முகப்பு / இறைத்தமிழ் இன்பம் / பாசுரம் (பக்கம் 2)

பாசுரம்

பொய்கை ஆழ்வார் கண்ட தழும்புகள் – பாசுரம் 15

நாங்கள் ஒரு காலத்தில், புதுக்கோட்டை கீழ இரண்டாம் வீதியில் குடியிருந்தோம். ஹிஸ் ஹைனஸ் ராஜாஸ் காலேஜில்- இன்றைய மன்னர் கல்லூரியில் – பி.யூ.ஸி. படித்துக் கொண்டிருந்தேன். குப்புப் பாட்டி என் அம்மாவின் எட்டாவது பிரசவத்திற்காக வந்திருந்தாள். என் தம்பி கண்ணன் பிறந்த பிறகு ஒரு நாள் பாட்டி மடியில் தலை வைத்துப் படுத்தேன். ’ டேய் ! உன் சித்தி குழந்தைகளையும் சேர்த்து, உனக்குக் கீழே பன்னிரண்டு பேரப்பிள்ளைகள் எனக்கு …

மேலும் படிக்க »

பாசுரம் – 14

நான் தான் பெரியவன் ! ‘ சாயங்காலம் உங்க மனுஷா எல்லாம் வரா… ஞாபகம் இருக்கோ ! காபி பில்டர் பெரிசை பரண்லேந்து எடுங்கோ ! ’ என்றாள் என் சக தர்மிணி. பேப்பர் படித்துக் கொண்டிருந்தவன் ‘இதோ’ என்று சொல்லியபடியே அவசரமாக எழுந்தேன். ‘அவாள் எல்லாம் குடம் குடமாய்க் காபி குடிப்பா..’ அவள் தொடர்ந்தாள். ‘ கொஞ்சம் பிலாக்கணம் பாடாமே இரு’ என்று சொல்லியபடியே ஸ்டூலைத் தேடினேன். போனவாரம் …

மேலும் படிக்க »

பாசுரம் 13 – கொடுத்தானைப் பழிப்பீரோ ? கொண்டானைப் பழிப்பீரோ?

மார்கழி உற்சவம் எங்களூர் பெருமாள் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெறும். பாலு சார் தலைமையில் பத்து பேர் கொண்ட பஜனை கோஷ்டி, காலை ஐந்து மணி அளவில்  கோயில் வாசல் முன் கூடி, ஜால்ரா தட்டிக்கொண்டு, அவரவருக்கு அமைந்த சுருதியில் பாடிக் கொண்டே, நாலு வீதிகளையும் சுற்றி வர, மணி சரியாக ஆறரை ஆகும். அதன் பின்  பஜனை கோஷ்டியினருக்கு  பரி வட்டம் கட்டி, தீர்த்தம் கொடுத்து,  சடாரி சாற்றி …

மேலும் படிக்க »

அப்போதைக்கு இப்போதே…. – பாசுரம் – 12

அண்மையில் ஒரு கலியாணத்திற்குப் போயிருந்தேன். முன் வரிசையில் என் நண்பர் மகன் ராஜனுடன் அமர்ந்திருந்தேன். இடதுபுறம் , ஷெர்வாணி அணிந்த, நல்ல பருமனான, செக்கச் செவேல் வழுக்கைத் தலையர் ஒருவர் வந்து அமர்ந்தார். ‘ஆ ! இவர் கோகுல்தாஸ் அல்லவா! ‘ கோகுல்தாஸைத் தெரியாதவர்கள் சென்னையில் இருக்க மாட்டார்கள். ‘ஜி.ஜே ஸ்கூல் குழுமம்’ என்ற அமைப்பில் வடசென்னையில் ஒன்றும், தென்சென்னையில் ஒன்றுமாக நாலாயிரம் மாணவ, மாணவியருகு மேல் படிக்கும் இரு …

மேலும் படிக்க »

வாடியவளைக் கண்டு வருந்திப் பாடினார் ஆழ்வார் ! – பாசுரம் -11

மைதிலி சரண் குப்தா (1886- 1964) தேசிய எழுச்சிக் கவிஞர். ஹிந்திக் கவிஞர்களில் மிகவும் பிரபலமானவர். ஹிந்தியின் பழைய இலக்கிய வடிவங்களான அவதி, விரஜ பாஷைகளைத் தவிர்த்து ‘கரி(டி) போலி’ எனப்படும் தற்போதைய ஹிந்தியில் தம் கவிதைகளைப் புனைந்தார். காந்திஜியால் ‘ராஷ்டிரகவி’ என்று பாராட்டப்பட்ட இவருக்கு 1954-இல் அன்றைய இரண்டாவது உயரிய விருதான ‘பத்மபூஷன்’ வழங்கப்பட்டது. மைதிலி சரண் குப்தாவால் இயற்றப்பட்ட ‘ சாகேத்’ எனும் காவியம் மிகப் பிரசித்தி …

மேலும் படிக்க »

ஒவ்வொரு பாசுரமும் சொல்லோவியம்தான் ! -பாசுரம் -10

காரைக்குடி கம்பன் கழகம்‘ 1939ம் ஆண்டு கம்பன் அடிப்பொடி திரு சா.கணேசன் அவர்களால் தொடங்கப்பெற்றது. கம்பனை வம்பனாக்கித் தாழ்த்த சில தலைவர்கள் முயற்சி செய்த அந்தக்காலத்தில், கவிச்சக்கிரவர்த்தி கம்பனுக்காகத் தனிக் கழகம் அமைத்து, பிற்காலத்தில் பல கம்பன் கழகங்களுக்கு வழிகாட்டி இலக்கணமாக, சாதி சமய பாகுபாடு இன்றி எல்லோரும் பங்கு கொள்ளும் அரங்கமாக ஆக்கியது அவரது சீரிய முயற்சி. எந்த இலக்கிய அமைப்பின் சரித்திரத்திலும் நிகழ்ந்திரா வண்ணம், எழுபத்தைந்து ஆண்டுகள் …

மேலும் படிக்க »

கண்ணா நீ நாளைத் தொட்டுக் கன்றின்பின் போகேல்-பாசுரம் -9

அந்தக்காலத்தில் நான் ஏப்ரல், மே பள்ளி விடுமுறை நாட்களில் அம்பாசமுத்திரத்தில் இருந்த பாட்டி வீட்டிற்குச் செல்வேன். பாட்டிவீடு மேலத்தெருவில் இருந்தது. தெருவின் கீழ்க்கோடியில் பெருமாள் கோயில்; மேலக்கோடியில் சிவன் கோவில். நாள் முழுவதும் தெருதான் கதி. கிரிக்கெட் ஆட்டத்தில் அப்படி ஒரு பித்து. கார்க் பந்தை வைத்துத்தான் விளாயாடுவோம். சுப்புணி, கபில்தேவ் கணக்கா ஜிவ்ன்னு பந்து வீசுவான்; இசை கேடா மேலே பட்டால் புஸ்னு வீங்கும்; வலி பிராணன் போகும். …

மேலும் படிக்க »

‘ஸ்டாச்சு’ சொன்னார் ஆழ்வார்! – பாசுரம் -8

தாத்தா! ‘ஸ்டாச்சு’ என்று கத்தினாள் என் பேத்தி மயூரா. மாடிப் படியில் இறங்கிக் கொண்டிருந்த நான் அசையாது நின்றேன். ‘காலைக் கீழே வைத்து விட்டாய்! அவுட்!’ என்று ஆர்ப்பரித்தாள் மயூரா. இது ஒரு விளையாட்டு. ‘ஸ்டாச்சு’ என்று எதிராளி கூறியவுடன் ஆடாது, அசையாது கற்சிலை மாதிரி ஓரிரு நிமிடங்களுக்கு இருக்க வேண்டும். மயூரா இந்த விளையாட்டை சில வாரங்களுக்கு முன்புதான் கற்றுக் கொண்டாள். அவ்வப்போது, அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, …

மேலும் படிக்க »

சூப்பரோ சூப்பர் – பாசுரம் – 7

எனக்கு ராமசாமி நெருங்கிய நண்பர். அவர் உணர்ச்சி மேலிட்டு எதாவது ஒரு நிகழ்வை விவரிக்கையில் ‘ ஐயோ ‘ என்று பலதடவை கூறுவார். ‘ ஐயோ! அஸ்வின் எப்படிப் போடறான் பாரு’; ‘ஐயோ! என்ன சாப்பாடு போட்டாங்கடா!’; ஐயோ! ஸ்ரேயா எப்படி நடிக்கிறா பாருடா!’ போன்றன அவன் வாயிலிருந்து சகஜமாக வரும். எனவே நாங்கள் அவரை ‘ஐயோசாமி‘ என்று செல்லமாக அழைப்போம்.இன்றைய இளைஞர்கள் எல்லா மிகுதிகளையும் ‘சூப்பர், என்ற ஒரே …

மேலும் படிக்க »

‘ஸி’  கிளாசும் எடுப்போம் – பாசுரம் – 6

நான் பள்ளியில் படிக்கும்போது தலைமை ஆசிரியர் ஒரு மாறுதல் செய்தார். மானணவர்களை ராங்க் வாரியாகப் பிரித்து ‘ஏ’, ’பி” ‘ஸி’ என்று மூன்று வகுப்புகளை ஏற்படுத்தினார். ‘ஸி’ வகுப்பில் படிப்பில் பின் தங்கிய மாணவர்கள். தலைமை ஆசிரியர் கருத்து, அவர்கள் மீது தனி கவனம் செலுத்தி அவர்களை முன்னுக்கு கொண்டு வரவேண்டும் என்பது. ஆனால் ‘ஸி’ கிளாசுக்கு போவதற்கு எந்த ஆசிரியருக்கும் இஷ்டமில்லை. இந்த ஏற்பாட்டில் வேறு பல சிக்கல்களும் …

மேலும் படிக்க »