ரமண மகரிஷி

ரமண மகரிஷி -2

வீட்டைவிட்டுக் கிளம்பிய வெங்கட்ராமன் கிடைத்த ரயிலில் ஏறினான். திருவண்ணாமலை செல்லும் முடிவோடு இருந்தவன், பாதி தூரத்தை ரயிலிலும், மீதி தூரத்தை நடையிலுமாகக் கடந்தான். கையிலிருந்த மூன்று ரூபாய் ரயில் டிக்கெட்டாக மாறியிருந்தது. எதிரில் தென்படும் கோயிலில் பிரசாதங்களை வாங்கி உண்டு பசியை போக்கிக்கொண்டான்.உணவு கிடைக்காதபோது பட்டினி கிடக்க நேரிட்டது. அதனால் தன் காதில் கிடந்த கடுக்கனை கழற்றி ஒரு பிராமணரிடம் விற்றுவிட்டு பணம் வாங்கிக்கொண்டு ஒரு அதிகாலைப்பொழுதில் திருவண்ணாமலையை அடைந்தான். …

மேலும் படிக்க »

ரமண மகரிஷி -1

சோர்வாக வீட்டினுள் நுழைந்தார் நெல்லையப்பர். அழகம்மையும், நாகசாமியும் ஆர்வமாய் அவரை சூழ்ந்துகொண்டனர். “சித்தப்பா, போன காரியம் என்னாச்சு? நம்ம வெங்கட்ராமனை பார்த்தீங்களா? வீட்டுக்கு வர அவன் சம்மதிச்சானா?” கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார் நாகசாமி. ‘பொறு’ என்பதுபோல் சைகை காட்டியபடி அருகிலிருந்த ஒரு சொம்பு நீரையும் வயிற்றுக்கு கொடுத்துவிட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார் நெல்லையப்பர். “நாம எது நடக்கக்கூடாதுன்னு நினைச்சோமோ அது நடந்துபோச்சு. மூணு தலைமுறைக்கு முன்னால யாரோ ஒரு சந்நியாசி …

மேலும் படிக்க »