முகப்பு / மகான்கள் / பூலோக தெய்வங்கள் (பக்கம் 2)

பூலோக தெய்வங்கள்

ஸ்ரீ அன்னை-2

“மிர்ரா… காத்து பலமா அடிக்குது. இந்த பக்கம் வந்துடு…” தோழிகள் கத்தினர். அதற்குள் அந்த பலத்த காற்று மீராவை நிலைகுலையச் செய்து மலையிலிருந்து தள்ளியது. கீழே….அதல பாதாளத்தை நேக்கி பயணிக்க ஆரம்பித்தாள் மிர்ரா. “மிர்ரா… மிர்ரா… ஐயோ யாராவது காப்பாத்துங்களேன்…” கத்திகொண்டே மலையிலிருந்து தபதபவென இறங்க ஆரம்பித்தனர் தோழிகள். அலறியடித்துக்கொண்டு மலையடிவாரம் வந்துசேர்ந்த பொழுது, மிர்ரா ஒன்றுமே நடக்காததுபோல் நின்றுகொண்டிருந்தாள். உடலில் சிறு சிராய்ப்பும் இல்லை. ‘எப்படி இது சாத்தியம்? …

மேலும் படிக்க »

ஷீரடி பாபா- 20

கயா தரிசனம் =============== ஷீரடி மசூதியில் வழக்கம் போல பக்தர்கள் கூட்டம் திரண்டிருந்தது. மகானின் அணுக்கத் தொண்டர் காகா சாகேப் தீட்சித், பாபாவின் அருகில் நின்று காத்திருந்தார். பக்தர்கள் தரிசனம் பெற்று முடிந்ததும், தனது கோரிக்கையை பகவானிடம் தெரிவிக்க வேண்டும் என்ற பதற்றம் அவர் முகத்தில் காணப்பட்டது. கூட்டம் சற்று குறைந்ததும், “என்ன விஷயம் சொல்லலாமே” என்று தீட்சித்திடம் கனிவுடன் சொன்னார் பாபா. “பகவானே தங்களிடம் முன்பே தெரிவித்திருந்த தேதி, …

மேலும் படிக்க »

ஸ்ரீ அன்னை -1

உணவு இடைவேளையின் பொழுது வகுப்பறைக்குள் நுழைந்தான் அந்த மாணவன். பதிமூன்றை ஒட்டிய வயதிருக்கும் என உருவமும், உயரமும் சொன்னது. கண்களில் அந்த வயதிற்குரிய குறும்பு கொப்பளித்தது. “ஏய் குண்டுப் பொண்ணு… இப்படியே சாப்பிட்டுக்கிட்டே இருந்தேன்னா வெடிச்சிடுவ…” உணவருந்திக் கொண்டிருந்த சிறுமியை பார்த்து கமெண்ட் ஒன்றை உதிர்த்தான். அடுத்ததாக அமர்ந்திருந்த சிறுமியின் தலைமுடியை பிடித்து இழுத்தான். மற்றொருத்தியை பார்த்து “ஏன்…இவ்வளவு அழுக்கா தெரியிற… குளிக்கவே மாட்டியா?” என்றான். கண்ணில் பட்டவர்களை எல்லாம் …

மேலும் படிக்க »

ஷீரடி பாபா – 19 – விட்டோபா தந்த அதிசய தரிசனம்

மகாதாரா என்று ஷீரடி நாதனால் செல்லமாக அழைக்கப்படும் தார்கட் என்ற பிரமுகர்.  பாபாவின் அனுக்கத் தொண்டர்களில் குறிப்பிடத்தக்கவர். அவரது மொத்த குடும்பமும் மகான் சாய் பாபாவை வழிபடுவதும் , தரிசிப்பதும் தாங்கள் செய்த பாக்கியமாக கருதி வாழ்பவர்கள். தார்கட்டின் மனைவி அடிக்கடி ஷீரடி சென்று மகானின் தரிசனம் பெறுவதையும், அவருக்கு சேவை புரிவதையும் தன்னுடைய முக்கிய கடமையாக கொண்டிருந்தார்.  இருந்தாலும் அப்பெண்மணிக்கு,  தான் சார்ந்த இந்து மதத்திலும் தீவிர ஈடுபாடு …

மேலும் படிக்க »

விட்டோபா சுவாமிகள் – 2

“எனக்கென இருந்தது அதுமட்டுமே. அதையும் ஈசன் எடுத்துக்கொண்டான் என நினைத்தேன்…” திரும்பிப் பார்த்தார் தோதா. காவி உடையுடன் நின்றிருந்தார் ஒரு சாமியார். திருவோட்டுடன் நீந்தி கரைக்கு வந்த தோதா அதை அவரிடம் ஒப்படைத்தார். “திருவோட்டை திரும்பவும் என்னிடம் சேர்த்த உனக்கு என்ன வேண்டும் சொல் தம்பி” அவர் குரலில் பரிவு தென்பட்டது. தோதா யோசித்தார். “என்ன கேட்கிறதுன்னு தெரியலை. எனக்கு தெரிஞ்சதெல்லாம் விட்டோபாதான். அவரைப் பார்க்கணும்…” சாமியார் சிரித்தார். “அவன் …

மேலும் படிக்க »

ஷீரடி பாபா -18 -வித்தியாசமான மருத்துவர்

“ சார் ! சார் ! மிஸ்டர் பிள்ளை!” பிள்ளை என்பவரின் வீட்டில் வாசற்புறம் நின்று கொண்டு அவருடைய நெருங்கிய நண்பர் தீட்சித் உள் நோக்கி குரலெழுப்பினார். ஷீரடி மகானின் திவிர பக்தரான அவர் அடிக்கடி ஷீரடி சென்று பாபாவை தரிசிக்கும் பழக்கமுடையவர். சில நாட்களுக்கு முன்னால் , பிள்ளையின் உடல்நிலை குறித்து விசாரிக்க வந்திருந்த தீட்சித் , தற்போது அவர் உடல்நிலை என்னவென்பதை அறிந்துகொள்ளவே மீண்டும் வந்திருந்தார். தீட்சித்தின் …

மேலும் படிக்க »

ஷீரடி பாபா – 17

வாமன் எடுத்த விஸ்வரூபம் மணி கௌரி என்ற அந்தப் பெண், வேதனையில் தவித்துக்கொண்டிருந்தார் அன்று. காரணம் ஐந்து வயது கொண்ட அவளுடைய பிள்ளை வாமன் கடும் வயிற்றுப் போக்கால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான். தொடர்ந்து நாலைந்து நாட்களாக கடும் வயிற்று வலி. ஏதேதோ சிகிச்சை அளித்து சமாளித்து வந்தார். அன்று நிலைமை கை மீறிப் போய்விட்டது. மணி கௌரியின் கணவர் பிராண் கோவிந்த் லால் பாய் படேல். பிரிட்டிஷ் அரசுத் துறையில் …

மேலும் படிக்க »

விட்டோபா சுவாமிகள் – 1

“ஏய்… யாருப்பா அது… இன்னும் இங்கே உட்கார்ந்திருக்கிறது? நேரமாச்சு எந்திரிப்பா. சத்திரத்தை பூட்டணும்…” சொல்லிக்கொண்டே வந்தான் காவலாளி. அவன் சொல்லிய எதையும் காதில் வாங்காமல் எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தார் தோதா . “உன்னைத்தான்பா சொல்றேன். இடத்தை காலிபண்ணு” தோதாவின் கையைப் பற்றி இழுத்தான் அவன். ம்ஹும். இம்மி அளவும் அசைக்க முடியவில்லை. குண்டுக்கட்டாய் தூக்கி வெளியில் போட்டுவிட நினைத்து லாவகமாய் தூக்க முயற்சித்தான். சக்தி முழுவதும் விரையமாகி, உடம்பில் வியர்வை …

மேலும் படிக்க »

ஷீரடி பாபா – 16

பாபா காட்டிய அற்புதம்! “ஷியாமா !. என்ன செய்தாய்? இங்கே வா!” என பாபா ஆக்ஞையிட, ஒரு சில வினாடிகளில் மசூதி சுவரில் சாய்ந்து தரையில் தனது கால்களை நீட்டியவாறு அமர்ந்திருந்த பாபாவிடம் அவர் வந்து சேர்ந்தார். “என்ன அப்பனே , கையில்?” “பாபா , தங்கள் கால்களைக் கழுவி பிடித்து விடலாம் என்பதற்காக வெந்நீரை இந்த குவளையில் கொண்டுவந்துள்ளேன்” என ஷியாமா சொல்ல, “சும்மா தான் அழைத்தேன்“ என்றார் …

மேலும் படிக்க »

ஷீரடி பாபா – 15

அன்னை கொண்ட ஆசை!! மகான் ஷீரடி பாபாவை தரிசிக்க அந்த பட்டதாரி விரும்பியதற்கு காரணம் அவரிடம் நீண்ட காலமாக அவருடைய அன்னையும் , வேறு சில நண்பர்களும் ஷீரடி பாபாவை பற்றியும், அவரின் அற்புதங்களைப் பற்றியும் தொடர்ந்து கூறியதே. திடீரென ஒரு நாள் அந்த பட்டதாரி இளைஞன் தன் இருப்பிடமான நாக்பூரை விட்டு ஷீரடிக்கு கிளம்பிவிட்டார். முதல்முறையாக அவர் அவ்வூர் சென்றதால், அங்குள்ள சில கிராமவாசிகளிடம் விவரம் அறிந்துகொண்டு பாபா …

மேலும் படிக்க »