முகப்பு / சரவணக்குமார்

சரவணக்குமார்

சரவணக்குமார்
வங்கி ஊழியரான சரவணக்குமார், எழுத்தாற்றல் மிக்கவர். ஆரம்பகாலத்தில் சிறுசிறு பத்திரிகைகளில் எழுதிவந்தார். இவரது எழுத்தாற்றலைக் கண்டு, முன்னணி பத்திரிகைகள் பலவும் இவருக்கு அழைப்பு விடுத்தன. மேலும் அறிய

வள்ளிமலை சுவாமிகள் – 2

கையில் தடியுடன் கோவணாண்டியாக காட்சியளித்த ரமண மகரிஷி, அர்த்தநாரியின் கண்களுக்கு பழனி தண்டாயுதபாணியாக தெரிந்தார். திருவண்ணாமலையில் சிறிது காலம் இருந்துவிட்டு சென்னை சென்றடைந்தார் அர்த்தநாரி. அங்கு வெங்கடேச அய்யர் என்பவரது வீட்டில் தங்கிக்கொண்டார். அன்றைய தினம் கந்தர் சஷ்டி விழா என்பதால் அய்யரின் வீட்டில் அடியார்கள் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. வந்திருந்தவர்களில் ஒருவர் மட்டும் தொழுநோயால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் மகிழும் வண்ணம் அர்த்தநாரியும் அவரது மனைவியும் கவனித்துக் கொண்டனர். …

மேலும் படிக்க »

ஆதிசேஷனின் அவதாரம் – 29

என்ன ஆச்சர்யம்! ராமானுஜரின் உடலுக்குள் புகுந்த நஞ்சு அவரை ஒன்றும் செய்யவில்லை. அப்பொழுதுதான் ராமானுஜரின் சக்தி அந்த அர்ச்சகருக்கு புரிந்தது. எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என்பதை உணர்ந்து அழுதார். ராமானுஜரின் திருவடிகளை பற்றிக்கொண்டு, மன்னிக்கும்படி கதறினார். தரையில் விழுந்து புலம்பினார். ‘எல்லாம் இறைவன் செயல்’ என்றெண்ணிய ராமானுஜர், அர்ச்சகரை மன்னித்துவிட்டு புறப்பட்டார். நாட்கள் ஓடின. அன்றைக்கு யக்ஞமூர்த்தி என்கிற அத்வைத சன்யாசி ஸ்ரீரங்கத்திற்குள் நுழைந்தார். அவர் பல மாயாவாதங்களை …

மேலும் படிக்க »

வள்ளிமலை சுவாமிகள் – 1

குழந்தைகள், பெரியவர்கள் என கூட்டம் நிரம்பிய அந்த திருமண வீடு களைகட்டி இருந்தது. அனைவரிடமும் மகிழ்ச்சி அளவில்லாமல் நிரம்பி வழிந்தது. “பொண்ணை அழைச்சிண்டு வாங்கோ…” புரோகிதர் கூறிய அடுத்த சில நிமிடங்களில், மணப்பெண் நஞ்சம்மா முகத்தில் பூசிய வெட்கத்தோடு வெளியே வந்தாள். அதேநேரம் மணமேடையில் சலசலப்பு. “சீக்கிரம்… அந்த சாவிக்கொத்தை எடுத்து மாப்பிள்ளை கையில் கொடுங்க…” யாரோ ஒருவர் பெருங்குரலில் கத்தினார். வலிப்பின் காரணமாக நுரை தள்ளிய வாயுடன் மணமேடையில் …

மேலும் படிக்க »

ஆதிசேஷனின் அவதாரம் – 28

அந்த வீட்டின் முன்னால் வந்து நின்றார் ராமானுஜர். “அம்மா…” குரல் கேட்டு அன்னத்துடன் வெளியே வந்தாள் அப்பெண்மணி. கலங்கி இருந்த அவளது கண்களில் கவலை நிரம்பி வழிந்தது. ராமானுஜரின் வஸ்திரத்தில் அன்னத்தைப் போட்டவள், சட்டென அவரின் கால்களில் விழுந்து வணங்கிவிட்டு வீட்டிற்குள் நுழைந்து மறைந்தாள். ஏழு வீடுகளில் மட்டுமே யாசகம் பெறுவது ராமானுஜரின் வாடிக்கை. அப்படித்தான் இப்பொழுதும் நடந்தது. ஆனால் அப்பெண்மணியின் நடவடிக்கைகள் இன்றைக்கு வித்தியாசமாகத் தெரிந்தது. யாசகம் பெற்றதும் …

மேலும் படிக்க »

மகா அவதார் பாபாஜி-3

எங்கோதூரத்தில் தெரிந்த பிரகாசமான ஒளியை நோக்கி இருவரும் நடக்க ஆரம்பித்தனர். அருகில்நெருங்கநெருங்ககண்களைகூச வைக்கும்அளவிற்கு வெளிச்சம் கூடிக்கொண்டேபோனது இறுதியாய் கண் முன்னே ஜொலித்துக்கொண்டிருந்த அந்தத் தங்கமாளிகைக்குள் நுழைந்தனர். லாஹிரி மகாசாயர் அம்மாளிகையை பிரமிப்பாய் பார்த்தார். ஒவ்வொரு இடமும் தங்கம் தங்கம். “என்ன அப்படி பார்க்கிறாய்! இம்மாளிகை உனக்குத்தான். சென்ற பிறவியில் தங்கத்தால் ஆன மாளிகையில் வசிக்க விரும்பினாய். அது நிறைவேறவில்லை. தற்போது அதை நிறைவேற்றி பிறவிப் பெருங்கடலிலிருந்து உன்னை மீட்டெடுக்கப் போகிறேன்.” …

மேலும் படிக்க »

ஆதிசேஷனின் அவதாரம் – 27

அரங்கனின் கருவறைக்குள் நுழைந்த ராமானுஜரை பின்தொடர்ந்தான் வில்லி. “இதோ பார்… பாம்பையே பஞ்சுமெத்தையாய் பாவித்துப் பள்ளிகொண்டிருக்கும் அரங்கனின் அழகிய விழிகளைப் பார். இதைவிட கவர்ச்சி மிகுந்ததா உன் மனைவியின் கண்கள்..?” வில்லி திகைத்துப்போய் நின்றான். அக்கரிய விழிகள் அவனைக் கட்டி இழுத்தன. பதிலேதும் சொல்லாமல், பார்வையை திருப்பாமல் தன்நிலை மறந்து நிற்க ஆரம்பித்தான். கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோட ஆரம்பித்தது. அரங்கனின் மாயவிழிகளுக்கு முன் அவன் மனது மண்டியிட்டுக் …

மேலும் படிக்க »

மகா அவதார் பாபாஜி-2

சாதுக்கள்கூட்டத்துடன் இணைந்துகொண்டுஇலங்கைக்கு பயணமானான். அங்கு தங்கியிருந்தபொழுது, கதிர்காமம் திருத்தலத்தில் போகர் சித்தரை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. போகரை கண்டதும், ‘இவரே நமது குரு’ என்கிற எண்ணம் அவன் மனதில் சட்டென ஒட்டிக்கொண்டது. நாகராஜின் வேண்டுகோளை ஏற்று, தனது சீடராக்கிக்கொண்டார் போகர். இடைவிடாத ஆறுமாத போதனையின்மூலம் கிரியா யோகத்தை நாகராஜுக்கு சொல்லிக்கொடுத்திருந்தார் போகர். கடுமையான பயிற்சியின் மூலம் யோகம் கைகூடியது. முதலில் சிலமணி நேரங்கள் தியானத்தில் அமர்ந்திருந்த நாகராஜ், ஒரு கட்டத்தில் …

மேலும் படிக்க »

ஆதிசேஷனின் அவதாரம் – 26

காந்தக் கண்ணழகி பொன்னாச்சியை மணம் முடித்து தன் வீட்டிற்கு அழைத்து வந்தான் வில்லி. யாருக்கும் கிடைத்திராத அரிய வகை ரத்தினம் தனக்கு கிடைத்திருப்பதாக எண்ணி அக்கண்ணழகியை, தன் கண்களுக்குள் பொத்தி வைத்து பார்த்துக்கொண்டான். அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக, பொன்னாச்சியின் உடலில் ‘பொன்’னை ஆட்சி செய்யவைத்தான். திருவெள்ளறை மக்கள், ‘ஒரு மல்லனுக்கு வந்த வாழ்வைப் பார்த்தாயா?’ என்றுவியந்துபோனார்கள். மற்றும் சிலரோ, ‘மனைவின் பின்னால் சுற்றும் இவனெல்லாம் ஒரு மல்லனா?’ என …

மேலும் படிக்க »

மகா அவதார் பாபாஜி-1

கி.பி.208 ம்வருடத்தில்ஒருநாள்… “அம்மா நான் போய்ட்டுவர்றேன்…” தன் பிஞ்சுக்குரலில் சொல்லிய ஐந்து வயது நாகராஜை வாரிஅணைத்தாள் ஞானம்மாள். அம்மாவின் கன்னத்தில் பட்டு இதழ்களால் ‘இச்’ ஒன்றை பதித்தான் பாலகன். “பத்திரமா போயிட்டுவாய்யா…” என்றைக்கும் இல்லாமல் அன்றைக்கு அழுத்தம் திருத்தமாக வார்த்தைகள் வெளிவந்தன. “கோவில்ல இன்னைக்கு திருவிழா நடக்குது. கூட்டம்வேற அதிகமாக இருக்கும். அங்கே இங்கே வேடிக்கை பார்க்காமல், நடராஜர் தரிசனம் முடிஞ்ச உடனே கிளம்பிடணும்…” அப்பா வேதாரண்யரின் அறிவுரைக்கு தலையாட்டினான். …

மேலும் படிக்க »

ஆதிசேஷனின் அவதாரம் – 25

திருக்கோஷ்டியூர் நம்பிகளின் பதில் திருமலையாண்டானை திகைப்படைய வைத்தது. அவர் திடுக்கிட்டு நிமிர்ந்தார். “என்ன சொல்கிறீர்கள்..?” “ஆம்… ஸ்ரீஆளவந்தார் நமக்கு வாயால் சொல்லிக்கொடுத்தார். ஆனால், ராமானுஜருக்கு கண்களாலேயே அனைத்தையும் உணரவைத்துவிட்டார். ஆகையால் எம்பெருமானாரின் கூற்றை ஆளவந்தாரின் உரையாகவே எடுத்துக் கொள்ளுங்கள்…” என்ற திருக்கோஷ்டியூர் நம்பிகளை வியப்பாய் பார்த்தார் திருமலையாண்டான். அவருடைய பதில் திருமலையாண்டானின் மனதில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. இருவரும் புறப்பட்டு ராமானுஜரின் மடத்திற்கு வந்து சேர்ந்தனர். எவ்வித முகச்சுழிப்பும் …

மேலும் படிக்க »