பாசுரம்

அனுமன் சொன்ன அடையாளங்கள் !-பாசுரம் -25

நல்ல தூதுவரின் குணங்களாக அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல்வன்மை ஆகிய மூன்று பண்புகளைக் குறிப்பிடுகிறார் வள்ளுவப் பெருந்தகை. இந்த மூன்றையும் ஒருங்கே பெற்றவர் சிறிய திருவடியான அனுமன். மரத்திலிருந்து குதித்து, அனுமன் சீதையின் முன் நின்றபோது, அனுமனை வேடம் பூண்ட இராவணனாக சந்தேகித்தாள் சீதை . இந்த நிலையில், குழம்பிய மனத்தினளான சீதைக்கு, அனுமன் நம்பிக்கை ஊட்டுவத்றகாக, சொன்ன எட்டு அடையாங்களை பெரியாழ்வார் மூன்றாம் திருமொழி, பத்தாம் பத்தில் …

மேலும் படிக்க »

வா ! போ ! வா ! …இன்னம் வந்து ஒருகால் கண்டுபோ ! – பாசுரம் -24

எங்களுக்கு ராஜமணி என்ற ஒரு நண்பன் . எப்பொழுதும் ஏதவது ஒரு விஷயத்தைப் பற்றிப் புலம்பிக் கொண்டே இருப்பான். இதனால் நாங்கள் அவனைச் செல்லமாகப் ‘புலம்பல்மணி’ என்று அழைப்போம். கடைசியாக அவனைப் பார்த்தபோது மேனேஜர் மாத்ருபூதம் எப்படி பிரமோஷனைத் தள்ளிப் போட்டுக்கொண்டே வருகிறார் என்று புலம்பினான். அவனுக்குப் பிரமோஷன் கிடைத்துவிட்டதாகத் தகவலின் பேரில், அவனை விஷ் பண்ணுவதற்காகப் போன் செய்தேன். புலம்பித் தீர்த்து விட்டான். ”பூதம் பிரமோஷன் கொடுக்கிற மாதிரிக் …

மேலும் படிக்க »

பாசுரம் -23 ராகவனுக்குத் தாலேலோ

“ஏன் பாட்டி ! என்னுடைய சின்ன வயசுலே போட்டோவே எடுக்கவில்லை. அப்பா ,அம்மாவோடு மூன்று மாதக் குழந்தையாய் இருந்தபோது, எடுக்கப் பட்ட, அந்தச் சட்டமிட்ட போட்டோவைத் துடைத்துக் கொண்டே கேட்டேன். ”போடா ! அந்தக் காலத்திலே கலியாணம் ஆனவுடனே ‘ஸ்டுடியோ’ போய் மாப்பிள்ளையும் பொண்ணும் ஒரு போட்டோ எடுத்துண்டு வருவா அவ்வளவுதான் ! உங்கப்பன் கொஞ்சம் சுணக்கம் காட்டினான்..அதற்குள் நீ பிறந்துட்டே ! உன்னையும் தூக்கிக் கொண்டுபோய் சேர்த்து போட்டோ …

மேலும் படிக்க »

கொட்டாய் ! பல்லிக் குட்டி ! பாசுரம் 22!

பல்லி, முதுகுநாணிகள் தொகுப்பில், முதுகு எலும்பிகள் துணத் தொகுதியில், நான்காலிகள் என்ற பெரு வகுப்பில், ஊர்வன துணை வகுப்பில் உள்ள ஜந்து. ஊர்வனவற்றில் ஒலி எழுப்பும் திறம் உள்ளது இது ஒன்றே. பல்லி தொடர்பான ஏராளமான நம்பிக்கைகள் பண்டையத் தமிழ்ர்களுக்கு இருந்தன. இன்றளவும் தொடர்கிறது. ‘பல்லி, தலையிலே விழுந்துட்டது பாட்டி !ரொம்பக் கவலையா இருக்கு பாட்டி !’ என்றான் கோவிந்து. ‘எங்கேடா விழுந்தது ? ‘ எனப் பாட்டி வினவ …

மேலும் படிக்க »

சிற்றிலக்கியத்தில் புரட்சி செய்த மகான் ! பாசுரம் 21

தமது பக்திப் பாசுரங்கள் சாமான்ய மக்களைச் சென்றடைய, எளிய மொழியில் எழுதியதோடு விளையாடிக் கொண்டே பாடும் பாடல்களை இயற்றினார்கள் ஆழ்வார்கள் என்று பார்த்தோம். தமிழ் இலக்கியத்தில் அகத்துறைக் கருப் பொருட்களான– தலைவன், தலைவி, காதல்,கூடல் பிரிதல், நோதல், புலம்புதல் ஆகியவைகளில் தமிழரர்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு மிகுந்த ஈடுபாடு இருப்பதை ஆழ்வார்கள் கண்டனர். இந்த ஈர்ப்பை அப்படியே பெருமாளிடம் திருப்பி விட எண்ணினர். அவ்வளவுதான் நம்மாழ்வார் பராங்குச நாயகியாக மாறி பெருமாள் …

மேலும் படிக்க »

குழமணி தூரம் பாடினார் ஆழ்வார் ! – பாசுரம் 20

போரில் தோற்ற வீரர்கள், தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு கூத்தாடுவர் ; தங்களுக்கு உயிர்ப் பிச்சை கேட்டு மன்றாடுவர். இது ‘ பொங்கதத்தம் பொங்கோ ‘ எனப்படுகிறது. ‘எங்களுடைய தோல்வியையும், உங்களது வெற்றியையும் அறிவித்து கூத்தாடுகின்றோம் தயை கூர்ந்து காணுங்கள் ‘ என்று சொல்லி தோற்றவர் அபயம் கேட்டு ஆடும் கூத்து இது. திருமங்கை ஆழ்வாரின் பெரிய திரு மொழி, பத்தாம் பத்தின் இரண்டாம் திருமொழி இவ்வகையில் அமைந்தாகும். வேறு எந்த …

மேலும் படிக்க »

சாழல் பாசுரங்களைக் கூடிப் பாடிடுவோம்! – பாசுரம் 19

ஆழ்வார்களும், நாயன்மார்களும் தாங்கள் எழுதும் பாசுரங்களும், பதிகங்களும் பாமர மக்களைச் சென்று அடைய வேண்டும் என்று விரும்பினார்கள். இதனால் இனிய, எளிய தமிழ் நடையில் தங்கள் ஆக்கங்களைச் செய்தார்கள். இதே கருத்துடன், பிற்காலத்தில், துளஸிதாஸ், சூர்தாஸ் போன்றவர்கள், இலக்கிய மொழியான சம்ஸ்கிருதத்தைத் தவிர்த்து, அந்தக்கால மக்கள் பேசும் அவதி, விரஜ மொழிகளில் தங்கள் காவியங்களைப் படைத்தனர். ஆனால் இன்று நம் நடைமுறை ஹிந்திக்கும் இம்மொழிகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. துளஸி …

மேலும் படிக்க »

இன்றோ, நாளையோ, நிச்சியமாக நல்லதே நடக்கும் ! – பாசுரம் 18

ராமுவிற்கு பாட்டிமீது பரம விசுவாசம். பரீட்சைக்கு, இண்டர்வியுவிற்கு எதுவானாலும் பாட்டியைச் சேவிக்காமல் போகமாட்டான். ‘இன்னைக்கு இண்டர்வியுவிற்குப் போறேன் பாட்டி’ என்று சேவித்தான். ‘மகராஜனாகப் போய்விட்டு வா ! ‘ என்று ஆசிர்வதித்து அனுப்பினாள் பாட்டி. இரண்டு நாட்கள் கழித்து ரிஸல்ட் வந்தது – ‘நாட் ஸெலக்டட்’. ஒருமாதம் கழித்து வேறு ஒரு நேர்முகத் தேர்வு. பாட்டியை வணங்கி ஆசி பெற்றுச் சென்றான். வெற்றி கிடைக்கவில்லை. மூஞ்சியைத் தூக்கிக்கொண்டு பாட்டி முன் …

மேலும் படிக்க »

வித்யாசம் ஒன்றும் இல்லை ! – பாசுரம் 17

எட்டு நண்பர்களைக் கொண்ட எங்கள் கோஷ்டி ஒரு நாள் காலைப் பொழுதில் ஒரு பிரபல ரெஸ்ட்ராண்டை அடைந்தது. சர்வர் வந்து நின்றவுடனே எனக்கு ‘ஆனியன் ரோஸ்ட்’ என்றான் ரவி ;அவன் சற்றே முந்திரிக் கொட்டை. எனக்கு ‘ரவா ‘ என்று சேகர் சொல்ல , ஆனியன் ஊத்தப்பம், ’ ‘பூரி மசால்’, ‘பொங்கல், வடை’, ‘இட்லி வடை’ என்று பாலு, ராகேஷ், சூரி, ராஜன் தொடர்ந்து ஆர்டர் செய்தனர். நான் …

மேலும் படிக்க »

எல்லாம் அவனது ! – பாசுரம் – 16

தொள தொள காவி ஜிப்பா; காவி வேட்டி; நீண்டு , சுருண்ட தலை முடி; அடர்த்தியான தாடி. . வந்தவரை உற்றுப் பார்த்தார், யார் கேட்டாலும், கொடுத்து உதவும் தனிகரான வீட்டுத் தலைவர். ‘உள்ளே வாருங்கள் . உட்காருங்கள்; அடியேன் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் ?’ என்றார் . வந்த ஆசாமி சற்று நேர மௌனத்திற்குப் பிறகு, ‘ நண்பா ! நாம் எல்லோருமே சகோதரர்கள் ; என் …

மேலும் படிக்க »