முகப்பு / மனம் மலரும் கதைகள் (பக்கம் 2)

மனம் மலரும் கதைகள்

கள்ளனுக்கும் கடவுள் அருள் கிட்டும்

இந்தக் காலத்தில் செயலைவிட பேச்சு மிகுதியாகிவிட்டிருக்கிறது. ஆனால், கடவுளை யாரும் ஏமாற்ற முடியாது. அவர் எல்லாவற்றையும் விழிப்பாக கவனித்து வருகிறார். நடப்பதையெல்லாம் அறிந்தவரும் அவரே. ஒரு முறை ,ஒரு சிவராத்திரி நன்னாளில் பரமேஸ்வரரும், பார்வதியும் வாரணாசியின் மேல், ஆகாயத்தில் உலவிச் சென்றனர். இலட்சக் கணக்கில் மக்கள் ஆற்று ஓரத்தில், அந்த புனித நகரின் சந்துக்களிலும் கூட்டம் கூட்டமாக நிறைந்து சென்றனர். இறைவன் விஸ்வேஸ்வரரது கோயிலை சுற்றிலும் பெண்களும் ஆண்களுமாக பக்தர் …

மேலும் படிக்க »

எது தொண்டு

ஒரு கோயிலின் கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருந்தன. அதற்காக கூலியாட்கள் கல் உடைத்துக்கொண்டிருந்தனர். அங்கே ஒரு துறவி வந்தார். ஒருவனைப் பார்த்து, “என்ன செய்துகொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார். “பார்த்தால் தெரியவில்லையா? கை நோக கல் உடைத்துக்கொண்டிருக்கிறேன்” என்றான். சற்று தூரம் சென்று, வேறு ஒரு கூலி ஆளைப் பார்த்து அதே கேள்வியைத் துறவி கேட்டார். “ வயிற்றுப் பிழைப்புக்காக உழைத்துக்கொண்டிருக்கிறேன்” என்றான். இன்னும் கொஞ்சம் தூரம் சென்று வேறு ஒரு கூலி …

மேலும் படிக்க »

மகிழ்ச்சி எங்கே இருக்கிறது?

வாழ்க்கை என்றாலே இன்பமும் துன்பமும் கலந்ததுதான். எப்போதும் இன்பமோ அல்லது எப்போதும் துன்பமோ எவருக்கும் வருவதில்லை. துன்பங்கள் அதிகமாக வரும்போது, மகிழ்ச்சியான செய்தியும் இறைவனால் ஊட்டப்படும். அந்த மகிழ்ச்சியை நாம் உணர்வதில்லை. ஆனால், மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கும்போது, சிறு துன்பம் வந்தாலும் அதையே நினைத்து நினைத்து கிடைத்த மகிழ்ச்சியை விட்டுவிடுகிறோம். வாமதேவர் ஒரு ஞானி. சூழ்நிலை காரணமாக பிருத்தவ மகாராஜா முன்பு நிறுத்தப்பட்டார். “உமக்கு ஆயிரம் பொற்காசுகளும் ஆறு மாதங்களுக்கு …

மேலும் படிக்க »

ஞானம் பெற வழி

அந்தக் காவலாளி சொன்னதுஅதிர்ச்சியாகவும் குழப்பமாகவும்இருந்தது. பிரம்ம ஞானம் பெறவேண்டும் என்பதற்காக தனது தந்தையின் ஆலோசனைப்படி, ஜனக மகாராஜாவைத் தேடி வந்திருந்தார் சுகமுனிவர். ஜனக மகாராஜா இல்லற ஞானி; துறவிகளால் போற்றப்படும் அரசர். அவரின் அரண்மனை வாயில்காவலனிடம், ‘‘சுக பிரம்ம மகரிஷி அவர்கள் வந்திருப்பதாகச் சொல்”. காவலாளி உள்ளே சென்று வந்தவன் ‘‘அவரை மட்டும் வரச் சொல் என்று அரசர் கூறியதாகக் கூறினான். என்னுடன் யாரும் வரவில்லை. நான் மட்டும்தான் தனியாக வந்திருக்கிறேன். ஆனால் …

மேலும் படிக்க »

நிம்மதியாக வாழ வழி

அரசன் ஒருவனுக்கு எல்லாமும் இருந்தது. ஆனால் நிம்மதியில்லை. அதற்கான காரணமும் தெரியவில்லை. ஒரு நாள், நாட்டைச் சுற்றிப் பார்த்துக்கொன்டு வந்தான். அப்போது ஒரு உழவன் ஆடிப் பாடிக்கொண்டு மிக மகிழ்ச்சியாக வயலில் வேலை “செய்து கொண்டிருப்பதைக் கண்டான். அவனிடம் கேட்டான்.. ‘‘உழவரே…. மிக மகிழ்ச்சியாய் இருக்கிறாயே…எத்தனை காணி நிலம் வைத்திருக்கிறாய்?” ‘‘ஐயா…ஒரு செண்ட் நிலம் கூட இல்லை. இது என் எசமானுக்கு சொந்தமான நிலம்.கூலிக்கு வேலை செய்கிறேன் நான்.” ‘‘எவ்வளவு …

மேலும் படிக்க »