முகப்பு / ஆலய தரிசனம் (பக்கம் 2)

ஆலய தரிசனம்

திருவாரூர் தியாகேசன் திருக்கோயில் -14

தோண்டத் தோண்டக் கிடைக்கும் தங்கப் புதையல் போல ஆரூரில் கிடைத்து வரும் அற்புதத் தகவல்களைத் தொடர்ந்து, அங்குள்ள வேறு சில கோயில்கள், தனிக் கோஷ்டங்கள் , ஆகியவற்றைப் பார்ப்போம். தியாகராஜர் எழுந்தருளியுள்ள ஆலய இரண்டாம் சுற்றின் தென்புறத்தில் உள்ள ஆடகேசுவரம் கோயிலும் சில சிறப்புக்களைக் கொண்டுள்ளது. நாகபிலம் என்பது இங்குள்ள சிறப்புக்களில் ஒன்றாக, ஈசன் தேவியுடன் குடிகொண்டு அருளாசி வழங்குகிறார். இந்த ஈசுவரனை முழு மனதுடன் பூஜித்து வழிபடுவோர், இந்திரப் …

மேலும் படிக்க »

திருவாரூர் தியாகேசன் திருக்கோயில் -13

அருள்மிகு வன்மீகநாதர் குடிகொண்ட பூங்கோயிலின் வட மேற்கில் , தேவதீர்த்ததிற்கு கிழக்கில் அருள்மிகு கமலாம்பாள் சந்நிதியின் தென் கிழக்கில் வாணி தீர்த்தம் அருகே தனிக் கோயில் கொண்டுள்ளார் அருள்மிகு ஆனந்தேசுவரர். பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கமலமுனி இக்கோயிலில் யோக நிஷ்டையில் அமர்ந்துள்ளார். இவ்வாலய தென்படிக்கட்டுகள் வழியாக நுழைந்து திரும்ப , இடது புறத்தில் காட்சி தருவார் குனிந்து கும்பிடும் விநாயகர். இங்குள்ள நுழைவாயிலின் வலது புறத்தில் ஸ்ரீ மகாலெட்சுமியின் மூத்த …

மேலும் படிக்க »

திருவாரூர் தியாகேசன் திருக்கோயில் -12

தியாகேசன் ஆலயத்தின் முன்றாம் பிரகார வடமேற்கு மூலையில் அருள்மிகு கமலாம்பாள் தனித் திருக்கோயில் உள்ளது. இங்குள்ள முன் மண்டபத்தில் எழிலான சிற்பத் தூண்கள் , கண்கவரும் வகையில் காணப்படும். அங்கே அழகிய தனிக் கொடி மரம், நந்தி பலிபீடம் இவை அமைக்கப்பட்டுள்ளது. அம்மண்டப உத்திரப் பகுதியை அண்ணாந்து பார்க்க காணப்படும் சின்னச் சின்ன சிற்ப திருவுருக்க்கள் கூட , கலைநயத்துடன் உருவாக்கப்பட்டு மீண்டும் அவற்றைப்பார்க்கும் விருப்பத்தை உண்டாக்குகிறது. அக்கூரையின் விதானப்பகுதியில் …

மேலும் படிக்க »

திருவாரூர் தியாகேசன் திருக்கோயில் -11

மூவர் முதலி என்று அழைக்கப்படும் மூவரில் ஒருவரான சுந்தரர் ( மற்ற இருவர் சம்பந்தர், வாகீசர் ) தான் இழந்த ஒரு கண்ணை இத்தலத்தில் மீண்டும் பெற்ற சம்பவத்தை இப்படிச் சுட்டிகாட்டுகிறார்கள். தக்கோசி, புற நீரமை, செந்துருத்தி கொல்லிக் கௌவானம் , பழம் பஞ்சுரம், இந்தளம், காந்தாரமாகிய கொல்லி போன்ற பாசுரங்களால் ஆரூரானை போற்றி மகிழ்ந்தவர். ஒரு சந்தர்ப்பத்தில் சுந்தரர் தனது கண் பார்வையை முன் ஜென்ம வினைகளால் இழந்துவிட்ட …

மேலும் படிக்க »

திருவாரூர் தியாகேசன் திருக்கோயில் -10

முக மண்டபம் தாண்டி இரண்டாம் மண்டபம் வர, அங்குள்ள சிற்பத் தூண்கள் நம்மை வியக்க வைக்கும். அர்த்த மண்டபத்தில் கூரை முழுவதும் பூமாலைகளால் அழகுற அமைக்கப்பட்ட பூப்பந்தலின் கீழ் ( பூ அம்பலம்) பல வேலைபாடுகளுடன் விலை உயர்ந்த கற்களால் அலங்கரிக்கப்பட்ட எழிலானா ரத்தின சிம்மாசனத்தில், அம்பிகையுடன் கம்பீர புன்னகையுடன் தியாகேசன் தரும் திருக்காட்சி கண்டால், நம் உள்ளத்தை பரவசம் பற்றும். இந்த தரிசனம் பெறுகையில் இறைவனின் முகம் , …

மேலும் படிக்க »

திருவாரூர் தியாகேசன் திருக்கோயில் -9

புகழ் பெற்ற திருவாரூர் ஆலயத்தில் குடி கொண்டு அருள்பாலிக்கும் தெய்வத் தனிச் சந்நிதிகள், தனி மண்டபங்கள் , பிரகார தேவதைகள், மகான்கள், மகரிஷிகள், மன்னர்கள், ஆகியோர் பற்றிய விவரங்களை இனி பார்ப்போம். அருள்மிகு வன்மீகநாதர் (எ) புற்றிடங்கொண்டார் “ அணுக்கன் வாயில் “ என்னும் தொன்மை பொருந்திய எழிலான கோபுரம் கொண்ட வாயில் பக்கம் நிறுவப்பட்டுள்ள பெரிய துவஜஸ்தம்பம் கண்ணைக் கவரும் வகையில் உள்ளது. இது கி.பி 1717ம் ஆண்டில் …

மேலும் படிக்க »

திருவாரூர் தியாகேசன் திருக்கோயில் -8

 வாயிற் கடை மணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுடத்தான் தன் அரும் பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன் பெரும் பெயர்ப்புகார் என் பதியே”  நீதி தவறாமல் திருவாரூரை ஆண்ட , அறம் பிழையாமல் ஆட்சி செய்த மனுநீதிச் சோழன் குறித்து சிலப்பதிகாரத்தில் கண்ணகி வாயிலாக இளங்கோவடிகள் மூன்றே வரிகளில் கூறி பெருமைப்படுத்துவார். அந்த சோழ மன்னன் கொண்ட சிறப்புகள்தான் என்ன?  விடையாக அந்த சரித்திர சம்பவம். Sorkoyil-சொற்கோயில்Aanmeegathin Puthiya Parinamam.JOIN GROUP அனபாயன் என்கிற இரண்டாம் குலோத்துங்க சோழன் வழி வந்த மன்னனே,  ஒரு காலத்தில் திருவாரூரை உலகம் மெச்ச ஆட்சி புரிந்த நீதிமான்மனுநீதிச் சோழன் என்பவன். இத்தலம் குடி கொண்ட அருள்மிகு புற்றிடங்கொண்டாராகிய வன்மீக நாதரின் தீவிர சிவ பக்தன். அவனுடைய  மகன் திவிடங்கன்.. இளவரசன்  வீதி விடங்கன் ஒரு நாள், தன் தோழர்களுடன் ஒரு அழகிய தேரில் ஏறி அகண்ட ஆரூர் தெருவில் வேகமாகச் சென்றுகொண்டிருந்தான். இறைவன் தனக்கு  இட்ட பணியை விதி கச்சிதமாகச் செய்யத் தொடங்கியது. , திடீரென பசுங்கன்று ஒன்று உற்சாகத்துடன்துள்ளிக் குதித்துக் கொண்டு வீதியின் குறுக்கே வந்தது. தேரின் முன் சக்கரத்தில் சிக்கியது கன்று. தேரை நிறுத்த இளவரசன் எவ்வளவோ முயன்றும் இயலவில்லை. பாவம் அந்தக் கன்று, தேர்ச் சக்கரத்தில் சிக்கி இறந்தது.  அதைக் கண்டு மிரட்சி அடைந்த இளவரசனும் , அவனுடையதோழர்களும் அசைவற்று சிலையானார்கள்.  கன்றைத் தேடி  வந்த தாய்ப் பசு , கன்றின் கதியைக் கண்டு “ அம்மா” என்று அலறி கண்ணீர் விட்டது. .அதற்குள் அங்கே பலர் கூடி நின்று , பசுவின் நிலை கண்டு பரிதாபப்பட்டனர். இளவரசன் உடனே அங்கிருந்து அரண்மனை நோக்கிச் சென்றான். மனுநீதிச் சோழன் தன் அரண்மனை முன்பு  ஒரு சிறிய மண்டபம் கட்டி அதில் ஒரு பெரிய மணியை எப்போதும் தொங்க விட்டிருப்பான். அதற்கு ஆராய்ச்சி மணி என்று பெயர். தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என விரும்புவோர் மணியை அடித்தால் அதன் சத்தம் கேட்டு, அது எந்த நேரமாகஇருந்தாலும் மன்னனே வந்து, உடனடியாக நீதி வழங்கும் முறையைக் கொண்டிருந்தான். மாண்டு போன கன்றின் தாய் பசு, அரண்மனை நோக்கி வேகமாக ஓடியது. ஆராய்ச்சி மணியின் கயிற்றை வாயால் கவ்வி இழுத்து மணியை ஒலிக்கச் செய்தது. , அரண்மனையில் ஓய்வாக படுத்திருந்த மன்னனின் காதில் ஆராய்ச்சி மணியின் ஓசை கேட்டது. அவன் விரைவாக மணிமண்டபம் வந்தான்.கண்களில் நீர் சொரிய, மணி அடித்துக்கொண்டிருந்த …

மேலும் படிக்க »

திருவாரூர் தியாகேசன் திருக்கோயில் 7

பராசக்திபுரம் என்கிற ஆரூருக்கு “ கமலாலயம் “ என்ற பெயர் வரக் காரணமான புராண சம்பவம் பற்றிப் பார்ப்போம்…. விதி எனும் தெய்வசக்தி , தேவன், மானுடன் என்ற பேதம் பார்ப்பதில்லை. அந்த விதி விளையாட , மகாலெக்ஷ்மி, மகாவிஷ்ணுவை பிரிந்து வருண தேவனிடம் சிறு பிராயம் முதல் வளர நேரிட்டது. ஒரு பெரிய போர் தேவர்களுக்கும், மது கைடபர் என்ற அசுரர்களுக்கும் நடைபெற்ற போது மகாவிஷ்ணு அசுரர்களை வென்று …

மேலும் படிக்க »

திருவாரூர் தியாகேசன் திருக்கோயில் 6

தன்னுள் உயர்ந்தவர் யார் ? திறன் படைத்தவர் யார் ? துணிந்தவர் யார் ? இந்த தேவையற்ற உணர்வு எக்காலத்திலும் உண்டு என்பதை எவரும் அறிவர். ஒரு சமயம் இந்த உணர்வு காக்கும் கடவுள் மகாவிஷ்ணுவிற்கும், தேவர்களின் தலைவன் சந்திரனுக்கும் தோன்றிவிட்டது. இதனை கண்டுபிடித்து அடையாளம் அறிய ஒரு நாள் தேவ சபை கூட்டப்பட்டது. அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த பூமி பிரபல குருஷேத்திர தலம். இதனால் அந்த தலத்தில் …

மேலும் படிக்க »

திருவாரூர் தியாகேசன் திருக்கோயில் -5

தியாகேசன் திருக்கோயில், பிரம்மாண்டம் பெறும் வகையில், இரண்டாம் ராஜராஜன் தன் ஆட்சிக்காலத்தில் இவாலயத்தில் பெரிய கோபுரமும், சபாபதி மண்டபமும் உருவாக்கினான். மகாராணி செம்பியன்மாதேவி அறநெறிக் கோயிலை கற்றளியாக்கினார். அந்த மகாராணியின் மந்திரி, தன் பங்கிற்கு ஒரு கோபுரம் அமைத்தார். அரசன் இரண்டாம் ராஜேந்திரன் வீதி விடங்கரின் கர்ப்பகிரகம் அமைத்து வன்மீக நாதருக்கு கோயில் கட்டினான். காவிரி நதியின் தென்கரைத் தலங்களில் 87வது வரிசையில் இடம் பெற்றுள்ள திருவாரூர் ஆலயத்தில்,, பூக்கோயில், …

மேலும் படிக்க »