முகப்பு / முகப்பு ஆசிரியர் – இரா. குமார்

முகப்பு ஆசிரியர் – இரா. குமார்

ஆதிசேஷனின் அவதாரம் – 25

திருக்கோஷ்டியூர் நம்பிகளின் பதில் திருமலையாண்டானை திகைப்படைய வைத்தது. அவர் திடுக்கிட்டு நிமிர்ந்தார். “என்ன சொல்கிறீர்கள்..?” “ஆம்… ஸ்ரீஆளவந்தார் நமக்கு வாயால் சொல்லிக்கொடுத்தார். ஆனால், ராமானுஜருக்கு கண்களாலேயே அனைத்தையும் உணரவைத்துவிட்டார். ஆகையால் எம்பெருமானாரின் கூற்றை ஆளவந்தாரின் உரையாகவே எடுத்துக் கொள்ளுங்கள்…” என்ற திருக்கோஷ்டியூர் நம்பிகளை வியப்பாய் பார்த்தார் திருமலையாண்டான். அவருடைய பதில் திருமலையாண்டானின் மனதில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. இருவரும் புறப்பட்டு ராமானுஜரின் மடத்திற்கு வந்து சேர்ந்தனர். எவ்வித முகச்சுழிப்பும் …

மேலும் படிக்க »

ஆதிசேஷனின் அவதாரம்- ராமானுஜர்- 24

‘ஆகா… ராமானுஜரால் அனுப்பட்டவரா அவர்!’ உடனே ராமானுஜரை அணுகினார். மீண்டும் மன்னிப்பு கோரிக்கை வைக்கப்பட்டது. ராமானுஜர், பெரியவரை நிதானமாய் நிமிர்ந்து பார்த்தார். “முதலியாண்டானை தவிர வேறு வேலையாள் எம்மிடம் இல்லை.உங்களுக்கு அவரை பிடிக்கவில்லை என்றால்,அவருக்கு பதில் நானே உங்கள் வீட்டிற்கு சீதன வெள்ளாட்டியாக வருகிறேன்” என்றார். அடுத்த நொடி நெடுஞ்சாண்கிடையாக ராமானுஜரின் முன் விழுந்தார் பெரியவர். “சுவாமி தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்” எனக் கதறினார். “முதலியாண்டானை திரும்பவும் அழைத்துக்கொள்வது …

மேலும் படிக்க »

நா மணக்கும் நாச்சியார் தமிழ் -9

காறை பூணும் கண்ணாடி காணும்,தன் கையில் வலை குலுக்கும் கூறை உடுக்கும் அயர்க்கும்,தன் கொவ்வைச் செவ்வாய் திருத்தும் தேறித்தேறி நின்று ஆயிரம் பேர்த் தேவன் திறம் பிதற்றும் மாறில் மாமணி வண்ணன் மேல் இவன் மால் ஊறுகின்றாளே ! அழகிய கூறைப் பட்டாடை உடுத்தி, காறை போன்ற ஆபரணங்களை அணிந்து கண்ணாடி முன் நிற்பாள்.கைகள் நிறைய வளையல்கள் அணிந்து அவை ஓசையெழ, குலுக்கிப்பார்ப்பாள். பின் அயர்ச்சியுறுவாள். கோவைக்கனி போன்ற சிவந்த …

மேலும் படிக்க »

அனுமன் சொன்ன அடையாளங்கள் !-பாசுரம் -25

நல்ல தூதுவரின் குணங்களாக அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல்வன்மை ஆகிய மூன்று பண்புகளைக் குறிப்பிடுகிறார் வள்ளுவப் பெருந்தகை. இந்த மூன்றையும் ஒருங்கே பெற்றவர் சிறிய திருவடியான அனுமன். மரத்திலிருந்து குதித்து, அனுமன் சீதையின் முன் நின்றபோது, அனுமனை வேடம் பூண்ட இராவணனாக சந்தேகித்தாள் சீதை . இந்த நிலையில், குழம்பிய மனத்தினளான சீதைக்கு, அனுமன் நம்பிக்கை ஊட்டுவத்றகாக, சொன்ன எட்டு அடையாங்களை பெரியாழ்வார் மூன்றாம் திருமொழி, பத்தாம் பத்தில் …

மேலும் படிக்க »

ஆதிசேஷனின் அவதாரம்- ராமானுஜர்- 23

புகுந்த வீட்டுக்குள் நுழைந்த அத்துழாய் நேரே தன் மாமியார் முன் நின்றாள். “பாவம்… இந்த வயதான காலத்தில் வீட்டு வேலைகளை கவனித்துக்கொள்ள நீங்கள் மிகவும் சிரமப்படுவதை கேள்விப்பட்ட என் தந்தை, இந்த சீதன வெள்ளாட்டியை அனுப்பியுள்ளார்.” தன் பின்னால் நின்ற முதலியாண்டானை கை நீட்டினாள். “இப்பொழுதாவது உன் பிறந்தவீட்டாருக்கு, என் கஷ்டம் புரிந்ததே… என்ற மாமியார், முதலியாண்டான் பக்கம் திரும்பி மேலும் கீழும் அவரை நோக்கினாள். “சுறுசுறுப்பாக வேலை பார்ப்பாயா?” …

மேலும் படிக்க »

ஆசிரியர் – இரா. குமார்

சொற்கோயில் இணைய இதழின் ஆசிரியர் இரா. குமார். தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ., எம்.ஃபில். பட்டம் பெற்றவர். 33 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றி வருகிறார். தினமலர், தினகரன் ஆகிய நாளிதழ்களின் செய்திப் பிரிவின் உயர் பொறுப்புகளை வகித்து திறம்படப் பணியாற்ற்றியவர். சொற்கோயில் என்ற மாதம் இருமுறை ஆன்மீக இதழை சொந்தமாகத் தொடங்கி நடத்தி வந்தார். சொற்கோயில் இதழ் இப்போது இணைய இதழாக வருகிறது. இதற்கும் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுள்ளார். இதழியல் …

மேலும் படிக்க »