முகப்பு / சுயதரிசனம்

சுயதரிசனம்

ஞானமித்ரர் – 10

சாபமும் வரமாகட்டும் “வாழ்க்கை நமக்கு வழங்கப்பட்டிருக்கும் ஓர் அரிய வாய்ப்பு. அதை வரமாகக் கொண்டாடுவதும், சாபமாக மாற்றுவதும் நம் கைகளில் தான் உள்ளது!” சுவாமி ஸ்ரீ ஞானமித்ரர் அன்றைய பிரசங்கத்தை இப்படித்தான் ஆரம்பித்தார். ‘ஸ்ரீ ஞானாலயம்’ ஆசிரம வளாகத்தில், ஆசிரம சீடர்களும், பக்த அன்பர்களும் சுவாமிகளின் சொற்பொழிவை கேட்பதற்குத் திரளாக அமர்ந்திருந்தனர். அரங்கம் மௌனத்தால் நிறைந்திருந்தது. ஆசிரமத்திற்கு வெளியில், வான வில்லினினின்று மழை அம்புகள் சடசடவென்று வந்திறங்கியது. தூறல் பெருமழையாக …

மேலும் படிக்க »

ஞானமித்ரர் – 9

நிலவொளியில் குளிர்ந்த மனம் வானத்தில் சூரியன் முழுமையாக மறையாததால், நிலா நாணப்பட்டு மெல்ல மெல்ல எட்டிப் பார்த்தது, அந்த நாணத்திற்கு சாட்சியாக மேல் வானம் சிவந்திருந்தது. ‘ஸ்ரீ ஞானாலயம்’ ஆசிரமத்தின் தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்த, சுவாமி ஸ்ரீ ஞானமித்ரரை தொழிலதிபர் ஒருவர் தனிமையில் சந்தித்துப் பேசினார். “சுவாமி, நான் பிறக்கும்போதே பணக்காரன் இல்லை. சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவன்தான். அல்லும் பகலும் மிகக் கடுமையாக உழைத்து இன்று பல தொழிற்சாலைகளை நிறுவியுள்ளேன். …

மேலும் படிக்க »

ஞானமித்ரர் – 8

நஞ்சை முறிக்கும் மருந்து கதிரவன் மேற்கில் கடலுக்குள் மூழ்கி வெகு நேரமாயிற்று. நிலவின் ஒளியில் கரையை நோக்கிப் பாய்ந்து வந்த கடல் அலைகள், கரையைத் தொட்டவுடன், எதையோ சாதித்துவிட்ட மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்துப் பின் வாங்கின. கடற்கரையின் அருகில் இருந்த ‘ஸ்ரீஞானாலயம்’ ஆசிரமத்தில், சுவாமி ஸ்ரீஞானமித்ரரிடமிருந்து கிளம்பிய உற்சாக அலை ஆன்மீக அன்பர்களின் மனத்தை அமைதியால் நிரப்பியது. என்றும் மாறாத புன்முறுவல் தாங்கிய முகத்துடன், சுவாமிகள் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். மாமியார்-மருமகள் உறவில் …

மேலும் படிக்க »

ஞானமித்ரர் – 7

பித்தளை விளக்கும், கடிக்காத செருப்பும் ஸ்ரீஞானாலயம்’ ஆசிரமத்தின், பிரசங்க அரங்கம் பக்த அன்பர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. கோடைகாலத்தின் மாலைவேளையில், கரிய மேகக்கூட்டங்கள் ஆங்காங்கே திரண்டு நின்றபோதிலும், மழை பெய்யாமல் கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருந்தது. பள்ளி விடுமுறையாதலால், ஏராளமான ஆன்மீக அன்பர்கள், சுவாமிகளின் பேச்சைக் கேட்பதற்கு அலை அலையாக வந்திருந்தனர். சுவாமி ஸ்ரீஞானமித்ரர், தன் மென்மையான குரலில் உரையாற்றிக்கொண்டிருந்தார். அன்பர்களே.. சில தினங்களுக்கு முன்பு, புகுந்தவீட்டின் கொடுமையை தாங்க முடியாமல் தற்கொலைக்கு …

மேலும் படிக்க »

ஞானமித்ரர் – 6

புதிய விருட்சத்தில் பூத்த புதுநம்பிக்கை சாலையின் இரு மருங்கிலும், பெரும்பாலான மரங்களை, சமீபத்தில் வீசிய புயல் வேரோடு பிடுங்கி வீசியிருந்தது. ஒடிந்து விழுந்த மரங்கள் அகற்றப்பட்டு, அந்த இடம் வெறுமையாக காட்சியளித்தது. ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்த இளைஞர்களின் மத்தியில் உரையாற்றுவதற்காக சுவாமி ஸ்ரீ ஞானமித்ரரை அழைத்திருந்தனர். சுவாமிகள் பேச ஆரம்பிக்கிறார். ‘நூறு இளைஞர்களை கொடுங்கள், இந்த உலகத்தையே மாற்றி காட்டுகிறேன்’ என்றார் விவேகானந்தர். அத்தகைய திறமை …

மேலும் படிக்க »

சிறுசிறு அல்லது பெருந்தாவல் மேம்பாடுகள்

தனிநபர்கள் ஆகட்டும், நிறுவனங்கள் ஆகட்டும். ஏன் அமைப்புகள் மற்றும் தேசங்களே கூட ’முன்னிலும் கூடுதலாக’, ’முன்னிலும் நன்றாக’, ’முன்பைக்காட்டிலும் பெரிதாக’ ’கடந்த முறையைவிட சிக்கனமாக’ செய்வதையே விரும்புகிறார்கள். அதற்காகவே எப்போதும் முயற்சிக்கிறார்கள். முன்னிலும் நன்றாக என்பதுதான் மேம்பாடு. ஆங்கிலத்தில், ’இம்புரூவ்மென்ட்.’ அப்படிப்பட்ட முன்னேற்றங்கள், மேம்பாடுகள் குறித்துநடைமுறையில் இருக்கும் அணுகுமுறைகளை இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று: பெருந்தாவல் மேம்பாடுகள் – ஜம்ப்ஷிப்ட் இம்புரூவ்மென்ட்ஸ் (Jump shift,/ Leap frog Improvements) …

மேலும் படிக்க »

ஞானமித்ரர் – 5

மலர் மலர்வதைப் போல – 2 சுவாமி ஸ்ரீஞானமித்ரர் உதட்டில் மாறாத புன்னகையுடன் தொடர்ந்து பேசினார். ஒரு ஊரில் பண்ணையார் ஒருவர் இருந்தார். ஊரில் பாதியை வளைத்துப் போட்டிருந்தார். ஒரு ஏழை விவசாயி அவரிடம் கடன் வாங்கியிருந்தார். அந்த விவசாயிக்கு, பதினாறு வயது நிரம்பிய ஒரு அழகான பெண் இருந்தாள். பண்ணையாருக்கு அந்த பெண்ணை எப்படியாவது இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று ஆசை. அதனால் கடன் வாங்கிய விவசாயியிடம் சென்று, …

மேலும் படிக்க »

ஞானமித்ரர் – 4

மலர் மலர்வதை போல – 1 காற்றில் மிதந்து வந்த சந்தன வாசம், பக்த அன்பர்களின் நாசியைத் தாக்கி சுகந்தத்தை ஏற்படுத்திய தருணத்தில், சுவாமி ஸ்ரீஞானமித்ரர் பிரசங்க அரங்கத்தின் நடுவே பிரசன்னமானார். ஞானமித்ர சுவாமிகள் பெருந்திரள் பக்தர்கள் கூட்டத்தின் முன்பு சொற்பொழிவை த் துவங்கினார் அன்பர்களுக்கு இனிய வணக்கம். சில தினங்களுக்கு முன்பு உயர் பதவியில் இருக்கும் அன்பர் ஒருவர் என்னை சந்தித்தார். ‘ஒளிவு மறைவின்றி எதையும் நேரடியாக பட்டென்று …

மேலும் படிக்க »

ஞானமித்ரர் – 3

மழையில் கரைந்த மூட்டை வாழ்க்கையில் ஒரு சிலர் கவலைகளை மூட்டைகளாய், இதயத்தில் சுமந்துகொண்டு காலம் முழுக்க அலைகிறார்கள். அவர்களின் இதயம், அம்மூட்டைகளின் அழுத்தம் தாங்காமல் திணறித் தவிக்கிறது. சுமையை எங்காவது இறக்கி வைக்கமுடியாதா? என மனம் ஏங்கித் திரிகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு சுவாமி ஸ்ரீஞானமித்ரர் ஒரு சுமைதாங்கி. அன்பர்கள் அனுதினமும், அவரோடு தங்கள் பிரச்னைகளை பகிர்ந்துகொண்டு, கவலைகளை கரைத்துவிட்டு, இலேசான மனthதோடு வீடு திரும்புகிறார்கள். சுவாமிகள் எப்போதும் கதைகள் மூலம் அவர்களோடு …

மேலும் படிக்க »

ஞானமித்ரர் -2

முள்பாதையே முன்னேற்றப் பாதை அரவிந்தன் லிப்ட்டில் செல்லலாமா.. இல்லை, படிக்கட்டில் இறங்கலாமா? எனக் குழம்பி, இறுதியில் லிப்ட்டில் பயணமானான். சென்னை வந்ததில் இருந்தே, பல சந்தர்ப்பங்களில் இதுபோல தடுமாறிவருகிறான். கடந்த சிலநாட்களாக இந்த சஞ்சலம் அதிகமாகிவிட்டது. இதைப்பற்றி நண்பனிடம் விவாதித்தபோதுதான், அவன் சுவாமி ஸ்ரீஞானமித்ரரைப் பற்றிக் கூறினான். அவரை சென்று சந்தித்துவிட்டு வந்தால் அனைத்துக் குழப்பங்களும் தீரும் என ஆலோசனை வழங்கினான். இன்று அரவிந்தனுக்கு சுவாமிஜியைப் பார்த்து சிறிது மனம்விட்டுப் …

மேலும் படிக்க »