முகப்பு / மனம் மலரும் கதைகள்

மனம் மலரும் கதைகள்

கடவுள் எப்படி கை கொடுப்பார்?

ஆற்றின் கரை உடைப்பால், அந்தக் கிராமமே மூழ்க ஆரம்பித்துவிட்டது. எல்லோரும் வெளியேறத் தொடங்கிவிட்டனர். ஒருவன் மட்டும், “நான் உங்களைப் போல பயந்து ஓடமாட்டேன். நான் பக்தன்; கடவுளை நம்புகிறவன். கடவுள் என்னைக் காப்பாற்றுவார்” என்று சொல்லிவிட்டு அங்கேயே தங்கிவிடுகிறான். அன்று இரவு, வீட்டுக்குள் வெள்ளம் புகுந்துவிட்டது. அவன், கூரை மீது ஏறி நின்றுகொண்டு கடவுளை நோக்கிப் பிரார்த்தனை செய்தான். அப்போது, கிராமத்தினர் சிலர் படகில் ஏறி, தப்பிச் சென்றுகொண்டிருந்தனர். பக்தனைப் …

மேலும் படிக்க »

துணை வருவாள் துர்க்கையம்மன்-2

ஆமா. . . கெணத்துத் தண்ணிய வெள்ளமா கொண்டு போகப்போகுது. . . நீ நல்லபடியாக வேலையில சேர்ந்து. . .பயம் இல்லாமல் பத்திரமா. . . இருக்கணும் ஆத்தா.. . பட்டீஸ்வரம் துர்க்கைன்னா. . . பகையாளி பத்து மைல் தூரத்திற்கு ஓடிடுவான். . உங்க அப்பனுக்கு இது ஒண்ணுல தான் புத்தி ஒழுங்கா வேலை செஞ்சிருக்கு. . . இல்லைன்னா வெட்டி வீராப்பு பேசிகிட்டு திரிவான். . …

மேலும் படிக்க »

துணை வருவாள் துர்க்கையம்மன்-1

அந்த சீட்டில் சரண்யாவை சுற்றிலும் ஐந்து ஆண்களே உட்கார்ந்திருந்தார்கள். அத்தன பேரும் குடித்திருந்தார்கள். பெரிய அளவில் கூட்டமில்லாத ரயிலில் மற்ற கம்பார்ட்மென்ட்டில் இருந்தவர்களும் நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தனர். இப்படி தனியாக மாட்டிக்கொண்டதை நினைத்து பயந்து கிடந்தாள் சரண்யா. ஐந்து பேரும் இவளை விழுங்கி விடுவதைப் போல பார்த்துக் கொண்டிருந்தார்கள், சரண்யா பட்டீஸ்வரம் துர்க்கையை வேண்டிக்கொண்டாள். இரண்டு மூன்று நாட்களாக நடந்ததெல்லாம் சரண்யாவிற்கு மனத்திரையில் நிழலாடின. சரண்யா எவ்வளவு சந்தோஷமாக …

மேலும் படிக்க »

தர்மத்தின் பாதை – 2

“அய்யா! அது மிக சுலபம். கட்டாயம் நீங்கள் புரிந்து கொள்ளும்படியான ஒரு ஏற்பாட்டை செய்கிறேன். என்னுடன் வாருங்கள்என்று, அந்த செல்வந்தரின் வீட்டிற்கு எதிரில் உள்ள குளக்கரைக்கு அழைத்துச் செல்கிறாள்.அங்கே குளக்கரையிலே கருங்கல்லால் ஆன சிவலிங்கத்தைக் காட்டி, ”எம்பிரானே! அடியேன் செய்த அறக்காரியங்களை சொல்லிக்காட்டக் கூடாது. என்றாலும், கடனிலிருந்து தப்பிக்க, இந்த அபவாதத்தை செய்கிறேன். தேவரீர், இந்த திருக்குளத்தின் அடியில் இருக்க வேண்டும். எப்பொழுது, அடியேன் கணக்கில் இருந்து அசலும்,வட்டியுமான புண்ணியம், …

மேலும் படிக்க »

தர்மத்தின் பாதை – 1

நம் தமிழகத்திலிருந்து, ஒரு குடும்பம், காசிக்குச் சென்று, ஏதோ ஒரு காரணத்தால் அங்கேயே தங்க நேரிடுகிறது. அது. அந்தண குலம் என்பதால், வேதம் ஓதுவதும், குழந்தைகளுக்கு வித்தை போதிப்பதுமாக அந்தக் குடும்பத் தலைவர் இருக்கிறார். கால ஓட்டத்தில், அந்தக் குடும்பத் தலைவி இறந்து விடுகிறார். தன் ஒரே மகளை செல்லமாக வளர்ப்பதோடு, நிறைய சாஸ்திரங்களையும் அப்பெண்ணுக்கு தந்தையானவர் கற்றுத் தருகிறார். மகளும் வளர்கிறாள். மகள் வளர, வளர, தந்தைக்கு ஒரு …

மேலும் படிக்க »

அன்புக்குப் பணிந்த அங்குலிமாலா

ஷ்ரவந்தி நாட்டின் எல்லையில் உள்ள காட்டில் அங்குலிமாலா என்பவன் வசித்து வந்தான். அவன் ஒரு தேர்ந்த வழிப்பறிக் கொள்ளைக்காரன். அந்த பக்கம் பயணம் சென்றவர்களையும், தான் தங்கியிருந்த இடத்தை நெருங்கி வந்தவர்களையும் கொள்ளையடித்து கொலையும் செய்து வந்தான். அவனுக்கு அஞ்சி மக்கள் அந்த வழியே போவதையே நிறுத்திவிட்டனர். இந்த பெரும் கொள்ளைக்காரன் அவர்களது உடமைகளை எல்லாம் சூறையாடுவதோடு அல்லாமல் , அவர்களுடைய சுண்டு விரலை வெட்டியும் வந்தான். அந்த விரல்களை …

மேலும் படிக்க »

பணிவும் துணிவும்

மன்னர் அசோகர் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரில் வந்து  கொண்டிருந்த ஒரு வயோதிக புத்த பிட்சு மன்னரும் அவரது ஆட்களும் செல்ல வழிவிட்டு, ஓர் ஓரமாக ஒதுங்கி நின்றார். அசோகச் சக்கரவர்த்தி அவரைப் பார்த்துவிட்டார். உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு, இறங்கிச் சென்று புத்த பிட்சுவின் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தார். அவரது சிரம் துறவியின் காலில் பட்டது. துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசிர்வதித்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் சங்கடப்பட்டார். ‘ஒரு மண்டலாதிபதி …

மேலும் படிக்க »

வாழ்வு, தேவை, ஆசை

மன்னர் பொன்னரசன் ஒரு நாள், அரசகுரு ஆளுடை நம்பியிடம், வாழ்வு, தேவை, ஆசை இவற்றுக்கான வாழ்வியல் தத்துவத்தைக் கூறுமாறு கேட்டார். சில குறிப்புகளைக் கூறினார் குரு. அதன்படி, அரசனுக்கு முன் பாதுகாப்புக்கும் பாதை காட்டவும் செல்லும் குதிரை வீரன் வல்லவன் வரவழைக்கப்பட்டான். மன்னன் அவனைப் பார்த்து, “ உனக்கு எவ்வளவு நிலம் வேண்டுமோ அவ்வளவு தூரம் குதிரையில் சென்று, அடையாளம் இட்டுவா. அவ்வளவு இடத்தையும் உனக்கே தருகிறேன்” என்றான். “மாமன்னரே! …

மேலும் படிக்க »

நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது

மகபாரதப்போரின் பத்தாவது நாளில் பீஷ்மர் வீழ்ச்சியடைந்தார். பதினெட்டாம் நாள் போர் முடியும்வரை, போரின் பல நிகழ்ச்சிகளை கவனித்துக்கொண்டிருந்தார் கிருஷ்ணர். அம்புப் படுக்கையில் படுத்திருந்தார் பீஷ்மர். போரில் வெற்றி பெற்றதும் பாண்டவர்கள் ஐந்து பேரும், பாஞ்சாலியுடன் பீஷ்மரைப் பார்க்க வந்தனர். அவர்களிடம், அம்புப் படுக்கையில் படுத்தவாறே பாச உணர்வுடன் பேசினார் பீஷ்மர். சாந்தி பருவம் என்று போற்றப்படும் அமைதி நூலை அவர்களுக்குப் போதித்தார். ஒருவன் அமைதி பெறக் கூடிய ஒழுக்க நிலையின் …

மேலும் படிக்க »

கடவுளும் கணிதமும்

ஒரு பகுத்தறிவுவாதிக்கும் ஆன்மீகவாதிக்கும் நடந்த சுவையான உரையாடல்: பகுத்தறிவுவாதி: கடவுள் யார்? சரியான விளக்கத்தைக் கொடுங்கள். கடவுள் இருக்கிறார் என நம்புகிறேன். ஆன்மீகவாதி: “ஆதியுமில்லா அந்தமுமில்லா அருட்பெருஞ்ஜோதி தான் கடவுள் “ பகுத்தறிவுவாதி: இதுதான் பிரச்னை. அதெப்படி? துவக்கமுமில்லாத முடிவுமில்லாத என்ற ஒன்று எப்படி இருக்க முடியும். திட்டமிட்டு உறுதியாக இவர்தான் கடவுள் என்றுகூடச் சொல்லமுடியவில்லை. ஆனால் அறிவியல் திட்டவட்டமாக ஒவ்வொரு விஷயத்தையும் வரையறுத்துச் சொல்கிறது. அதனால்தான் அறிவியலை நம்புகிறேன். …

மேலும் படிக்க »