முகப்பு / மகான்கள் / பூலோக தெய்வங்கள் / யோகி ராம்சுரத் குமார்

யோகி ராம்சுரத் குமார்

பூலோக தெய்வங்கள்-யோகி ராம்சுரத் குமார் -3

ஒன்று அரவிந்தர், மற்றொன்று ரமணர் முக்தியடைந்த செய்திகள் அவை. குன்வரின் மனதிற்குள் பெரும் புயல் அடிக்க ஆரம்பித்தது. இனி தன் கைபிடித்து வழிகாட்டுபவர் எவர்? குழப்பம் முழுமையாய் சூழ்ந்தது. இனி பாபா ராம்தாஸ் மட்டுமே தனக்கான வழிகாட்டி என்பதை உணர்ந்தார் அவர். குன்னங்காடு சென்று ராம்தாஸை மீண்டும் சந்தித்தார். குன்வருக்கு தீட்சையளிக்க முடிவுசெய்யப்பட்டது. குன்வரை அமரவைத்து, அவரெதிரில் அமர்ந்தார் ராம்தாஸ். “நான் உச்சரிக்கும் மந்திரத்தை இடைவிடாது உச்சரித்துக்கொண்டே இரு… ஓம் …

மேலும் படிக்க »

பூலோக தெய்வங்கள்-ராம்சுரத் குமார் -2

ஆனந்தவனம், மகாமயானம், அவிமுக்தம் என்றெல்லாம் புராணகாலத்தில் அழைக்கப்பட்ட காசி நகரம், சாதுக்களாலும் அகோரிகளாலும் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. கடிவாளம் கட்டியதுபோல் நேரே விசுவநாதர் சந்நிதிக்குள் நுழைந்தார் குன்வர். அனைவரையும் ஆட்கொண்ட ஆடலரசன் அவரை மட்டும் விட்டுவிடுவானா என்ன! விசுவநாதரை தரிசித்துக்கொண்டே இருக்க மனம் விரும்பியது. பல நாட்கள் குழப்பம் நீடித்த மனதில் குதூகலம் நிரம்ப ஆரம்பித்தது. உடலின் உச்சியிலிருந்து பாதம்வரை பரவச உணர்வு பரவியது. சிந்தனையே இல்லாத பேரானந்தம் அது. இன்னும்… …

மேலும் படிக்க »

பூலோக தெய்வங்கள் ராம்சுரத்-குமார்-1

‘குக்கூ… குக்கூ…’ குருவி அழகாய் கூவியது. கிணற்றில் நீர் எடுத்துக்கொண்டிருந்த பதிமூன்று வயது சிறுவன் ராம்சுரத் குன்வர் தலை நிமிர்ந்து பார்த்தார். ‘அட… என்ன ஒரு அழகான குருவி! உடல் முழுவதும் பொன் துகளை தூவியது போலிருக்கிறதே!’ குன்வருக்குள் ஆச்சர்யம் அரும்பியது. நீர் நிரம்பிய வாளியை கீழே வைத்துவிட்டு தன் சிறிய விரல்களால் குருவியை ‘இங்கே வா’ என்பதுபோல் அழைத்தார். குருவி தலை சாய்த்து குன்வரை பார்த்தது. சில நொடி …

மேலும் படிக்க »