ராமானுஜர்

ஆதிசேஷனின் அவதாரம் -8

“எப்படி இருக்கிறீர்கள் அம்மா…?” குரல் கேட்டு நிமிர்ந்த காந்திமதி, ராமானுஜனை கண்டதும் இருப்பிடத்தை விட்டு எழுந்து ஓடிவந்தாள். “அடடே… ராமானுஜா வாப்பா வா…. எனக்கென்ன நல்லா இருக்கேன். உன்னுடைய பிரயாணமெல்லாம் எப்படி இருந்தது? சென்ற சில நாட்களுக்குள் திரும்பி வந்துவிட்டாயே?” “அம்மா… அனைத்தையும் விரிவாகச் சொல்கிறேன். தஞ்சா எங்கே?” ராமானுஜரின் தேடலைக் கண்ட காந்திமதி சிரித்தவாறே, “தஞ்சா… தஞ்சா… இங்கே யார் வந்திருப்பதுன்னு பாரு” என்று உள்நோக்கி குரல் கொடுத்தாள். …

மேலும் படிக்க »

ஆதிசேஷனின் அவதாரம் -7

எதிரே தெரிந்த பாதையை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார் ராமானுஜர். காலடிச்சத்தம் அவரை நெருங்கியது. ராமானுஜரின் இதயம் இருமடங்கு வேகத்தில் துடிக்க ஆரம்பித்தது. ‘யாதவப்பிரகாசரின் மாணவர்கள்தான் தன்னை தேடிவந்திருக்க வேண்டும்.’ நினைத்த அடுத்தநொடி, அவரின் முன்னால் நின்றார்கள்… அந்த வேடுவத் தம்பதியினர். ராமானுஜரின் மனம் குழப்பத்தை விலக்கி சமநிலைக்கு வந்தது. “யாருப்பா நீ..? கொடிய மிருகங்கள் இருக்கிற இந்த காட்டுக்குள் என்ன செய்யிற..?” வேடன் கேட்டான். “அய்யா… நான் காஞ்சிக்கு சென்றுகொண்டிருந்தேன். இக்காட்டை …

மேலும் படிக்க »

ஆதிசேஷனின் அவதாரம் -6

“உன்னை மன்னிக்க நான் யார்..? நீயோ குருவை மிஞ்சிய சிஷ்யனாகி விட்டாய். மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் தகுதி மட்டுமே என்னிடம் உள்ளது, மகா பண்டிதர்களுக்கல்ல. ஆகையால் இங்கு உனக்கு இடமில்லை. நீ கிளம்பலாம்…” கோபத்தில் அமிலத்துளிகளாய் ஒவ்வொரு சொல்லும் வெளிப்பட்டன. ராமானுஜர் மௌனம் காத்தார். “இன்னும் ஏன் நிற்கிறாய்? ம்… கிளம்பு…” சொல் அம்பு ராமானுஜரை விரட்டியது. இதற்கு மேலும் குருவின் கட்டளைக்கு புறம்பாக நடப்பது நியாயமல்ல. குருவின் பாதங்களை …

மேலும் படிக்க »

ஆதிசேஷனின் அவதாரம் -5

“வணக்கம்சுவாமி” மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதை நிறுத்திவிட்டு, குரல் வந்த திசையில் திரும்பிய யாதவப்பிரகாசர், ஐம்பது வயதின் ஆரம்பத்திலிருந்தார். நெற்றி முழுவதும் திருநீறு இடம் பிடித்திருந்தது. ரெட்டைநாடி சரீரத்தை கவ்வியிருந்த காவி உடை கனகச்சிதமாய் அவருக்கு பொருந்தியிருந்தது. “யாரப்பா நீ ?” “சுவாமி… என் பெயர் ராமானுஜன். தங்களிடம் கல்வி பயில காஞ்சியிலிருந்து வந்துள்ளேன்.” “ஓஹோ… என்னிடம் பாடம் பயில வந்தவனா நீ” “ஆம் சுவாமி” கைகட்டி பதில் சொன்னார் ராமானுஜர். Sorkoyil-சொற்கோயில்Aanmeegathin …

மேலும் படிக்க »

ஆதிசேஷனின் அவதாரம் -4

ஸ்ரீபெரும்புதூர். “காந்திமதி…காந்திமதி…”அழைத்தபடி வேகமாக வீட்டிற்குள் நுழைந்தார் கேசவ சோமயாஜி. கணவரின் குரல்கேட்டு சமையற்கட்டிலிருந்து வெளிப்பட்டாள் காந்திமதி. “என்னங்க… இன்னைக்கு இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கீங்களே!” “ஆமாம் காந்திமதி… நம் மனக்குறையை போக்கிவிட்டார் காஞ்சி வரதர். திருவல்லிக்கேணி சென்று பார்த்தசாரதி பெருமாளை வணங்கி, புத்திர காமேஷ்டி யாகம் செய்யச்சொல்லி எம்பெருமானிடமிருந்து உத்தரவு வந்துள்ளது. திருக்கச்சி நம்பிகள் இப்பொழுதுதான் சேதி சொல்லிவிட்டுப் போனார்.” சோமயாஜி சொல்லச் சொல்ல காந்திமதியின் கண்களில் கண்ணீர் தளும்பியது. ஓடிச்சென்று …

மேலும் படிக்க »

ஆதிசேஷனின் அவதாரம் -3

விந்தியமலைக் காடு முழுவதும் கண்மையை கரைத்து ஊற்றிய தினுசாய் இருளில் மூழ்கிக்கிடந்தது. தூரத்தில் ஒளிர்ந்துகொண்டிருந்த சந்திரன் இரவைப் பகலாக்க திட்டமிட்டு தோற்றுப்போயிருந்தான். எங்கோ கூவிய காட்டுக்குயிலின் குக்கூ… சத்தம் காற்றில் கலந்து தேய்ந்துபோய் கேட்டது. பகலில் பச்சை நிறம் காட்டும் மரங்கள், இரவில் கருப்பு நிறம் காட்டி பயமுறுத்திக்கொண்டிருந்தன. ராமானுஜர் வேகமாய் நடந்துகொண்டிருந்தார். அதை நடை என்று சொல்வதைவிட ஓட்டம் என்றே சொல்லலாம். அவ்வளவு வேகம். உடலில் ஆங்காங்கே முட்கள் …

மேலும் படிக்க »

ஆதிசேஷனின் அவதாரம் – 2

பஞ்சசம்ஸ்காரம் என்பது என்ன? 1)இரு தோள்பட்டையின் மேல்புறத்திலும் சங்கு, சக்கரம் முத்திரை பதிப்பது,2) நெற்றி, கழுத்து, மார்பு, முதுகு, தோள்பட்டை, வயிறு ஆகிய ஆறு இடங்களில் பெருமாளின் 12 சிறப்பு பெயர்களை கூறி திருமண் காப்பிடுவது3) தாசப்பெயர் சூட்டுவது (ராமானுஜதாசன் என்பது போன்று)4) மந்திர தீட்சை அளிப்பது 5) திருமாலை பூஜிப்பது ஆகிய ஐந்து விஷயங்களும் ஆசார்யர்களால் பக்தர்களுக்கு செய்விக்கப்படும். இப்படி பஞ்ச சம்ஸ்காரம் செய்யப்பட்டவர்கள் தமிழில் ‘ஐந்தங்கார்’ என்றழைக்கப்பட்டு …

மேலும் படிக்க »

ஆதிசேஷனின் அவதாரம் – 1

ராமானுஜர் வரலாற்றின் வாசற்படியை மிதிக்கும் முன் : பாம்பையே பஞ்சணையாகக் கொண்டவர் பரந்தாமன். சதாசர்வகாலமும் அந்த பாம்பின்மேல் பள்ளிகொண்டே ஈரேழு லோகத்தையும் ஆட்சி செய்துவருகிறார். கடவுளின் கடைக்கண் பார்வைக்கு நாமெல்லாம் ஏங்கித்தவித்திருக்க, அனுதினமும் அவரையே தாங்கியிருக்கும் மகத்தான பேறு பெற்றவர் ஐந்துதலை நாகமாகிய ஆதிசேஷன். அந்த ஆதிசேஷனின் அவதாரத்தை ஆதாரமாகக் கொண்டதே இத்தொடர். பெருமாள் எப்படி பல அவதாரங்கள் எடுத்தாரோ, அவரின் அடியவராகிய ஆதிசேஷனும் மூன்று அவதாரங்கள் எடுத்துள்ளார். ராமாவதாரத்தில் …

மேலும் படிக்க »