முகப்பு / ஆலய தரிசனம் / திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவ சுவாமி திருக்கோயில் -3

திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவ சுவாமி திருக்கோயில் -3

திருச்சியில் பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்த ரத்னாவதி, தன் தாய் அங்கு வராததால் தல இறைவனான செந்தில்நாதனை துதித்துக் கதறினாள். அவள் பால் கருணை பூண்ட சிவபிரான், ரத்னாவதியின் அன்னை வடிவில் உருமாறி , அவள் இல்லம் சென்றார்.,, அது தனது தாய்தான் என ரத்னாவதி நம்பிவிட்டாள். இறைவனே அம்மா வடிவில் பிரசவம் பார்க்க, அது சுக பிரசவமாகி ஒரு அழகான குழந்தை பிறந்தது.
வெள்ளம் வடிந்த பிறகு, ரத்னாவதியின் தாய் தன் மகள் விட்டிற்கு வந்தாள். அங்கே தன்னைப் போலவே ஒரு பெண் இருப்பதை கண்டு அவள் திகைத்தாள். அப்போது இரண்டு அம்மாக்கள் ஒரே உருவில் காட்சி தந்ததைக் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கினாள் ரத்னாவதி. அப்போது, அனைவரின் குழப்பத்தையும் அகற்றும் வகையில் செந்தில்நாதர், அம்பாள் மட்டுவார்குழலி அம்மை சமேதராக ரிஷப வாகனத்தில் காட்சியளித்து எல்லோரையும் ஆசிர்வதித்து மறைந்தார். அன்றிலிருந்து செந்தில்நாதர், ஸ்ரீ தாயுமானவ சுவாமி என்ற காரணப் பெயரைப் பெற்றார்.

அருள்மிகு மட்டுவார்குழலம்மையை சிவ பிரான் திருமணம் புரிந்ததும் திருச்சி தலத்தில்தான்.

இனி மலைக் கோயிலில் குடி கொண்டுள்ள பிள்ளையார்கள், சிவன், அம்பாள் தரிசனம் பெறுவோம்.

முத்தலை மலையான மலைக் கோயில் மூன்று நிலைகளைக் கீழ்கண்டவாறு கொண்டுள்ளது.

முதல் நிலை.:
மலையடிவாரத்தில் அமைந்த மாணிக்க விநாயகர் திருக்காட்சியளிக்கும் கருவறை.

இரண்டாம் நிலை:
மலையின் மத்தியப் பகுதியில் எழுந்தருளி அம்பாளுடன் செந்தில்நாதர் குடி கொண்டுள்ள ஆலயம்

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

மூன்றாம் நிலை:
குடவரைக் கோயில்கள், உச்சி விநாயகர் ஆலயம், மணிமண்டபம்உள்ளிட்டப் பகுதி.

சிறிய கோபுர வாயிலைக் கடந்து உள் நுழைய, அங்கே அருட்காட்சி தரும் மாணிக்க விநாயகரை வணங்கி விட்டு, எதிரே அமைந்துள்ள படிக்கட்டுகளைக் கடந்து செல்கையில் தென்படும் மௌன சுவாமிகள் மடம், எழிற்குமரன் சந்நிதி, நூற்றுக்கால் மண்டபம், கம்பத்தடி விநாயகர், அறுபத்துமூவர் ஆகியோரை கண்டு ஆனந்திக்கலாம்.

இவைகளைப் பார்த்து விட்டு 178 வது படிக்கட்டுக்கு வருகையில் அமைந்த, சிற்ப நுணுக்கங்கள் மிகுந்த, அருள்மிகு தாயுமானவரை அடைவோம். கொடிமரம் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், சகஸ்ரலிங்க மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், 16 கால் மண்டபம், மணி மண்டபம் போன்றவை அமைந்து இத்திருக்கோயிலின் பிரம்மாண்டத்தை வெளிப்படுத்துகிறது. சகஸ்ரலிங்க மண்டபத்தில் அநேக லிங்கங்கள் குடிகொண்டு வியப்பில் ஆழ்த்துகின்றன். .

முன் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள எழிலான கொடிமரம் , பலி பீடம், அதிகார நந்தி, நவகிரக சந்நிதி, அறுபத்துமூவர் திருவுருக்கள், விநாயகர், முருகன் தனி சந்நிதிகள் பார்ப்போரின் பக்தி உணர்வைத் தூண்டும் வகையில் இருக்கின்றது.

அம்பாள் குடிகொண்டிருக்கும் மண்டபம் சிறப்பான சிற்ப வேலைபாடுகளை க்கொண்டது. கருவறை சந்நிதியில் அருள்மிகு மட்டுவார்குழலம்மை மேற்கு நோக்கிய நிலையில் நின்று பெருமிதம் சூழ்ந்த வதனத்தோடு காட்சி தருகிறார்., தரிசிப்போரின் மெய் சிலிர்த்துவிடும்.

தேன் நிறைந்த மலர்களால் தொடுக்கப்பட்ட மாலை சூடிய நெடுங் கூந்தலை இந்த அன்னை கொண்டுள்ளதால் பக்தர்களால் சுந்தர குந்தளாம்பிகை என பக்தியுடன் போற்றப்படுகிறாள். அம்பாள் குடிகொண்டுள்ள மேற்குப் பகுதியில் ஸ்ரீ சக்கரம் பொலிவுடன் காணப்படுவதால் ஸ்ரீ சக்கர நாயகி என்றும் அவள் அழைக்கப்படுகிறாள். திருவையாறு தியாகராஜ சுவாமிகள் இந்த அம்பாள் குறித்து இயற்றிய கீர்த்தனைகள் உள்ளத்தை உருக்கும் வகையில் படைக்கப்பட்டுள்ளன.

அங்கேயே எழுந்தருளியுள்ள பாதாள ஐயனாரின் தரிசனத்தையும் பெற முடிகிறது.

அடுத்தபடியாக நாம் அடைவது செந்தில்நாதர் , திருமலைக் கொழுந்தீசர், திருமலைப் பெருமான் அடிகள், மாத்ருழதேஸ்வரர், என பல பெயர்கள் கொண்ட அருள்மிகு தாயுமானவ சுவாமிகளின் பெரிய லிங்க வடிவு தரிசனம். இவரது தரிசனம் பெறுகையில் நம்மை பக்தி உணர்வு சூழ்ந்து கொண்டு பரவச நிலைக்கு கொண்டு போய்விடும்.

மேற்கு நோக்கி காட்சியளிக்கும் இந்த லிங்கம், தமிழகத்தில் இடம்பெற்றிருக்கும் நான்கு பெரிய லிங்கங்களில் முதன்மையானது எனப்படுகிறது.

ஆண்டு தோறும் பங்குனி மாதம் 23, 24, 25 தேதிகளில் இந்த லிஙத் திருமேனியில் சூரிய ஒளிக் கதிர்கள் படிவது கண் கொள்ளாக் காட்சியாகும். இதை சூரிய பூஜை என்றழைக்கிறார்கள்.

தாயுமானவரின் பக்கத்தில் எட்டு நாக கன்னிகைகளின் காட்சி கிட்டுகிறது. இங்கே நந்தி இல்லை. காஞ்சி மகா பெரியவருக்கு உகந்த தலமிது.

ஸ்ரீ தாயுமானவருக்கு நெய்யினால் பாத அபிஷேகம் செய்து, அந்த நெய்யை மகப்பேறு அற்றவர்கள் 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர குழந்தை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் திடமான நம்பிக்கை.

அதுமட்டுமல்லாது, கர்ப்பமான பெண்கள் சுகபிரசவம் பெறுவதற்காக ஸ்ரீ தாயுமானவர் சந்நிதியில் வாழைத் தார் கட்டுவதாக பிரார்த்தனை செய்துகொள்கிறார்கள். அப்படி குழந்தை பிறந்தவுடன் தங்கள் நேர்த்திக்டனை
அர்ப்பனிக்கும் வழக்கம் உள்ளது.

வாழைத்தார் நேர்த்திக்கடனை முழுமைப் படுத்தும் விதமாக ஆலய அர்ச்சகர் அது கட்டப்பட்டதும், அதனை சற்று ஊஞ்சல் போல ஆடவைத்து, பிறகு அத்தாரில் உள்ள வாழைப் பழங்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கிவிடுவார்.

இவ்வாலய பிரகார சுற்றில் வடக்கு திசை நோக்கிய தெட்சிணாமூர்த்தி, தனி சந்நிதி கொண்ட இரு தேவியர் சூழ உள்ள பிரம்மதேவன், மகாலெட்சுமி ஆகியோரின் தரிசனமும் கிடைக்கும்.

இவைகளை முடித்து வெளிவர, தென்படும் படிக்கட்டுகளில் ஏறிச்செல்ல்ல, ,அங்கிருந்து 239 படிக்கட்டுகளை கடந்ததும் உச்சி மலைப் பிள்ளையாரை அடையலாம்.

அப்படி செல்லும் வழியில் கி.பி. 1630ல் கட்டப்பட்ட 16 கால் மண்டபம், ஆலயமணி அமைக்கப்பட்ட மணி மண்டபம், சிவ சிவ ஒலி மண்டபம், குடவரை சமணப் பள்ளி ஆகியவை இடம்பெற்றிருப்பதை காண முடியும்.

மணிமண்டபத்தில் உள்ள மணியின் எடை இரண்டரை டன். அது 4 அடி , 8 அங்குல நீள அகலம் கொண்டது. இந்த மணியின் ஓசை மலைக்கு கீழே உள்ள நகர பகுதியில் கணீரென கேட்கும்.. கிறித்தவ மதத்தை சேர்ந்த மிஸ்டர் . கிரிக்டன் என்ற ஆங்கிலேயர்தான் இந்த மணியை வழங்கியவர்..

இறுதியாக நாம் பல படிக்கட்டுகளைக் கடந்து தனிக் கோயில் கொண்ட உச்சி பிள்ளையாரை தரிசிக்கையில் படிகட்டுகளில் ஏறி வந்த களைப்பு நீங்கி கால் வலி பஞ்சாய் பறந்து விடுகிறது. உறுதியான மதில் சுவர்களால் சூழப்பட்ட பிரகாரமும் உள்ளது.

இங்கு குடிகொண்டுள்ள தெய்வங்களுக்கு பலவித உற்சவங்கள் நடத்தப்படுகின்றன. அதுவும் குறிப்பாக மகா சிவராத்திரி விழா பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு அன்று ஆயிரக் கணக்கில் இவ்வாலயத்தில் பக்தர்களைக் கூடச் செய்துவிடுகிறது.

ஆண்டு பிரமோற்சவம், ஆடிப் பூரத் திருவிழா, கந்த சஷ்டி விழா, அன்னாபிஷேகம், நவராத்திரி, போன்ற பலப் பல விழாக்கள் சிறப்பாக நடந்தேறி வருகிறது இங்கே.

தினசரி காலை 6 மணி முதல்இரவு 7 மணி வரை பக்தர்கள் இங்கே தரிசனம் காணலாம். மதியம் 1 முதல் 4 வரை நடை சாத்தப்பட்டிருக்கும்.

திருச்சி நகரின் மையப் பகுதியில் , தெப்பக்குளம் அருகே உச்சிப் பிள்ளையார் கோயில் அமைந்திருக்க, இவாலயம் திருச்சி நகர மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 4 கி.மீ தூரத்திலும், நகர பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 1/2 கி. மீ தூரத்திலும், உள்ளூர் புகை வண்டி நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. தமிழகத்தின் அனைத்து பகுதியில் இருந்து இங்கு வர பேருந்து வசதிகள் உள்ளது.

மகா சிவராத்திரி தினத்தில் அருள்மிகு மட்டுவார் குழலம்மை சமேத அருள்மிகு தாய்மானவ சுவாமியை தரிசிக்க இயாலாதவ்ர்கள், தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தவாறேத இறைவனை துதித்து பலன் பெறலாம்.

About கீதா சுப்பிரமணியன்

கீதா சுப்பிரமணியன்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்தவர் கீதா சுப்பிரமணியன். இயற்பெயர் நாராயணி. எழுத்தாளரான இவருடைய கணவரின் விருப்பப்படி கீதா என பெயரை மாற்றிக்கொண்டார். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில் -1

நம் ஆன்மீக இந்தியாவின் மோட்சம் தரவல்ல நகரங்களாகக் குறிப்பிடப்படுகின்ற, அயோத்தி, மதுரா, மாயா, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை ஆகிய …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன