் 3)

பாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம்

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம்- 17

” இராமா ” என்று வாய் நிறைய அழைத்தார். குழந்தைகளோடு கொஞ்சிக் குலாவினார். நிறைய கதைகள் சொன்னார். தன்னைப் பற்றிய எந்த வித அச்சமும் அந்த இரண்டு இளைஞர்களுக்கும் இருந்துவிடக் கூடாது என்று அவர்களுடன் பேச்சு கொடுத்தபடியே அந்த வனத்தினூடே நடந்து போனார். மூவரும் சரயூ நதிக்கரையை வந்தடைந்தார்கள். ” இராமா, இந்த நதிக்கரையில் கை, கால் சுத்தம் செய்து ஆசனம் செய்து மனதை ஒருமுகப்படுத்துவாயாக. நான் உனக்கு பலா, …

மேலும் படிக்க »

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம்- 16

முனிவரே, நீங்கள் என்ன கேட்டாலும் கொடுக்கிறேன் என்று சந்தோஷமாக ஒரு பெரியவருக்கு வாக்கு கொடுத்துவிட்டு, வாக்கு கேட்டவர் உன் உயிரைக் கொடு என்று சொன்னதும் வாக்குக் கொடுத்தவர் எப்படி கலவரப்படுவாரோ அவ்விதம் கலவரத்தை தசரதன் அடைந்தார். உயிரினும் மேலான இராமனை வனத்திற்கு அனுப்ப அவருக்கு விருப்பமேயில்லை. அதுவும் வெல்ல.முடியாத இராவணனைப் பற்றி அவர் கேள்விப்பட்டிருந்தார். தேவர்களாலும் , அசுரர்களாலும், கந்தர்வர்களாலும் , யட்சர்களாலும் , கின்னரர்களாலும் , வெல்லப்பட முடியாத …

மேலும் படிக்க »

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம்- 15

”உங்களைப் போன்ற முனிவர்களுடைய அருளால் என் தேசம் சுபீட்சமாக இருக்கிறது . அதனால் நானும் நன்றாக இருக்கிறேன். என் குடும்பத்தாரும் சுகம். உங்களைப் போன்ற தபஸ்விகளால்தான் இந்த உலகத்தில் சரியானபடி மழை பெய்து நல்ல விளைச்சல் ஏற்படுகிறது . எந்தவித இடையூறும் இல்லாமல் பயிர்கள், மரங்கள் செழித்து வளர்கின்றன. நீர் செய்யும் இடையறாத தவத்தின் விளைவால் அயோத்தியும், அதைச் சுற்றியுள்ள தேசத்து மக்களும் சுபீட்சமாக வாழ்கிறார்கள். நீங்கள் எனக்கு கொடுத்த இந்த மனசாந்தியின் விளைவாக எனக்கு எதிரிகள் எவரும் …

மேலும் படிக்க »

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம்- 14

ஒன்பது வயதிலேயே இராமன் திடகாத்திரமானவனாக இருந்தான். வயதாக வயதாக வெகு வேகமாய் வாலிபனானவன் போல் இருந்தான். கூர் மூக்கும், செவ்விதழும் , அகண்ட மார்பும், நீண்ட கைகளும், குறுகிய இடுப்பும், கனத்த தொடையும் ,உருளையான பிருஷ்டமாகவும், அழுத்தமான கணுக்கால்களும், தோள் சரிவும், பிடரியும் , அழகான முக விலாசமும் கொண்டு சுந்தர புருஷனாக இராமன் விளங்கினான். கிட்டத்தட்ட அதேசாயலாக, அதே வடிவமாக மற்ற குழந்தைகளும் வளர்ந்தார்கள். இன்னொரு புனைக் கதையும் உபன்யாசகர்களால் சொல்லப்படுவதுண்டு. இராமரை நன்கு …

மேலும் படிக்க »

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம்- 13

ஒரு தாதி சட்டென்று நிமிர்ந்தாள். ”நிலவு பூமிக்கு வராது . அது குழந்தைக்கு தெரியாது . ஆனால் குழந்தைக்கு நிலவு அருகில் இருக்க வேண்டும். அவ்வளவுதானே. நிலவு அருகில் இருப்பது ஒன்றும் கஷ்டம் இல்லையே. பக்கத்தில் வந்து உட்கார வேண்டும் அவ்வளவுதானே. அது ஒன்றும் பெரிய சிரமம் இல்லையே. நிலவை கொண்டு வந்தால் போயிற்று” என்று சொல்லி , அவள் மடமடவென்று உள்ளே ஓடினாள். பெரிய தங்கத் தாம்பாளத்தை எடுத்து …

மேலும் படிக்க »

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம்- 12

பல ஆண்டுகளாக மழை இல்லாத ஒரு தேசத்தில் புயல் காற்றுடன், இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தால் அந்த நிலம் எப்படி மகிழ்ச்சியில் தத்தளிக்குமோ, எப்படி குழைந்து போகுமோ, எப்படி ஆனந்தத்தை உள்வாங்கி தன் ஜீவ ரசத்தை வெளியே கக்குமோ அதேபோல தசரதன் நான்கு குழந்தைகள் பெற்ற மகிழ்ச்சியில் திண்டாடிக் கொண்டிருந்தார். கம்பீரமானவரும், மிகுந்த வீரம் பொருந்தியவரும், சிங்கம் போல போர் புரியும் தன்மையுடையவருமான தசரதர் தனக்கு பிறந்த குழந்தைகளின் …

மேலும் படிக்க »

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் 11

’’தசரதரே, இங்கு வந்திருக்கின்ற நான் பிரஜாபதி தொடர்புடைய மனிதன் என்பதை அறிந்து கொள்வீராக’’ என்று உரத்த குரலில் சொல்லிற்று. தசரதர் கை கூப்பிக் கொண்டு, ’’வருக வருக ஐயனே. உங்கள் வரவு நல்வரவாகுக. எனக்கு இடும் பணி என்னவோ அதைச் செய்ய தயாராக இருக்கிறேன்’’ என்றார். ’’மன்னா, இந்த யாகத்தில் தெய்வங்களை பூஜித்து வந்த பலன்களை நீங்கள் அடைந்து விட்டீர்கள். இதோ என் கையில் இருக்கிறது தேவர்களால் உண்டான பாயஸம் …

மேலும் படிக்க »

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் 10

’’தசரதரே கவலை வேண்டாம். அதர்வண வேதத்தில் சொல்லியிருக்கும்படி இதன் தொடர்ச்சியாக இன்னொரு யாகத்தை நான் செய்யப் போகிறேன். தேவர்களை குளிர்விக்கின்ற, திருப்தி செய்கின்ற மந்திரங்களைச் சொல்லி அவர்களுக்குண்டான திரவியங்களை நான் போடப் போகிறேன். மந்திரங்களுக்கு கட்டுப்பட்டும், இந்த திரவியங்களுடைய சக்தியை எடுத்துக் கொள்ளவும் நிச்சயம் தேவர்கள் வருவார்கள். அவர்களின் வருகையால் உங்களுக்கு நல்லது நடக்கும். பூமிக்கு அப்பால் வான்வெளியில் சந்திக்கின்ற அந்த சக்திகள் தரையில் இறங்கும். இந்த யாகசாலையில் அரூபமாய் …

மேலும் படிக்க »

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் 9

வசந்தகாலம் வந்ததும் மன்னர் வசிஷ்டரின் இருப்பிடத்தை மறுபடி தேடிப் போய் வணங்கி தன் பொருட்டு அஸ்வமேதயாகம் செய்யவேண்டும் என்றும், புத்திரன் இல்லாத குறையை நீக்க வேண்டும் என்றும் மிகப் பணிவோடு விண்ணப்பித்துக் கொண்டார். வெகு நிச்சயமாய் செய்து தருகிறேன். இதற்குண்டான ஏற்பாடுகளை நானே முன்நின்று கவனிக்கிறேன். அதுவும் தவிர, நம்மிடையே இப்பொழுது வசித்து வரும் ரிஷ்யசிருங்கர் இதை முன்னின்று நடத்துவார். நான் அவருக்கு பக்கபலமாக இருக்கிறேன். எந்தக் கவலையும் வேண்டாம் …

மேலும் படிக்க »

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 8

அவர் கவலையையும், அவர் வேள்வி செய்தாக வேண்டும் என்கிற எண்ணத்தையும் அந்த புரோகிதர்களும், மந்திரிகளும் ஆதரித்தார்கள். ’’எப்பொழுது இப்படி ஒரு புத்திரனை பெறவேண்டும் என்ற ஒரு எண்ணம் தோன்றிவிட்டதோ அப்பொழுது நிச்சயமாக அது நிகழத்தான் போகிறது . மிகச் சிறந்த புதல்வர்கள் உங்களுக்கு பிறக்கத்தான் போகிறார்கள்’’ என்று ஆசிர்வதித்தார்கள். ’’நல்ல குதிரையை தேர்ந்தெடுத்து அவிழ்த்து விடுங்கள். சரயூ நதியின் வலப்பக்கத்தில் வேள்விக்கான மண்டபங்கள் அமைக்கப்படட்டும். பின்னே வீரம் நிறைந்த படை …

மேலும் படிக்க »