முகப்பு / அறுபத்து மூவர்

அறுபத்து மூவர்

அறுபத்து மூவர்- 9

தூய சான்றோர்கள் தொண்டாற்றிப் புகழ் சேர்த்த தொண்டை நாடு. வாய்மையிற் சிறந்த வழிவழியாக வளமார் செல்வத்துடன் வாழ்வதுமான ஊர் வளம்சேர் திருமயிலை. விளைந்த முத்தும் விளங்கிடு மணியும் வளமாய்க் கொண்ட வங்கக் கடலது வலம்புரிச் சங்கை வாரிக் கொணர்ந்து வளர்கரையில்.குவிக்கும். கடற்கரை நெடுக மரக்கலங்கள் குவித்த அயல் நாட்டெருமைகளும் அழகிய யானைகளும் அணிவகுத்து நிற்கும். களிறுகளும் கன்றெருமைகளும் கடலினில் படிந்து கருமேகக் கூட்டம் போல் கவினுறு காட்சி தரும். வீதிகள் …

மேலும் படிக்க »

அறுபத்து மூவர்- 8 முனையடுவார் நாயனார்

முனையடுவார் நாயனார் கொடும்பகை வென்று குடிகள் காக்கும் கோமகன் ஆண்ட நாடு. மலரரும்புகள் விரிந்து மணங்கமழ் சோலைகள் மதிலுடை கோயில்கள் எங்கும் நிறைந்த எழில் மிகு நாடு. சோலை மலர்கள் சொரியும் தேன் கலந்து பொங்கும் காவிரி வெள்ளம் கடலெனப் பாய்ந்து கழனிகள் நிறைக்கும். உழவர்கள் நிலத்தை உழுதிடும் வேளையில் சேறும் மணக்கும் செங்கழுநீர்ப் பூக்கள் சிரித்துச் சிலிர்க்கும். சேறு மணக்கும் கழனியெலாம் சோறு மணக்கும் மடங்களெலாம் நறு மலர்நிறையும் …

மேலும் படிக்க »

அறுபத்து மூவர் -7

செந்தமிழும் சீர்மிகு சைவமும் செழித்துத் தழைக்கும் சோழவளநாட்டில் திருத்துறைப்பூண்டியைத் தெற்காகக் கொண்டது கணமங்கலம் கழனி சிறந்து கயல்மீன்கள் விளையாடும். கரும்புகள் தேன்சொரியும். செந்நெல் வயல்களில் களைகொட்டும் சங்குமிழும் முத்துக்கள் ஒளிவீசும். அவை செந்தாமரை மீதமர்ந்து சிரிக்கும். உழவர்கள் மலர் பறித்து மகிழ்வர். நெடுங்கூந்தல்

மேலும் படிக்க »

அறுபத்துமூவர் -6

விறன்மிண்ட நாயனார் அரச வம்சத்தை அடியோடு அழிக்க ஆவேசம் கொண்ட பரசுராமனின் பாசமிகு தந்தை ஜமதக்கினி முனிவர் அம்முனிவரை அழித்து ஒழித்தான் அரசன் காத்தவீரியன். அன்புத் தந்தையின் ஆருயிர் பறித்த அரச வம்சத்தை அழிப்பேன் என சபதம் செய்தார் பரசுராமன். தன்வினை முடிக்க தண்நிலவு தரித்த சடையனை தாள் பணிந்தார் தவம் செய்தார். மன்னர் குலம் அழிக்க மழு ஆயுதம் பெற்றார் மதி சடையனிடம். அரசர் பலரை அழித்து ஒழித்து …

மேலும் படிக்க »

அறுபத்துமூவர் -5

மூர்த்தி நாயனார் தாமிரபரணி தாவிக் குதித்தோடும் கடலில் கலக்கும் நீர்த்துறை தன்னில் நீர்முத்து விளையும் அன்ன நடைபோடும் அழகுப் பெண்களின் அகன்ற விழிகளிலும் அணையும் தோள்களிலும் முத்துகள் ஒளிரும். சிரிப்பைச் சிந்தும் செவ்வாய் தன்னில் முத்தங்கள் பிறக்கும். அகிலும் சந்தனமும் அடர்ந்து வளர்ந்து அழகு காட்டும் பொதிகை மலையில் பிறந்த தென்றல் தமிழ் மணம் கமழத் தண்ணென்று வீசும். பழமைப் பெருமையும் பணமும் – நல்ல மனமும் கொண்ட மாந்தர் …

மேலும் படிக்க »

அறுபத்துமூவர் -4

மானக்கஞ்சாற நாயனார் கொம்புத் தேனும் கொழுங்கனிச்சாறும் வடிந்து திரண்டு வாய்க்கால்கள் வழி பாய்ந்தோடிக் கழனிகளில் கரும்புச் சாறுடன் கலந்து மணக்கும். அறுவகை ஆகமம் அறிந்த அந்தணர் அளவற்ற பெருமையுடை அவ்வூர் கஞ்சாறூர். மணி ஒளிவீசும் மாடங்களும் மதிதொடும் மதில்களும் மண்டிக்கிடக்கும் கழனி வளமும் கலைவளமும் நிறைந்து கிடக்கும் கஞ்சாறூரில் வேள்வி சிறக்கவும் வேளாண்மை தழைக்கவும் வெள்ளி முளைத்தாற்போல் வேளாளர் குலத்தில் மகனாய் பிறந்தவர் மானக்கஞ்சாறனார். வன்தோள் மன்னர்க்கு வழிவழியாய் வாட்படைத் …

மேலும் படிக்க »

அறுபத்துமூவர் -3

அமர்நீதி நாயனார் மணிக்கொடி பறக்கும் மாட மாளிகையும் கூட கோபுரங்களும் மதுவுண்டு களித்த வண்டுகள் வட்டமிடும் வளமான சோலைகளும் சூழ்ந்திருக்கும் சோழ வள நாட்டில் பண்பாடும் பழந்தமிழும் செழித்திருக்கும் பழைய நகரம் பழையாறை. செழித்த வீடுகள் சிறப்புற்ற அவ்வூரில் செல்வம் செழிக்கச் சிறந்து விளங்கியவர் வணிகர் குலத்தில் வந்துதித்த அமர்நீதியார். பொன்னும் முத்தும் பொலிவுறு மணியும் புத்தாடைகளும் குவித்து வைத்துக் குறைவிலாச் செல்வத்தில் குடும்பம் திளைத்தது. செல்வம் செழித்த போதும் …

மேலும் படிக்க »

இயற்பகை நாயனர் – 2

“அடியவரே அடியேன் இன்னும் ஆற்ற வேண்டியது உளதோ?” என அன்பொழுகக் கேட்டார். “ஆம்! ஆரணங்கு இவளை அடியேன் அழைத்துச் செல்வேன் ஆனால் அன்புகொண்ட உற்றார் உறவினர் ஊரினர் மற்றோர் அதைத் தடுத்தால்… அவர்களைத் தடுக்கவும் அடியேனைக் காக்கவும் அரணாக வா” அடியவர் இட்டார் கட்டளை. ” ஐயனே அறிவிழந்தேன். அடிகள் கூறுமுன் அடியேனே ஆற்ற வேண்டிய பணி இது. மன்னியுங்கள் மறவனாய் வருகிறேன்” என்றுரைத்து அரைக்கச்சு அணிந்தார். வாளும் கேடயமுமாய் …

மேலும் படிக்க »

இயற்பகை நாயனார் – 1

சோறளித்த சோழ நாட்டில் அலையும் தமிழ்க் கலையும் கலந்தோடும் காவிரி கடல் கலக்கும் கவின்மிகு நகரம் சிலப்பதிகாரம் சிறப்பிக்கும் காவிரிப்பூம்பட்டினம். கைத்தொழிலும் கடல் வணிகமும் செழித்திருந்த இந்தச் சீர்மிகு நகரில் வணிகர் குலத்தில் வளமாய்த் தோன்றி வசித்து வந்தார் சிவநேயச் செல்வர். செல்வச் செழிப்பிலும் சிந்தனைச் சிறப்பிலும் சிவனையே கண்டார். அவனடியார்க்கு அன்பேவல் செய்வதே கடன் எனக்கொண்டார். நாடி வந்த அடியவர்க்கு நற்பொருள் தந்தார். சிவனடியார் சிந்தைக்க்குச் செயல்வடிவம் தந்தார். …

மேலும் படிக்க »

இளையான்குடி மாற நாயனார் – 3

சிவனடியார் வேடமிட்டு சோதிக்க வந்த சிவபெருமானோ ஜோதிமயமாய் ஜொலித்து நின்றார். அமுதுண்ண வந்தவர் அருட்பெருஞ் ஜோதியாய் ஆனது கண்டு திகைத்தார் மாறனார் – அவர் மனைவியும் மனம் பதைத்தார். உள்ளம் மகிழ்ந்த உலகெலாம் உணர்ந்தவன் உமையொருபாகனாய் காட்சி தந்தார் பெரும் மாட்சி தந்தார். “அறுசுவை உணவை அடியார்க்குப் படைக்கும் அன்பனே! – என் அடியவர்க்கு நண்பனே! மாறனே – நின் மனைவியுடன் – என் பேருலகடைந்து எம்மிடம் வருக! அங்கே …

மேலும் படிக்க »