முகப்பு / ஆலய தரிசனம் / திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவ சுவாமி திருக்கோயில் -2

திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவ சுவாமி திருக்கோயில் -2

ஒரு சமயத்தில் ஆதிஷேசனுக்கும், வாயுதேவனுக்கும் தங்களில் யார் பலசாலி என்ற போட்டி ஏற்பட்டது. தங்கள் பலத்தை நிரூபிக்க பர்வத மலையை தேர்ந்தெடுத்துக் கொண்டனர் அவர்கள். பர்வதமலையை ஆதிஷேசன் இறுகப் பற்றிக்கொள்ள, ஆதிஷேசனிடமிருந்து அந்த மலையை வாயுதேவன் பறித்து விட்டால், தான் தோற்றதாக அர்த்தம் என ஆதிஷேசன் சவால் விட்டான். அதனை உற்சாகமாக ஏற்றுக்கொண்டான் வாயு.
அதன் படி பர்வதமலையை தன் கரங்களால் ஆதிஷேசன்மிக இறுகப் பற்றிக்கொனடான். வாயு தன் பலம் கொண்ட மட்டும் மலையை பிடித்து இழுத்துப்பார்த்தான். அவன் முயற்சிகள் தோல்வியைத் தழுவின. பின்னர் வாயுதேவன் ஆதிஷேசனிடம் சற்று அவகாசம் கோரினான். தனது தேவ நண்பர்களை நாடினான். அவர்களும் இதில் தாங்கள் பணியை செய்ய ஒப்புக்கொண்டு, அவனுடன் பர்வதமலைக்கு வந்தனர்.

வாயுவின் நண்பர்கள் மலையை பலமாக பிடித்திருந்த ஆதிஷேசனிடம் வந்து ஏதேதோ பேசி அவனுடைய கவனத்தை திசைதிருப்பினர். ஆதிசேஷன் அசந்த நேரத்தில் தன் முழு பலம் கொண்டு மலையை வாயு இழுத்துவிட்டான். அது ஆதிஷேசனின் பிடியிலிருந்து விலகி , காற்றில் பறந்து போய் எங்கெங்கோ மோதி உலகில் பல இடங்களில் தூள் தூளாக சிதறி மலைக் குன்றுகளாக பூமியில் விழுந்தன. அந்த சிறு குன்றின் ஒரு பகுதி பூலோகத்தில் விழுந்த இடமே தென் கயிலாயமான “ சிராமலை” மற்றொரு துண்டும் தென்னிந்தியாவிலேயே விழுந்தது. , அதுவே மகா சிவராத்திரி நன்னாளில் மக்கள் துதித்து வழிபடும் திருக்காளத்தி என்ற காளஹஸ்தி. மூன்றாவதாக விழுந்த குன்றின் பகுதியே இன்றைய இலங்கை நாட்டு திரிகோணமலை.

வேறொரு புராணம் சொல்வதையும் பார்ப்போம்.
ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகத்தில் பங்கேற்று மகிழ்ந்த விபீஷ்ணன், இலங்கை தேசம் திரும்ப, விடை தரும்படி ராமரிடம் கேட்டான். அப்போது, விபீஷணனின் பக்தியை மெச்சும் வகையில், , அவனுக்கு, சயனக் கோலத்தில் இருந்த மஹாவிஷ்ணுவின் அர்ச்சா உருவத்தை பரிசாக அளித்தார் ராமர். அதை அளப்பரிய ஆனந்தத்துடன் பெற்றுக்கொண்டான் விபீஷ்ணன். ” விபீஷணா! ஒரு நிபந்தனை, இந்த சிலையை உனது தோள்களில் சுமந்துதான் நடக்க வேண்டும். உன் நாடு அடையும் வரை நடுவில் எங்கும் எக்காரணம் கொண்டும் சிலையை கீழே வைக்ககூடாது” என்று சொல்லி அனுப்பினார் ராமர். அதை சிரமேற்கொண்ட இலங்கை நாடன் , பெருமாள் திருவுருவுடன் பயணத்தைத் தொடங்கினான்.

விபீஷணன் கொண்டு வரும் பெருமாள் உரு, தென்னகத்தில் கோயில் கொள்ள வேண்டும் என்று விரும்பினார் விநாயகர், ஒரு தந்திரம் மேற்கொண்டார், விபீஷணன் சிலையுடன் காவிரி நதி தீரத்தில் நடந்து வருகையில் ஒரு பலம் பொருந்திய சிறுவனாக தோன்றினார் அவர். அந்த நதி தீரத்திலேயே தனது காலைக் கடன்களை நிறைவேற்ற எண்ணங்கொண்ட விபீஷணன் , தான் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்து சற்று தள்ளி நின்று கொண்டிருந்த சிறுவனைத் தவிர வேறு எவரும் கண்ணில் படாத நிலையில் , சிறுவனைத் தன்னருகில் வரும்படி அழைத்தான்.

பவ்யமாக தன் எதிரே வந்த அந்த சிறுவனிடம் விபீஷணன் , ” தம்பி, நான் என் நித்திய கடன்களை முடித்து விட்டு வரும் வரையில் இந்த உருவை நீ சுமந்து நில் . எக்காரணம் கொண்டும் தரையில் வைத்துவிடாதே ” என எச்சரித்து சிலையை கையில் கொடுத்தான். பெருமாள் மாடு போல தலையசைத்தவனிடம் சிலையைக் கொடுத்துவிட்டு விபீஷணன் நதி தீரம் பக்கம் நடக்க ஆரம்பித்தான்.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட விநாயகர், தான் சுமந்திருந்த பெருமாள் திருவுருவை பூமியில் இறக்கி வைத்துவிட்டார். ஏதோ உணர்வு தோன்றவே, விபீஷணன், சிறுவனை நோக்கிப் பின்புறம் திரும்ப, சிலை பூமியில் வைக்கப்பட்ட காட்சி தெரிய , அவனை சினம் பற்றி விட்டது. அவன் தன்னை நோக்கி விரைவாக வருவதைக் கண்ட பிள்ளையார் அங்கிருந்து ஓட்டம் பிடிக்கத் தொடங்கினார்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

வேகமாக ஓடும் சிறுவன் பிள்ளையார்தான் என்பதை அறியாத நிலையில், “ ஏய், நில்லு” என ஆத்திரமாக கத்திக் கொண்டு அவரைப் பிடிக்கத் துரத்தினான் விபீஷணன். ஒரு கட்டத்தில் பிள்ளையார் அவர் கையில் பிடிபடவே கோபத்தில் நறுக்கென சிறுவனான பிள்ளையார் மண்டையில் அவன் குட்டினான். குட்டுப் பட்டவுடன் விபீஷணனின் பிடி நழுவிவிடவே பிள்ளையார் ஓட்டம் பிடிக்கத் தொடங்கினார் உச்சி மலை நோக்கி.

தான் நழுவ விட்ட சிலையின் ஏக்கத்திலும் , மன வருத்தத்திலும் அங்கிருந்து இலங்கைக்குத் திரும்பினான் விபீஷணன்.

பெருமாளின் அர்ச்சா உரு பூமியில் பிள்ளையார் சங்கல்பப்படி விட்டுவிட்ட இடமே இன்றைய ஸ்ரீ ரங்கம்.

விபீஷணன் பிள்ளையார் தலையில் குட்டிய குட்டின் வடு இன்றும் உச்சி மலையில் குடி கொண்டுள்ள விநாயகரின் தலையில் காணப்படுகிறதாம்.

அடுத்தொரு சம்பவம்

காவிரிப் பூம்பட்டினத்தின் சிறந்த வணிகனான அரதனகுப்தன் என்பவனுக்கு ஒரே மகள். அவள் பெயர் ரத்னாவதி. அவளை திருச்சியில் வசிக்கும் வணிகனான தனகுந்தன் என்பவனுக்கு மணம் முடித்தான் அவன்.

உரிய காலத்தில் ரத்னாவதி கர்ப்பமானாள். பேறுகாலம் நெருங்கி விடவே அவளுடைய தாய் காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்து தன் மகளுக்கு உதவி செய்ய, திருச்சிக்கு புறப்பட்ட்டாள். இறைவன் சோதனையால் அவள் திருச்சியை நெருங்கும் போது காவிரி நதியில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு விட்டது. இதனால், அந்த தாயால் ஊருக்குள் செல்ல முடிய வில்லை. திகைத்துப் போன அவள் மன வருத்தத்துடன் அங்கேயே அமர்ந்து விட்டாள்.

திருச்சியில் பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்த ரத்னாவதி, தன் தாய் அங்கு வராததால் தல இறைவனான செந்தில்நாதனை துதித்துக் கதறினாள். அவள் பால் கருணை பூண்ட சிவபிரான், ரத்னாவதியின் அன்னை வடிவில் உருமாறி , அவள் இல்லம் சென்றார். அது தனது தாய்தான் என ரத்னாவதி நம்பிவிட்டாள். இறைவனே அம்மா வடிவில் பிரசவம் பார்க்க, அது சுக பிரசவமாகி ஒரு அழகான குழந்தை பிறந்தது.

About கீதா சுப்பிரமணியன்

கீதா சுப்பிரமணியன்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்தவர் கீதா சுப்பிரமணியன். இயற்பெயர் நாராயணி. எழுத்தாளரான இவருடைய கணவரின் விருப்பப்படி கீதா என பெயரை மாற்றிக்கொண்டார். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில் -1

நம் ஆன்மீக இந்தியாவின் மோட்சம் தரவல்ல நகரங்களாகக் குறிப்பிடப்படுகின்ற, அயோத்தி, மதுரா, மாயா, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை ஆகிய …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன