சிவன் விளையாடல்

சிவன் விளையாடல் – 9

வேல் பெற்ற உக்கிர குமார பாண்டியன் பாரதத்தை புகழ்ந்து பாடும்போது, சுந்தரம் பிள்ளை நீரால் சூழப்பட்ட இந்த உலகிற்கு அழகு பொருந்திய முகமாக பாரதம் திகழ்கிறது என்றார். உலகிற்கு ஒளி தரக்கூடிய பிரகாசமான முகமாக இருக்கிறது பாரதம். இன்று இந்த பாரதத்தின் அழகு பொங்கும் முகத்தின் ஆன்ம அழகினைப் பார்த்து அதன் வசீகரத்தில் பல நாடுகளும் ஈர்க்கப்படுகின்றன பாரதம் எப்போதும் வெட்கத்தில் தலை குனிவதில்லை. மாறாக அது வீரத்தால் தலை …

மேலும் படிக்க »

சிவன் விளையாடல் – 8

மலையத்துவசனை அழைத்த திருவிளையாடல் திருமணமான பெண்கள் விருந்து விசேஷம் என்று தாய் வீட்டிற்கு வரும்பொழுது கணவனுடன் சேர்ந்துதான் வருவார்கள். வரவேண்டும். அதுதான் மரபு. தனியாக பெண்மட்டும் வந்தால் “எங்கே அவர் வரவில்லையா..–?” என்று உடனேயே முதல் கேள்வி கேட்டு விடுவார்கள். வீட்டில் நடக்கும் ஹோமங்கள், பூஜைகள், பண்டிகைகள், ஊர் திருவிழாக்கள் போன்றவற்றில் கணவனும், மனைவியும் இணைந்துதான் பங்கேற்பார்கள். விருந்து விசேஷங்களில் தம்பதி சமேதராக கலந்து கொள்ள வேண்டும் என்பதுதான் நம் …

மேலும் படிக்க »

சிவன் விளையாடல் – 7

மதுரையில் ஏழு கடல் எழுந்த திருவிளையாடல் நீராடும் கடலுடத்த நிலமடந்தையான இப்பூவுலகில் புவியியல் ரீதியாக ஏழு கண்டங்கள் இருப்பதாகப் படிக்கிறோம். ஐந்து பெருங்கடல்கள் இருக்கின்றன. ஆனால் இந்த பூமி, ‘நெடிலா’வில் இருந்து ‘காஸ்மித்’ வெடிப்பு மூலமாக பிரிந்து வந்தபோது, பான்ஜியா என்ற ஒரே நிலப்பரப்புத்தான் இருந்தது. ‘பாந்தலாசா’ என்ற ஒரே நீர்ப்பரப்பு இந்த நிலப்பரப்பை சூழ்ந்திருந்தது. ஒரே கடல். ஒரே நிலம். புவியியலில் பான்ஜியா என்றால் ‘எல்லா நிலமும்’ என்று …

மேலும் படிக்க »

சிவன் விளையாடல் – 6

வைகை பிறந்ததும். . . மதுரை சிறந்ததும். . . தமிழகத்தில், ஏன் தென் இந்தியாவிலேயே பழமையான நகரம் என்று மதுரையை சொல்ல முடியும். உலகின் பழம்- பெருமை வாய்ந்த நகரம் என்று ஏதென்ஸ் நகரத்தைக் குறிப்பிடுகிறார்கள். ஏதென்ஸ் கிரேக்க நாகரிகத்தின் செல்லப்பிள்ளை. கிரேக்க நாட்டின் மூத்தகுடி. 2500 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றைக் கொண்டது. இந்த ஏதென்ஸ் நகரம். பழைய ஒலிம்பிக் விளையாட்டுகள் இந்த நகரில்தான் தொடங்கின. ஏன் ஏதென்ஸ் …

மேலும் படிக்க »

சிவன் விளையாடல் – 5

குண்டோதரன் பசியாற்றியது ஒருவேளை சாப்பாடு ஒரு மணி நேரம் தாமதமானால் நாம் துடித்துப் போய்விடுகிறோம். அதுவும் நீரிழிவு நோயாளி என்றால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். நல்ல பசி நேரத்தில் ஒரு பிஸ்கட் பாக்கெட் கிடைத்தால் அது எவ்வளவு பெரிய அமிர்தம். அந்த ஒரு பிஸ்கட் பாக்கெட் கிடைப்பதற்குள் நாம் எவ்வளவு படபடத்துப் போய்விடுகிறோம். இதற்கு நேர் முரணாக நம் ஊரில் நடக்கும் திருமணங்களில் நாம் எவ்வளவு உணவுப் பொருட்களை வீணடிக்கிறோம். …

மேலும் படிக்க »

சிவன் விளையாடல் – 4

திருநடனம் புரிந்த திருவிளையாடல் இறைவனின் திருக்கல்யாணத்தை காணவந்த அனைவரும் விருந்து சாப்பிடுவதற்காக விரைந்து சென்று கொண்டு இருந்தனர். திருக்கல்யாண விருந்தல்லவா-…? அது அத்தனை பிரம்மாண்டமும் நிறைந்து இருந்தது. எதிர்பார்த்ததை விட இலையில் ஏகப்பட்ட பலகாரங்கள். திருக்கல்யாணத்தைக் கண்டு களித்த திருமால், பிரம்மன், மகாலெட்சுமி, சரஸ்வதி, முருகன், துர்கை, காளிதேவி முதலிய தெய்வங்கள் முதலில் விருந்துண்ணச் சென்றனர். இந்திரன், சந்திரன் முதலிய தேவர்கள் மேலும் வானலோகத்தில் இருந்து வந்திருந்தவர்களால் விருந்து மண்டபம் …

மேலும் படிக்க »

சிவன் விளையாடல் – 3

மதுரையை ஆண்ட சுந்தரபாண்டியன் மதுரையை ஆட்சி செய்யத்தொடங்கினாள் மீனாட்சி. ஆட்சி மாறியவுடன் மதுரையில் காட்சிகளும் மாறின. ஆம் மதுரையின் பேரரசியாக மீனாட்சி முடிசூட்டிக் கொண்ட பின்னர், மதுரையின் செல்வச் செழிப்பு பெருகியது. பேரும் புகழும் கொண்ட கடம்பவன நகரான மதுரை, சீரும் சிறப்பும் பெறத் தொடங்கியது. மதுரை மக்களின் வாழ்வு வளம் பெற்றது, வாக்கு நலம் உற்றது, மண் பலம் பெற்றது. ஆயிரம் இருந்தாலும் பெண்ணாட்சிதானே! அது என்னாச்சு என்று …

மேலும் படிக்க »

சிவன் விளையாட்டு – 2

மீனாட்சி தோன்றினாள் அண்டி வந்தவர்கள் அனைவரையும் கை தூக்கி விடுபவள். மதுரையில் காலடி எடுத்து வைப்பவர்களை மகத்துவமானவர்களாக மாற்றுபவள். கண்ணெதிரே இருந்து ஆட்சி செய்பவள். அவள் அன்னை மீனாட்சி. மதுராபுரியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான் பாண்டிய மன்னன் மலையத்துவசன். அவன் மனைவி காஞ்சனமாலை. கடம்பவன நாயகன், மதுரேசன் அருள்புரியும் புண்ணியத் தலத்தில் இருந்து மதுரையை ஆட்சி செய்யும் பேறு பெற்றிருந்தான் மலையத்துவசன். மதுரேசனின் கருணையினால் மலையத்துவசன் சகல …

மேலும் படிக்க »

சிவன் விளையாட்டு – 1

மதுரை தோன்றியது அவர்கள் மூத்தோர்களை மதிப்பவர்கள், அறிஞர்களை ஆதரிப்பவர்கள். எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துபவர்கள். முக்காலமும் சிவபூஜை செய்பவர்கள். படையெடுத்துச் சென்று பலம் காட்டுபவர்கள். பக்தி மார்க்கம் பெருகிட பாடுபட்டவர்கள். இலங்கை வரை எல்லையை விரிவுபடுத்தியிருந்த தமிழ் மன்னர்கள். இன்னும் பல சிறப்புக்கு உரியவர்கள். அப்போது பாண்டிய நாடு மணவூர் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு இலங்கை வரை தனது எல்லையை விரிவு படுத்தியிருந்தது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வெளிநாடுகளுடன் …

மேலும் படிக்க »