முகப்பு / இறைத்தமிழ் இன்பம் / நாச்சியார் தமிழ்

நாச்சியார் தமிழ்

நா மணக்கும் நாச்சியார் தமிழ் -15.

திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே! திருப்பாவை முப்பதுஞ் செப்பினாள் வாழியே! பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே! பெரும்புதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே ! ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே ! உயரரங்கர்க்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே! மருவாருந் திருமல்லி வளநாடி வாழியே! வன்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே! அன்னம் நடைபயிலும் திருவில்லிபுத்தூரில் கண்ணனின் கதை கேட்டு வளர்ந்தவள், துளசிச்செடியின் மடியில் அவதரித்தகோதை. ஆயர்பாடியில் கண்ணனை பாலையும் நெய்யயையும் ஊட்டி வளர்த்தாள் …

மேலும் படிக்க »

நா மணக்கும் நாச்சியார் தமிழ் -14

‘ஒருமகள் தன்னை உடையேன், உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன், செங்கண்மால் தான் கொண்டு போனான், பெருமகனாய்க் குடிவாழ்ந்து பெரும்பிள்ளை பெற்ற அசோதை மருமகளைக் கண்டு மணாட்டுப் புறம் செய்யும்’ மானிடனை மணக்க மாட்டேன் என அரங்கனை அடைய எண்ணிய தன் மகளைப் பற்றி, பெரியாழ்வார் பாடியது. பக்தியின் பெருக்கம் பாடவைக்கும் சரி! மற்றவர்களுக்காகவும் உருகி,உருகவும் வைக்குமா? ஆம்! அப்படி உருகியதால்தான் நம்பாடவல்ல நாச்சியார் கோதை,ஆண்டாள் ஆனாள். தமிழை …

மேலும் படிக்க »

நா மணக்கும் நாச்சியார் தமிழ் -13

ஆண்டாள் வந்தாள்! ஆழ்வார் திருமகளார் வந்தாள்! சூடிக்கொடுத்தாள் வந்தாள்! சுரும்பார் குழற்கோதை வந்தாள்! திருப்பாவை பாடிய செல்வி வந்தாள்! தென்னரங்கம் தொழும் தேசுடையாள் வந்தாள்! சூடிக்கொடுத்த சுடர்கொடியாள் நம் கோதைப்பெண் சிறுமி, பாடவல்ல நாச்சியார் ஆகி இன்னிசையுடன் கூடிய முப்பது தமிழ் மாலையாகிய பாசுரங்களை நமக்காக பாடித் தந்தாள். இசைக்கு மயங்காத உயிர்கள் ஏது ! அவை ஆண்டுகள் கடந்தும் அழியாச் செல்வமாக இல்லந்தோறும்,ஆலயங்கள் தோறும் ஒலிப்பது அதன் சிறப்பு. …

மேலும் படிக்க »

நா மணக்கும் நாச்சியார் தமிழ் – 12

அன்னவயற் புதுவை யாண்டாள் அரங்கற்குப் பன்னு திருப்பாவை பல்பதியம் – இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு. சூடிக் கொடுத்த சுடர் கொடியே! தொல் பாவை பாடி அருளவல்ல பல்வளையாய்! – நாடி நீ வேங்கடவற்கு நம்மை விதி ஒன்ற இம்மாற்றம் நாங்கடவா வண்ணமே நல்கு. ஸ்ரீமன் நாராயணனின் மூன்று பத்தினிகளில் ஏற்றம் பெற்ற தலங்கள் ஸ்ரீதேவிக்கான திருவெள்ளறை, நீலா தேவிக்கான திருநறையூர் எனும் நாச்சியார் …

மேலும் படிக்க »

நாமணக்கும் நாச்சியார் தமிழ் – 11

கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர் சோதி மணிமாடந் தோன்றுமூர் நீதியால் நல்லபத்தர் வாழுமூர் நான்மறைகளோதுமூர் வில்லிபுத்தூர் வேதக் கோனூர் வேதங்களுக்கெல்லாம் வித்தாக வேதமே படிக்காத சிறுமி பாசுரமாக்க இயலுமா! வியக்கவைக்கும் தமிழையும் ஆண்டாளே அந்த சூடிக்கொடுத்த சுடர்கொடி! பெண்ணாக பிறந்தவளுக்கு வேத அத்யாயனங்கள் இன்றி அதன் பொருளை சாராசம்சத்தை இத்தனை துல்லியமாக அனைவருடனும் பகிர்ந்தளிப்பதென்றால் மாலவனின் மார்பில் அமர்பவள் செயலன்றோ! எப்போதும் அவனுடன் வாசம் செய்பவளுக்கு அவனே அவளுமாக அனைத்துமாகி …

மேலும் படிக்க »

நா மணக்கும் நாச்சியார் தமிழ் – 10

சூடிக்கொடுத்த சுடர்கொடியே ! தொல்பாவை பாடியருள வல்லபல் வளையாய் – நாடி நீ வேங்கடவற்கு என்னைவிதியென்ற இம்மாற்றம் நாங்கடவாவண்ணமே நல்கு ! சூடிக்கொடுத்த சுடர்கொடியே !! கோதையின் திருப்பெயர்களில் ஒன்று ! பரமனுக்கு அபச்சாரம் நேர்ந்துவிடுமோ என்று முகத்தை மறைத்துக்கொண்டு வண்டுகள் அமர்ந்து எச்சில்படுத்தும் முன் பூக்களைக் கொய்து மாலையாக்கி அதை தனது தொண்டாக செய்துவந்தவர் பெரியாழ்வார்! அதற்கு தான் வளர்த்த ஒப்பில்லா மகளாலே ஒரு குறை வருமென அவர் …

மேலும் படிக்க »

நா மணக்கும் நாச்சியார் தமிழ் -9

காறை பூணும் கண்ணாடி காணும்,தன் கையில் வலை குலுக்கும் கூறை உடுக்கும் அயர்க்கும்,தன் கொவ்வைச் செவ்வாய் திருத்தும் தேறித்தேறி நின்று ஆயிரம் பேர்த் தேவன் திறம் பிதற்றும் மாறில் மாமணி வண்ணன் மேல் இவன் மால் ஊறுகின்றாளே ! அழகிய கூறைப் பட்டாடை உடுத்தி, காறை போன்ற ஆபரணங்களை அணிந்து கண்ணாடி முன் நிற்பாள்.கைகள் நிறைய வளையல்கள் அணிந்து அவை ஓசையெழ, குலுக்கிப்பார்ப்பாள். பின் அயர்ச்சியுறுவாள். கோவைக்கனி போன்ற சிவந்த …

மேலும் படிக்க »

நா மணக்கும் நாச்சியார் தமிழ் – 8

மென்னடை யன்னம் பரந்து விளையாடும் வில்லிப்பூத்தூருறைவான் தன் பொன்னடி காண்பதோ ராசையினாலென் பொருகயற் கண்ணினை துஞ்சா இன்னடி சிலொடு பாலமுதாட்டி எடுத்த என் கோலக்கிளி உன்னோடுதோழமை கொள்ளுவன் குயிலே ! உலகளந்தான் வரக்கூவாய் ! பெரியாழ்வார்… பெற்ற பெண்பிள்ளை கோதை! கோதை,  கோதா என்பதற்கு மாலை என்று பொருள்.  திருமாலுக்கு தன் பக்தியை, பக்தியால் தன்னையே மாலையாக்கி மயங்கியவள். பாவையவள் முப்பது பாசுரங்களை மார்கழியில் மாதவனை எண்ணி  காத்யாயனி பதுமையை …

மேலும் படிக்க »

நா மணக்கும் நாச்சியார் தமிழ் -7

மின்னார் தடமதிள் சூழ் வில்லிப்பூத்தூர் என்றொருகால் சொன்னார் கழற் கமலம் சூடினோம் – முன்னாள் கிழியறுத்தான் என்றுரைத்தோம் கீழ்மையினற்சேரும் வழியறுத்தோம் நெஞ்சமே ! வந்து பாண்டியனது அரசவையில், நாராயணனே பரப்ரும்மம் என்று நிர்ணயம் செய்து, பொற்கிழியை அறுத்தஎடுத்த பெரியாழ்வார், வாழ்ந்த அவரது பெருமையை சொல்லும், நீண்ட நெடிய மதில்களைக் கொண்ட திருவில்லிப்புத்தூர் என்று சொல்லும் வைணவர்களது பாத கமலங்களை தலையில் கொள்ளலாம். இதனால் நரகத்திற்கு செல்லாமல் பிழைக்கலாம். என்னே! ஆழ்வாரின் …

மேலும் படிக்க »

நா மணக்கும் நாச்சியார் தமிழ் – 6

பெரியாழ்வார் பெண் பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த திருவாரடிப்பூரத்தின் சீர்மை- ஒரு நாளைக் குண்டோ மனமே யுணர்ந்துபார் ஆண்டாளுக் குண்டாகி லொப்பிதற்கு முண்டு.   ஆண்டாள் நாச்சியாரிடம் மிகுந்த ஈடுபாடுக்கொண்டிருந்த மணவாள மாமுனிகள் ஒரு சமயம் ஆண்டாளின் நீராட்ட உற்சவத்தில் கலந்துகொண்டு அவளை தரிசிக்க வேண்டி ஸ்ரீவில்லிப்பூத்தூர் வருவதற்குள் நீராட்ட உற்சவம் நிறைவடைந்துவிட்டது. மிக வருந்தியவர், “ஆண்டாளின் சௌரி திருமஞ்சனத்தை சேவிக்கும் பேறு கிட்டவில்லையே” என்று வருந்தினார். ஆண்டாளும் அவரது வருத்தத்தைப் …

மேலும் படிக்க »