முகப்பு / பாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம்

பாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம்

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37

அந்த வில்லினுடைய பிரவாகத்தை மானுடர்கள் சொல்லத் துவங்குகிறhர்கள். ” பாணாசுரன் போன்ற வீரர்கள் கூட இதை அசைக்க முடியவில்லை. ராஜாக்களுனுடைய பலம் சந்திரன். அந்த சந்திரனையே விழுங்கும் இராகுவை போன்றது இந்த சிவதனுசு . வில்லினுடைய கனமும், கொடுர தன்மையும் எல்லோரும் அறிந்ததே. வலிவு உள்ள வீரர்கள் முயற்சி செய்து பார்க்கலாம். வில்லை வளைத்து யார் நாணேற்றுகிறார்களோ அவர்கள் ஜானகியை வரிக்கலாம் என்று எங்கள் மன்னரான ஜனகர் சொல்கிறார்” என்று …

மேலும் படிக்க »

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36

சீதை நாணத்துடன் கண் திறந்து இராமரின் கால் நகத்திலிருந்து கழுத்து வரை ஆழமாக ஊடுருவி பார்க்கிறாள். அந்த இரண்டு சிங்கங்களையும் தரிசிக்கிறாள். அவளுக்கு தன் தந்தையினுடைய பயங்கரமான சபதம் ஞாபகம் வந்தது . இந்த இளைஞன் வில் வளைக்க வேண்டுமே என்ற கவலை ஏற்பட்டது . வேறு யாரும் வளைக்கக் கூடாதே என்ற பயம் வந்தது . மயக்கமான ஒரு நிலையில் சீதை இருப்பதை கண்டு மற்ற தோழிகள் பயந்தார்கள் …

மேலும் படிக்க »

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35

தன்னைச் சுற்றி வந்த சிறுவர்களை தன் மாளிகை வாசலில் நிறுத்தி விடை கொடுத்து அனுப்பி விட்டு இராமரும், லக்ஷ்மணரும் உள்ளே வந்து விஸ்வாமித்திரரை விழுந்து வணங்கினார்கள். சந்தியா காலம் நெருங்கி விட்டதே என்று சந்தியாவந்தனம் செய்தார்கள். விஸ்வாமித்திரர் எதிரே உட்கார்ந்து கொண்டு தொடர்ந்து அவரோடு சம்பாஷனையில் ஈடுபட்டார்கள். அவர் கண்ணயர்ந்து கால்நீட்டி படுக்கையில் சாய, இராமரும், லக்ஷ்மணரும் அவருக்கு கால் பிடித்து விட்டார்கள். ” இராமா, நடுநிசி வந்து விட்டது …

மேலும் படிக்க »

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34

இராமருடைய சகோதரன் லக்ஷ்மணனுக்கு ஜனகபுரியை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்தது . ஆனால் அதை இராமரிடம் கேட்பதற்கு கொஞ்சம் பயம் இருந்தது . ஆனால் அதை புரிந்து கொண்ட இராமர், விஸ்வாமித்திரரிடம் போய் கை கூப்பி, ”நீங்கள் கட்டளையிட்டால் நானும் ,லக்ஷ்மணனும் ஜனகபுரியை சுற்றிப் பார்த்து விட்டு வருகிறோம்” என்று பவ்யமாகக் கேட்டார். ”உனக்கு நான்கட்டளை இடுவதா. ஜனகபுரியை சுற்றிப் பார்க்கவா. அவர்கள் கண்கள் சுகத்திற்காக நீ …

மேலும் படிக்க »

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33

“ஒரு வில்லை முன்னிட்டு வேள்வி செய்வதாக கேள்விப்பட்டோம். அந்த வில்லைப் பார்ப்பதற்கு ஸ்ரீ இராமர் விரும்புகிறார். அது என்ன வில், எங்கிருந்து உங்களுக்குக் கிடைத்தது என்ற விவரத்தைச் சொல்லுங்கள்” என்று விஸ்வாமித்திரர் கட்டளையிட,அந்த வில் பல சக்கரங்கள் வைத்த பெட்டியில் கொண்டுவரப்பட்டது. திறந்து ஸ்ரீ இராமருக்கு காட்டப்பட்டது. “தட்சனுடைய யாகத்தில் சிவன் புறக்கணிக்கப்பட, மற்ற தேவர்கள் தட்சனுடைய யாகத்தில் வந்து அவிஸை ஏற்றுக்கொள்ள, என்னை புறக்கணித்த யாகத்தில் நீங்கள் எப்படிப் …

மேலும் படிக்க »

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 32

பல்லாயிரக்கனக்கான ஆண்டுகள் தவம் செய்த பிறகு பிரம்மா அவர் முன் தோன்றி ரிஷி என்ற இடத்தை அடைந்திருக்கிறீர்கள். இன்னும், தொடர்ந்து செய்யுங்கள் என்று சொல்ல, அதனால் சஞ்சலமடைந்த விஸ்வாமித்திரர் இன்னும் கடுமையாக தன் தவத்தை செய்யத் துவங்கினார். அப்ஸர ஸ்தீரியில் சிறந்தவளான மேனகை அந்த புஷ்கரத்தில் குளிக்க வர, அவள் பேரழகைக் கண்டு விஸ்வாமித்திரர் மோகித்தார். அவருடன் பத்தாண்டுகள் கூடிக் குலவி சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். மறுபடியும் தவம் குறைந்தது. …

மேலும் படிக்க »

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 31

பலவிதமான மந்திரங்களால் அக்னியில் திரவியங்களை சொரிந்து அந்த அவிஸை தேவர்களுக்கு கொடுப்பதற்கு முயற்சி செய்தபோது எந்த தேவரும் அதை வாங்கவில்லை. விஸ்வாமித்திரருடைய இந்த முயற்சியை அவர்கள் ஆதரிக்கவில்லை. விஸ்வாமித்திரர் சினம் கொண்டார். யாகத்திற்கு நெய் ஊற்றும் மரக்கரண்டியை உயரே பிடித்து, “ திரிசங்கே, போ. சொர்க்கத்துக்கு போ” என்று உரக்க கத்த, திரிசங்கு பூமியிலிருந்து கிளம்பி நேரே தேவலோகத்திற்குப் போனான். அங்கே இந்திரன் அவனைப் பார்த்துத் திகைத்தான். “ இந்த …

மேலும் படிக்க »

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் -30

தான் தவம் செய்து பெற்ற அஸ்திரங்கள் அத்தனையும் தன்னுடைய தண்டத்தால் தடுத்து நிறுத்தி எதுவும் இல்லாமல் செய்ததை கண்ணாரக் கண்ட ஷத்திரியரான விஸ்வாமித்திரர், ஷத்திரியருடைய பலம் ஒரு பலமா, பிரம்ம தேஜஸ்தான் உண்மையான பலம். அந்தணருடைய தவத்திற்கு முன்பு ஷத்திரியருடைய அஸ்திரங்கள் எதற்கும் லாயக்கற்றவை என்று நொந்து வசிஷ்டரை விட்டு விலகிப் போனார். தோல்வியை ஒப்புக்கொண்டார். ஆனால் வசிஷ்டரை நோக்கிய அவருடைய பகைமை அழியவில்லை. வளர்ந்து கொண்டே இருந்தது. இனி …

மேலும் படிக்க »

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் -29

” இந்த பர்ண சாலையில் நடக்கின்ற வேள்வியெல்லாம் அவள் தயவில்தான் நடக்கிறது . அவள் இல்லையெனில் எங்களுடைய உணவும் , மற்ற விஷயங்களும் பிரச்சனையாகிவிடும். அதுவும் தவிர, காமதேனு விருப்பப்பட்டுதான் இங்கு இருக்கிறாள். எனவே, காமதேனுவை கேட்கின்ற விஷயத்தை மட்டும் விட்டுவிட்டு வேறு ஏதேனும் கேளுங்கள்.   ” கேட்பது என்பது ஒரு மரியாதைக்காகத்தான். என் சொத்து , என் சொந்தம் என்று நான் எப்போதோ தீர்மானம் செய்து விட்டேன். …

மேலும் படிக்க »

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் -28

மிதிலையின் எல்லையில் வந்தவரை ஜனகர் வரவேற்க, அவருடைய குடிபடைகள் ஆவலாக விஸ்வாமித்திரரையும், இராமரையும் தரிசிக்க, கைகூப்பியபடியே சதானந்தர் என்ற மகரிஷி வந்தார். சதானந்த மகரிஷி கௌதம மகரிஷியின் மகன்.      ” விஸ்வாமித்திரரே என்னுடைய ஆசிரமத்திற்கு இராமரை அழைத்துப் போனீர்களா, என் தாயரை அவர் தரிசித்தாரா, என் தந்தையும், தாயும் அருகருகே நிற்பதை இராமர் கண்ணார கண்டாரா, அவர்கள் சரித்திரத்தை சொன்னீர்களா. இராமரால் அல்லவோ என் தாய்க்கு சாப …

மேலும் படிக்க »