முகப்பு / மகான்கள் / ஆதிசேஷனின் அவதாரம்

ஆதிசேஷனின் அவதாரம்

ஆதிசேஷனின் அவதாரம் – 29

என்ன ஆச்சர்யம்! ராமானுஜரின் உடலுக்குள் புகுந்த நஞ்சு அவரை ஒன்றும் செய்யவில்லை. அப்பொழுதுதான் ராமானுஜரின் சக்தி அந்த அர்ச்சகருக்கு புரிந்தது. எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என்பதை உணர்ந்து அழுதார். ராமானுஜரின் திருவடிகளை பற்றிக்கொண்டு, மன்னிக்கும்படி கதறினார். தரையில் விழுந்து புலம்பினார். ‘எல்லாம் இறைவன் செயல்’ என்றெண்ணிய ராமானுஜர், அர்ச்சகரை மன்னித்துவிட்டு புறப்பட்டார். நாட்கள் ஓடின. அன்றைக்கு யக்ஞமூர்த்தி என்கிற அத்வைத சன்யாசி ஸ்ரீரங்கத்திற்குள் நுழைந்தார். அவர் பல மாயாவாதங்களை …

மேலும் படிக்க »

ஆதிசேஷனின் அவதாரம் – 28

அந்த வீட்டின் முன்னால் வந்து நின்றார் ராமானுஜர். “அம்மா…” குரல் கேட்டு அன்னத்துடன் வெளியே வந்தாள் அப்பெண்மணி. கலங்கி இருந்த அவளது கண்களில் கவலை நிரம்பி வழிந்தது. ராமானுஜரின் வஸ்திரத்தில் அன்னத்தைப் போட்டவள், சட்டென அவரின் கால்களில் விழுந்து வணங்கிவிட்டு வீட்டிற்குள் நுழைந்து மறைந்தாள். ஏழு வீடுகளில் மட்டுமே யாசகம் பெறுவது ராமானுஜரின் வாடிக்கை. அப்படித்தான் இப்பொழுதும் நடந்தது. ஆனால் அப்பெண்மணியின் நடவடிக்கைகள் இன்றைக்கு வித்தியாசமாகத் தெரிந்தது. யாசகம் பெற்றதும் …

மேலும் படிக்க »

ஆதிசேஷனின் அவதாரம் – 27

அரங்கனின் கருவறைக்குள் நுழைந்த ராமானுஜரை பின்தொடர்ந்தான் வில்லி. “இதோ பார்… பாம்பையே பஞ்சுமெத்தையாய் பாவித்துப் பள்ளிகொண்டிருக்கும் அரங்கனின் அழகிய விழிகளைப் பார். இதைவிட கவர்ச்சி மிகுந்ததா உன் மனைவியின் கண்கள்..?” வில்லி திகைத்துப்போய் நின்றான். அக்கரிய விழிகள் அவனைக் கட்டி இழுத்தன. பதிலேதும் சொல்லாமல், பார்வையை திருப்பாமல் தன்நிலை மறந்து நிற்க ஆரம்பித்தான். கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோட ஆரம்பித்தது. அரங்கனின் மாயவிழிகளுக்கு முன் அவன் மனது மண்டியிட்டுக் …

மேலும் படிக்க »

ஆதிசேஷனின் அவதாரம் – 26

காந்தக் கண்ணழகி பொன்னாச்சியை மணம் முடித்து தன் வீட்டிற்கு அழைத்து வந்தான் வில்லி. யாருக்கும் கிடைத்திராத அரிய வகை ரத்தினம் தனக்கு கிடைத்திருப்பதாக எண்ணி அக்கண்ணழகியை, தன் கண்களுக்குள் பொத்தி வைத்து பார்த்துக்கொண்டான். அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக, பொன்னாச்சியின் உடலில் ‘பொன்’னை ஆட்சி செய்யவைத்தான். திருவெள்ளறை மக்கள், ‘ஒரு மல்லனுக்கு வந்த வாழ்வைப் பார்த்தாயா?’ என்றுவியந்துபோனார்கள். மற்றும் சிலரோ, ‘மனைவின் பின்னால் சுற்றும் இவனெல்லாம் ஒரு மல்லனா?’ என …

மேலும் படிக்க »

ஆதிசேஷனின் அவதாரம் – 25

திருக்கோஷ்டியூர் நம்பிகளின் பதில் திருமலையாண்டானை திகைப்படைய வைத்தது. அவர் திடுக்கிட்டு நிமிர்ந்தார். “என்ன சொல்கிறீர்கள்..?” “ஆம்… ஸ்ரீஆளவந்தார் நமக்கு வாயால் சொல்லிக்கொடுத்தார். ஆனால், ராமானுஜருக்கு கண்களாலேயே அனைத்தையும் உணரவைத்துவிட்டார். ஆகையால் எம்பெருமானாரின் கூற்றை ஆளவந்தாரின் உரையாகவே எடுத்துக் கொள்ளுங்கள்…” என்ற திருக்கோஷ்டியூர் நம்பிகளை வியப்பாய் பார்த்தார் திருமலையாண்டான். அவருடைய பதில் திருமலையாண்டானின் மனதில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. இருவரும் புறப்பட்டு ராமானுஜரின் மடத்திற்கு வந்து சேர்ந்தனர். எவ்வித முகச்சுழிப்பும் …

மேலும் படிக்க »

ஆதிசேஷனின் அவதாரம்- ராமானுஜர்- 24

‘ஆகா… ராமானுஜரால் அனுப்பட்டவரா அவர்!’ உடனே ராமானுஜரை அணுகினார். மீண்டும் மன்னிப்பு கோரிக்கை வைக்கப்பட்டது. ராமானுஜர், பெரியவரை நிதானமாய் நிமிர்ந்து பார்த்தார். “முதலியாண்டானை தவிர வேறு வேலையாள் எம்மிடம் இல்லை.உங்களுக்கு அவரை பிடிக்கவில்லை என்றால்,அவருக்கு பதில் நானே உங்கள் வீட்டிற்கு சீதன வெள்ளாட்டியாக வருகிறேன்” என்றார். அடுத்த நொடி நெடுஞ்சாண்கிடையாக ராமானுஜரின் முன் விழுந்தார் பெரியவர். “சுவாமி தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்” எனக் கதறினார். “முதலியாண்டானை திரும்பவும் அழைத்துக்கொள்வது …

மேலும் படிக்க »

ஆதிசேஷனின் அவதாரம்- ராமானுஜர்- 23

புகுந்த வீட்டுக்குள் நுழைந்த அத்துழாய் நேரே தன் மாமியார் முன் நின்றாள். “பாவம்… இந்த வயதான காலத்தில் வீட்டு வேலைகளை கவனித்துக்கொள்ள நீங்கள் மிகவும் சிரமப்படுவதை கேள்விப்பட்ட என் தந்தை, இந்த சீதன வெள்ளாட்டியை அனுப்பியுள்ளார்.” தன் பின்னால் நின்ற முதலியாண்டானை கை நீட்டினாள். “இப்பொழுதாவது உன் பிறந்தவீட்டாருக்கு, என் கஷ்டம் புரிந்ததே… என்ற மாமியார், முதலியாண்டான் பக்கம் திரும்பி மேலும் கீழும் அவரை நோக்கினாள். “சுறுசுறுப்பாக வேலை பார்ப்பாயா?” …

மேலும் படிக்க »

ஆதிசேஷனின் அவதாரம் – 22

‘கோபுர உச்சிக்கு ஏன் செல்கிறார்?’ ஆனாலும் வாய் திறந்து கேட்காமல் மவுனமாய் பின்தொடர்ந்தனர். உச்சியை தொட்டிருந்த ராமானுஜர், கீழே தெரிந்த கூட்டத்தை சில நொடிகள் நோக்கிவிட்டு பேச ஆரம்பித்தார். “அன்புடைய மக்களே… நான் இப்பொழுது மகாமந்திரம் ஒன்றை உங்களுக்கு உபதேசிக்க போகிறேன். இதை நீங்கள் உச்சரிப்பதன் மூலம் சொர்க்கம் புகுவீர்கள்…” மக்களின் முகத்தில் ஆனந்தம் தெரிந்தது. கூட்டத்தில் சலசலப்பு கூடியது. “அய்யா… மகானே… சொல்லுங்கள்… சொல்லுங்கள்…” Sorkoyil-சொற்கோயில்Aanmeegathin Puthiya Parinamam.JOIN …

மேலும் படிக்க »

ஆதிசேஷனின் அவதாரம் – 21

“சுவாமி… அடியேனுக்கு திருமந்திரம், த்வயம் இவற்றின் ரகசியங்களை உபதேசித்து அருளவேண்டும்” திருக்கோஷ்டியூர் நம்பிகளின் முன்பு இரு கரங்களையும் கூப்பியபடி நின்றிருந்தார் ராமானுஜர். திருக்கோஷ்டியூர் நம்பிகள், அவரை மேலும் கீழும் நோக்கினார். “வேறொரு சமயத்தில் வாரும்.” பிடிகொடுக்காமல் பதில் சொன்னார். ஆவலாய் வந்திருந்த ராமானுஜருக்கு, அந்த பதில் ஏமாற்றத்தை தந்தது. வெகுநேரம் வரை அவ்விடத்தை விட்டு அகலாமல் நின்றிருந்தவர், மனதை தேற்றிக்கொண்டு நகர்ந்தார். மீண்டும் ஸ்ரீரங்கம் வந்தாலும், அவருடைய மனம் திருக்கோஷ்டியூர் …

மேலும் படிக்க »

ஆதிசேஷனின் அவதாரம் – 20

உடையவர் எனும் சிறப்புப் பெயர் பெற்ற ராமானுஜர், வைணவ பீடத்தின் தலைமைபொறுப்பிற்கு வரும்பொழுது வயது 33. இந்த இளம்வயதிலேயே பெரிய அறிவை பெற்றிருந்தார் ராமானுஜர். இதன் காரணமாக சீர்கெட்டுப் போயிருந்த கோயில் பராமரிப்பை நேரான பாதைக்கு அழைத்துவந்தார். நந்தவனம் சீரமைக்கப்பட்டு பூத்துக்குலுங்கும் மலர்த்தோட்டமாய் மாறியது. நிர்வாகிகளுக்கு தூய தமிழ் பெயர்களை சூட்டி, ஆளுக்குகொரு பணியாக பிரித்துக்கொடுத்தார். அரங்கனுக்குரிய விழாக்கள், உரிய நேரத்தில் நடத்தப்பட்டன. இன்றைக்கும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், ராமானுஜர் …

மேலும் படிக்க »