முகப்பு / மகான்கள் / பூலோக தெய்வங்கள் (பக்கம் 3)

பூலோக தெய்வங்கள்

ஷீரடி பாபா – 14

விதிக்கு விதி “மகான் பாபாவே!, என்றும் போல் இன்றும் என்னைக் காக்க வேண்டும்” என்று ஜஹாங்கீர் தனது வீட்டில் மாட்டப்பட்டிருந்த பாபாவின் படத்தைப் பார்த்து வணங்கிவிட்டு , தான் ஏற்றுள்ள வேலைக்கு உரிய யூனிபார்ம் உடைகளை அணியத் தொடங்கினார். அது முடிந்ததும் தனது கோட் பாக்கெட்டில் இருந்த ஒரு சிறிய பாபா படம் பத்திரமாக உள்ளதா என்பதையும் சரி பார்த்துக் கொண்டார். அந்த மகானின் படமில்லாமல் ஜஹாங்கீர் வெளியில் எங்கும் …

மேலும் படிக்க »

தட்சிணாமூர்த்தி சுவாமிகள் -2

“குழந்தை உறங்கியதே … கடவுளே” என கதறிய அய்யங்காரிடம் ஒரு பெண்மணி குழந்தையை பத்திரமாக ஒப்படைத்தாள். “சிவனடியார் ஒருவர் குழந்தையை காப்பாற்றி என்னிடம் கொடுத்தார் என்று சொன்னாள்.அய்யங்கார், அருணாச்சல மகிமையை நினைத்து நெஞ்சுருகினார். தன் குழந்தைக்கு உயிர்ப் பிச்சை கொடுத்ததால், வைணவ சம்பிரதாயத்திற்கு மாறாக ‘அருணாச்சலம்’ என்றே அக்குழந்தைக்கு பெயர் சூட்டினார். இப்படி தனது இறைசக்தியால் பலருக்கும் பலவித நன்மைகளை செய்துவர ஆரம்பித்தார் சுவாமிகள். தன்னுடைய பெற்றோர் சிவனின் பாதங்களை …

மேலும் படிக்க »

பட்டினத்தார் -2

cஎவ்வித தொலைதொடர்பு வசதிகளும் இல்லாத காலத்தில் அன்னை அமரத்துவம் அடைந்த செய்தி தெரிந்து, எப்படி வந்து சேருவார் பட்டினத்தார்? அதற்கு ஒரு உபாயம் செய்திருந்தார் அவரது தாய். ஒற்றை முடிபோட்ட சிறு துணியை அவரது இடுப்பில் கட்டி, ‘இது என்று அவிழ்கிறதோ, அன்று நானில்லை’ என்று சொல்லியிருந்தார். பல சிவதலங்களை தரிசித்து முடித்து, திருவிடைமருதூர் வந்து சேர்ந்தார் பட்டினத்தார். அவரது இடுப்பிலிருந்த முடிச்சும் அவிழ்ந்தது. விக்கித்துப்போனார். தாயை கூற்றுவன் கூட்டிக்கொண்டுவிட்டான் …

மேலும் படிக்க »

ஷீரடி பாபா – 13

பாபாவின் அன்பு விளையாட்டு மகான் பாபாவின் பக்தர் ரேகே. காலையில் படுக்கையை விட்டு சீக்கிரமே எழுந்தார். அப்போது அவர் மனத்தில் ஒரு ஆசை எழுந்தது. அவரை, மகானின் செல்லப்பிள்ளை என்றே எல்லாரும் கூறுவார்கள். அவருடைய ஆசைதான் என்ன? அன்று ஸ்ரீ ராம நவமி. ( ஆண்டு 1916) மிக மிகச் சிறப்பாக மகானின் பக்தர்களால் நடத்தப்படும் அந்தத் திருவிழாவில் மகான் பாபாவும் கலந்து கொண்டு ஆசிர்வதிப்பார். அதே நேரத்தில் முஸ்லிம் …

மேலும் படிக்க »

ஷீரடி பாபா 12

“ பீஷ்மா! பீஷ்மா!!” பீஷ்மாவின் வீட்டுக்கு வந்த அவருடைய நண்பர் ஒருவர், இரண்டு முறை இரைந்து கூப்பிட்டும், ஏதோ பறி கொடுத்த முகத்துடன் இருக்கையில் உட்கார்ந்திருந்த அவர் , அசைந்து கொடுக்கவில்லை. வந்தவர் அந்த வீட்டின் உள்ளே நுழைந்து உரிமையுடன் பீஷ்மாவின் தோளைத் தட்டிய பிறகே அவர் சட்டென்று திரும்பி , “ நீயா..வா! எப்போது வந்தே!” எனக் கேட்டவாறே வந்தவரை தன் எதிரே இருந்த நாற்காலியைக் காட்டி அமரும்படி …

மேலும் படிக்க »

தட்சிணாமூர்த்தி சுவாமிகள் -1

“அண்ணாமலையார் நம்மைஇப்படிசோதிக்கிறாரே. குழந்தை இல்லை என்கிற குறையைப் போக்கியவர், அதற்கு பேசும் சக்தியைத் தரமறுத்துவிட்டாரே…” அழுதுபுலம்பும் மீனாம்பிகையைக் கவலை ததும்பும் கண்களோடு பார்த்தார் சிவசிதம்பரம்பிள்ளை. “ஒன்றை கவனித்தாயா மீனாம்பிகை… குழந்தை சிரிப்பதுமில்லை. பசி வந்து அழுவதுமில்லை. எப்பொழுதும் சிந்தனை வயப்பட்டதாகவே காணப்படுகிறது. இதற்கான காரணத்தை அந்த ஈசன்தான் விளக்கவேண்டும்.” கைகூப்பினார் அவர். இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல், அவர்களுக்கு அருகிலேயே பத்மாசனமிட்டு தியானத்தில் ஆழ்ந்திருந்தது குழந்தை அருணாச்சலம். நீண்ட நாட்களாக குழந்தை வரம் …

மேலும் படிக்க »

பட்டினத்தார் -1

திருவொற்றியூர்… வடிவுடையம்மன்ஆட்சிபுரியும் திருத்தலம். நடராஜர் தியாகராஜராக காட்சிதரும் திருத்தலம். கலிய நாயனார் அவதாரம் நிகழ்ந்த தலம். கம்ப ராமாயணம் பிறந்த தலம். இன்னும் பல பெருமைகள் படைத்த இத்தலத்தை, ‘வாவியெல்லாம் தீர்த்தம் மணல் எல்லாம் வெண்ணீறு காவணங்கள் எல்லாம் கணநாதர் பூவுலகில் ஈது சிவலோகம்’என்கிறார் பட்டினத்தார். ஒற்றியூரில் ஓடும் நீர்நிலைகள் அனைத்துமே புண்ணிய தீர்த்தம்.இங்குள்ள மண் முழுவதும் திருநீறு. இவ்வூரில் சிதறிக்கிடக்கும் கற்கள் ஒவ்வொன்றும் சிவலிங்கம். ஒட்டுமொத்தத்தில் இதுவே பூமியில் …

மேலும் படிக்க »

ஷீரடி பாபா -11

ஸ்ரீ ராம நவமியும் மகான் சாய் ராமும்!! பாண்டே என்கிற ஷாமா, கோபால் கண்ட், தாத்யா கோதே, ஆகியோர் ஒரு நாள் ஒன்று கூடி வரும் சித்திரை 8ம் தேதியிலிருந்து 12ம் தேதி முடிய , ஸ்ரீ ராம நவமி விழாவை ஷீரடியில் நடத்த வேண்டும் என்று தீர்மானித்து அதற்கான முன்னேற்பாடுகளைத் துவங்கிவிட்டனர். இந்த உத்தேச திருவிழா நடத்த முன்னோடியாக அமைந்தது கடந்த 1897ம் ஆண்டு முதல் ஷீரடி கிராமத்தார் …

மேலும் படிக்க »

ஷீரடி பாபா -10

“ கருணைக்கல்” பல ஊர்களைச் சுற்றி அலைந்து அந்த இளைஞன் தலைவிரி கோலமாகவும் அழுக்கடைந்த ஆடைகளுடனும் மிகச் சோர்வாகவும் வந்தடைந்த இடம் மகான் ஷீரடி சாய் பாபா எழுந்தருளி பக்தர்களின் குறைகளைக் கேட்டு , நிவர்த்தியளித்துக் கொண்டிருந்த ஷீரடி சிற்றூர். இளைஞன் , ஷீரடிவாசிகள் ஒவ்வொருவரையும் பொறுமையுடன் அனுகி தான் ஒரு நபரைத் தேடுவதாகவும், அவர் ஒரு பக்கீர் எனவும், மெலிந்த தோற்றமும் , கனிவான பார்வையும் கொண்டவர் என …

மேலும் படிக்க »

ரமண மகரிஷி -2

வீட்டைவிட்டுக் கிளம்பிய வெங்கட்ராமன் கிடைத்த ரயிலில் ஏறினான். திருவண்ணாமலை செல்லும் முடிவோடு இருந்தவன், பாதி தூரத்தை ரயிலிலும், மீதி தூரத்தை நடையிலுமாகக் கடந்தான். கையிலிருந்த மூன்று ரூபாய் ரயில் டிக்கெட்டாக மாறியிருந்தது. எதிரில் தென்படும் கோயிலில் பிரசாதங்களை வாங்கி உண்டு பசியை போக்கிக்கொண்டான்.உணவு கிடைக்காதபோது பட்டினி கிடக்க நேரிட்டது. அதனால் தன் காதில் கிடந்த கடுக்கனை கழற்றி ஒரு பிராமணரிடம் விற்றுவிட்டு பணம் வாங்கிக்கொண்டு ஒரு அதிகாலைப்பொழுதில் திருவண்ணாமலையை அடைந்தான். …

மேலும் படிக்க »