முகப்பு / அறுபத்து மூவர் (பக்கம் 2)

அறுபத்து மூவர்

இளையான்குடி மாற நாயனார் 2

“நாம் பசித்திருப்பினும் நமச்சிவாய-என உரைக்கும் அம்மையப்பன் அடியவரின் அரும்பசி தீர்ப்போம்.. அதற்கு வழி என்ன? அருள்வாய் பெண்ணே!”- என அகம் இரங்கி அன்புடையாளைக் கேட்டார் மாறனார். வீட்டில் ஏதுமில்லை விற்பதற்கு பொருளுமில்லை அயலாரைக் கேட்கவோ அணுவளவும் வழியில்லை அர்த்த சாமம்்- அதிலும் அடை மழை. அரிசி கூட இல்லையே… அடியவர் அரும்பசி தீர்ப்பது எங்கனம்- என ஏங்கினாள் ஏந்திழையாள் திகைத்தார் மாறனார் தீக்கனல் மேனியான் திருவடி நினைத்தார். “அடியார்க்கு அமுதுபடைக்க …

மேலும் படிக்க »

இளையான்குடி மாற நாயனார் – 1

இரா. குமார் சிவனடியார்களுக்கு சேவை செய்வதையே பிறவிப் பயனாகக் கருதியவர்கள் நாயன்மார்கள். அறுபத்து மூன்று நாயன்மார்கள் வரலாற்றை விவரிக்கிறது சேக்கிழார் பெருமானின் பெரிய புராணம். பக்திச்சுவை குன்றாது, பெரிய புராணத்தில் உள்ளபடி நாயன்மார்கள் வரலாற்றை உங்களுக்குத் தருகிறது இப்பகுதி. ஊர்ப்புறத்தே உழுத வயல் வளங்கொழிக்கும் உழவுத் தொழில் செழிக்கும் சிற்றூர். சிவநெறி செழிக்கும் சிறப்பூர் இன்பம்விளைக்கும் இளையான்குடி. இவ்வூரில் மேதினி சிறக்க மேழி பிடிக்கும் மேன்மை குலத்தில் பிறந்தவர் மாறனார். …

மேலும் படிக்க »