முகப்பு / பாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம் (பக்கம் 2)

பாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம்

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் -27

எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் காமம் என்கிற விஷயம் மனிதனை எப்படிக் கவிழ்த்துப் போடுகிறது. இந்த உறுப்புக்காகத் தானே இத்தனை ஆட்டம் ஆடுகிறாய். இந்திரனே, எது உன்னுடைய ஆண்மையைப் பற்றிய உறுப்பாக நினைக்கிறாயோ, எது உன்னுடைய கம்பீரமாக நினைக்கிறாயோ அந்த உறுப்பு அறுந்து விழட்டும் என்றார். இந்திரனுடைய ஆண்மை அறுந்து விழுந்தது. இந்திரன் நாணத்தால் தவித்தான். கெளதமர் எதிர்த்து நோக்கினார். வாசற்படியில் நின்றுகொண்டிருந்த அகலிகையைப் பார்த்தார். குப்பையாகப் போய்விட்டாயே, எதை …

மேலும் படிக்க »

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் -26

தன்னுடைய குழந்தைகள் கொல்லப்படுவதை அறிந்த திதி வருத்தப்பட்டாள். மறுபடியும் கருவுற்றாள். கடுந்தவம் புரிந்தாள். சிறிது கூட ஆசாரக் குறை இல்லாமல் கர்ப்பத்தைத் தாங்கிவந்தாள். சூதவனான இந்திரன் தன்னுடைய சிற்றன்னைக்கு பணிவிடை செய்துவந்தான். திதி அந்த பணிவிடையை ஏற்றுக்கொண்டாள். அவளுடைய கர்ப்பம் வளர்வதை கண்டு இந்திரன் கவலை கொண்டான். ஒரு நாள் தன் தலைமுடி பாதத்தில் படும் வண்ணம் அவள் சுருண்டு படுத்திருப்பதைப் பார்த்து வாய் விட்டு சிரித்தான். இது ஆசாரக்குறைவு …

மேலும் படிக்க »

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் -25

ஸ்ரீ இராமா, யாக தீட்சையில் இருந்த அவர் கங்கையின் சரித்திரத்தைத் தெரிந்து கொண்டு அவள் நீர் பெருக்கு முழுவதையும் குடித்துவிட்டார். பகீரதன் திகைத்துப் போனான். சகலரும் பூமியின் நலன் கருதி ஜான்ஹுவை பிரார்த்தித்தார்கள். கங்கை உங்கள் மகள் போல அல்லவா என்று கெஞ்சினார்கள். அதனால் மனம் மகிழ்ந்த ஜான்ஹு தன் செவி வழியாக கங்கையை வெளிப்படுத்தினார். அன்று முதல் ஜான்ஹுவின் மகள் என்ற புகழோடும் ஜான்ஹவி என்றும் அழைக்கப்படலானாள். பகீரதன் …

மேலும் படிக்க »

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் -24

ஸ்ரீ இராமர் வருத்தப்பட்டார். தன் மூதாதையரில் சிலர் மிக மோசமான ஒரு முடிவுக்கு ஆட்பட்டிருக்கிறார்கள் என்று அவர் முகம் வாடியது. “ ஸ்ரீ இராமா, சரகனின் கதை இதோடு முடியவில்லை. மிகப் பெரிய பூமியின் நலத்திற்காக இந்த விஷயம் நடந்தது. தன்னுடைய மைந்தர்கள் திரும்பி வராததைக் கண்டு, அம்சுமானை அழைத்து நான் யாக தீட்சை கொண்டிருப்பதால் வெளியே வரமுடியாது. நீ கிளம்பிப் போய் உன் சிற்றப்பன்களைத் தேடு. அவர்கள் ஏதோ …

மேலும் படிக்க »

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் -23

சகர மன்னா, கவலை விடு. உனக்கு ஏகப்பட்ட புத்திரர்கள் உண்டாகப் போகிறார்கள். உன் மனைவிகளில் ஒருத்தி உன் வம்சத்தைத் தொடருகின்ற ஒரு மகனைப் பெறுவாள். இன்னொருத்தி வலிவு மிக்க அறுபதாயிரம் மகன்களைப் பெறுவாள். யாருக்கு என்ன வேண்டும் நீங்களே கேட்டுக்கொள்வதற்கேற்ப அவர்களுக்கு அவ்விதமான குழந்தைகள் பிறப்பார்கள். என்று சொல்ல, மன்னனின் மூத்த மனைவியான கேசரி, எனக்கு வம்சத்தை விருத்தி செய்கின்ற ஒரு பிள்ளை வேண்டும் என்று கேட்க, சுமதியோ வலிவுமிக்க …

மேலும் படிக்க »

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் -22

வாழ்க்கை என்பது அயோத்தி மட்டுமல்ல, தசரதர் மட்டுமல்ல, மூன்று மனைவியர் கொண்ட அவர் குடும்பம் மட்டுமல்ல, அயோத்தியென்ற ஒரு நகரம் மட்டுமல்ல. வாழ்வு மிகப் பெரிய விஷயம். உலகம் முழுதும் பரவியிருக்கிறது. விதம் விதமான ரிஷிகள், விதம் விதமான பத்தினிகள் புத்திர உற்பத்தி செய்து பரம்பரை பரம்பரையாக கை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நீண்ட நெடுந்தூரத்தைக் கொண்ட இமயமலைச் சாரலிலும், பல நதிகள் உற்பத்தியாகி வளம் கொழிக்கின்ற மத்தியப்பிரதேசத்திலும், கிழக்கிலும், மேற்கிலும், …

மேலும் படிக்க »

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் -21

உலகத்தில் பலரைப் பற்றிய கதையை மிக அழகாக , சுவையாக எடுத்துச் சொல்கிறீர்கள். உங்களைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. உங்கள் வாழ்க்கை, உங்கள் முன்னோரைப் பற்றிய கதைகளைக் கேட்க ஆவலாக இருக்கிறேன்” என்று கை கூப்பி இராமர் கேட்க, விஸ்வாமித்திரர் பரவசத்துடன் இராமரை அணைத்துக் கொண்டார். அவர்கள் கங்கைக் கரையை கடந்து வடக்கே மிதிலையை நோக்கி நடந்துகொண்டே பேசினார்கள். ” எங்கே ஆரம்பிப்பது, பிரம்மாவில் இருந்து ஆரம்பிக்கிறேன். பிரம்மாவினுடைய புத்திரனான …

மேலும் படிக்க »

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் -20

குடையும் , கமண்டலமும்.ஒளிவீசும் முகமுமாய் மகாபலி சக்ரவர்த்தி யாகம் செய்கின்ற இடத்திற்குப் போனார். அந்தணர் வருகையை வரவேற்று என்ன வேண்டும் என்று மகாபலி சக்ரவர்த்தி கேட்க, சுக்ராச்சாரியார் தராதே என மறுக்க, அவர் மறுப்பையும் மீறி எது கேட்டாலும் தருவேன் என்று சொல்ல, மூன்று அடி நிலம் கொடு என்று வாமனர் பதில் சொன்னார். கேட்பதற்கு வேறு ஒன்றும் இல்லையா, மூன்று அடி நிலம் போதுமா என்று மகாபலி கேட்க, …

மேலும் படிக்க »

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் -19

மணம் மனதைக் கொள்ளை கொண்டது. அதன் நறுமணம் நெஞ்சை நிறைத்தது. அதன் பசுமை கண்களைப் பறித்தது. மனதின் ஒலி யாழின் மீட்டலைப் போல காதுகளில் நுழைந்து புத்தியை பரவசப்படுத்தியது. உடம்பு முழுவதும் வெவ்வேறு விதமான வாசனை உள்ள காற்று தழுவியது. காலின் கீழ் மெத்தென்று ஈர மண்ணும், புல்லும் உணரப்பட்டன. எந்த மரத்தைப் பார்த்தாலும் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும் போல் தோன்றியது. ஒவ்வொரு செடியும் ஒவ்வொரு அழகை வெளிப்படுத்தியது. பறவைகளை …

மேலும் படிக்க »

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம்- 18

அவரால் சபிக்கப்பட்ட துக்கத்தைத் தாளாமல் இந்த தேசத்தில் உள்ள மக்களை அவள் விதம் விதமாக துன்புறுத்தி வருகிறாள். எங்கு யாகம் நடந்தாலும் அதை அழிப்பதே, அந்தணர்களுக்கு எதிராக இருப்பதே அவளுடைய குறிக்கோளாக இருக்கிறது. பொறுக்க முடியாத கொடூரச் செயல்களைச் செய்கின்ற தாடகை இங்கு வசிப்பதால் இதற்கு தாடகா வனம் என்றும் பெயர். தேசத்திலிருந்து அவளால் துரத்தியடிக்கப்பட்டவர்கள் மறுபடியும் இங்கு வரமுடியவில்லை. அரக்கி கொடூர நிலையை அடைந்த அவளை கொல்வதற்கு உன்னைத் …

மேலும் படிக்க »