முகப்பு / இரா. குமார்

இரா. குமார்

இரா. குமார்
சொற்கோயில் இணைய இதழின் ஆசிரியர். தினமலர் நாளிதழின் செய்தி ஆசிரியர், தினகரன் நாளிதழின் இணையாசிரியர் என முன்னணி நாளிதழ்களில் செய்திப்பிரிவின் உயர் பொறுப்பில் இருந்தவர். மேலும் அறிய

நா மணக்கும் நாச்சியார் தமிழ் -14

‘ஒருமகள் தன்னை உடையேன், உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன், செங்கண்மால் தான் கொண்டு போனான், பெருமகனாய்க் குடிவாழ்ந்து பெரும்பிள்ளை பெற்ற அசோதை மருமகளைக் கண்டு மணாட்டுப் புறம் செய்யும்’ மானிடனை மணக்க மாட்டேன் என அரங்கனை அடைய எண்ணிய தன் மகளைப் பற்றி, பெரியாழ்வார் பாடியது. பக்தியின் பெருக்கம் பாடவைக்கும் சரி! மற்றவர்களுக்காகவும் உருகி,உருகவும் வைக்குமா? ஆம்! அப்படி உருகியதால்தான் நம்பாடவல்ல நாச்சியார் கோதை,ஆண்டாள் ஆனாள். தமிழை …

மேலும் படிக்க »

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில் -2

வீர பல்லாளன் காளிங்கராயன் பாண்டியன் ஐந்தாம் சடையவர்மன், சோழ மன்னர்கள் (1018-1246), சேர மன்னர்கள் (1291-1342) போன்ற மன்னர்கள் இக்கோவிலில் பல திருப்பணிகள் செய்துள்ளனர். இராபர்ட் கிளைவ், கர்னல், லயோனல் பிளேஸ், தில்லி ஆலம்கீர் பாஷா போன்ற மாற்று மதத்தினரும் பெருமாளை வணங்கி பெருமளவில் காணிக்கைகள் செலுத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இராபர்ட் கிளைவ் ஒரு முறை காஞ்சி வரதராசப்பெருமானாரின் கருட சேவை வைபவத்தைக் கண்டு களித்து அந்த தெய்வானுபவத்தில் மகிழ்ந்துருகி, …

மேலும் படிக்க »

நாமணக்கும் நாச்சியார் தமிழ் – 11

கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர் சோதி மணிமாடந் தோன்றுமூர் நீதியால் நல்லபத்தர் வாழுமூர் நான்மறைகளோதுமூர் வில்லிபுத்தூர் வேதக் கோனூர் வேதங்களுக்கெல்லாம் வித்தாக வேதமே படிக்காத சிறுமி பாசுரமாக்க இயலுமா! வியக்கவைக்கும் தமிழையும் ஆண்டாளே அந்த சூடிக்கொடுத்த சுடர்கொடி! பெண்ணாக பிறந்தவளுக்கு வேத அத்யாயனங்கள் இன்றி அதன் பொருளை சாராசம்சத்தை இத்தனை துல்லியமாக அனைவருடனும் பகிர்ந்தளிப்பதென்றால் மாலவனின் மார்பில் அமர்பவள் செயலன்றோ! எப்போதும் அவனுடன் வாசம் செய்பவளுக்கு அவனே அவளுமாக அனைத்துமாகி …

மேலும் படிக்க »

அறுபத்து மூவர்- 9

தூய சான்றோர்கள் தொண்டாற்றிப் புகழ் சேர்த்த தொண்டை நாடு. வாய்மையிற் சிறந்த வழிவழியாக வளமார் செல்வத்துடன் வாழ்வதுமான ஊர் வளம்சேர் திருமயிலை. விளைந்த முத்தும் விளங்கிடு மணியும் வளமாய்க் கொண்ட வங்கக் கடலது வலம்புரிச் சங்கை வாரிக் கொணர்ந்து வளர்கரையில்.குவிக்கும். கடற்கரை நெடுக மரக்கலங்கள் குவித்த அயல் நாட்டெருமைகளும் அழகிய யானைகளும் அணிவகுத்து நிற்கும். களிறுகளும் கன்றெருமைகளும் கடலினில் படிந்து கருமேகக் கூட்டம் போல் கவினுறு காட்சி தரும். வீதிகள் …

மேலும் படிக்க »

அறுபத்து மூவர்- 8 முனையடுவார் நாயனார்

முனையடுவார் நாயனார் கொடும்பகை வென்று குடிகள் காக்கும் கோமகன் ஆண்ட நாடு. மலரரும்புகள் விரிந்து மணங்கமழ் சோலைகள் மதிலுடை கோயில்கள் எங்கும் நிறைந்த எழில் மிகு நாடு. சோலை மலர்கள் சொரியும் தேன் கலந்து பொங்கும் காவிரி வெள்ளம் கடலெனப் பாய்ந்து கழனிகள் நிறைக்கும். உழவர்கள் நிலத்தை உழுதிடும் வேளையில் சேறும் மணக்கும் செங்கழுநீர்ப் பூக்கள் சிரித்துச் சிலிர்க்கும். சேறு மணக்கும் கழனியெலாம் சோறு மணக்கும் மடங்களெலாம் நறு மலர்நிறையும் …

மேலும் படிக்க »

அறுபத்து மூவர் -7

செந்தமிழும் சீர்மிகு சைவமும் செழித்துத் தழைக்கும் சோழவளநாட்டில் திருத்துறைப்பூண்டியைத் தெற்காகக் கொண்டது கணமங்கலம் கழனி சிறந்து கயல்மீன்கள் விளையாடும். கரும்புகள் தேன்சொரியும். செந்நெல் வயல்களில் களைகொட்டும் சங்குமிழும் முத்துக்கள் ஒளிவீசும். அவை செந்தாமரை மீதமர்ந்து சிரிக்கும். உழவர்கள் மலர் பறித்து மகிழ்வர். நெடுங்கூந்தல்

மேலும் படிக்க »

அறுபத்துமூவர் -6

விறன்மிண்ட நாயனார் அரச வம்சத்தை அடியோடு அழிக்க ஆவேசம் கொண்ட பரசுராமனின் பாசமிகு தந்தை ஜமதக்கினி முனிவர் அம்முனிவரை அழித்து ஒழித்தான் அரசன் காத்தவீரியன். அன்புத் தந்தையின் ஆருயிர் பறித்த அரச வம்சத்தை அழிப்பேன் என சபதம் செய்தார் பரசுராமன். தன்வினை முடிக்க தண்நிலவு தரித்த சடையனை தாள் பணிந்தார் தவம் செய்தார். மன்னர் குலம் அழிக்க மழு ஆயுதம் பெற்றார் மதி சடையனிடம். அரசர் பலரை அழித்து ஒழித்து …

மேலும் படிக்க »

அறுபத்துமூவர் -5

மூர்த்தி நாயனார் தாமிரபரணி தாவிக் குதித்தோடும் கடலில் கலக்கும் நீர்த்துறை தன்னில் நீர்முத்து விளையும் அன்ன நடைபோடும் அழகுப் பெண்களின் அகன்ற விழிகளிலும் அணையும் தோள்களிலும் முத்துகள் ஒளிரும். சிரிப்பைச் சிந்தும் செவ்வாய் தன்னில் முத்தங்கள் பிறக்கும். அகிலும் சந்தனமும் அடர்ந்து வளர்ந்து அழகு காட்டும் பொதிகை மலையில் பிறந்த தென்றல் தமிழ் மணம் கமழத் தண்ணென்று வீசும். பழமைப் பெருமையும் பணமும் – நல்ல மனமும் கொண்ட மாந்தர் …

மேலும் படிக்க »

திருவாரூர் தியாகேசன் திருக்கோயில் -9

புகழ் பெற்ற திருவாரூர் ஆலயத்தில் குடி கொண்டு அருள்பாலிக்கும் தெய்வத் தனிச் சந்நிதிகள், தனி மண்டபங்கள் , பிரகார தேவதைகள், மகான்கள், மகரிஷிகள், மன்னர்கள், ஆகியோர் பற்றிய விவரங்களை இனி பார்ப்போம். அருள்மிகு வன்மீகநாதர் (எ) புற்றிடங்கொண்டார் “ அணுக்கன் வாயில் “ என்னும் தொன்மை பொருந்திய எழிலான கோபுரம் கொண்ட வாயில் பக்கம் நிறுவப்பட்டுள்ள பெரிய துவஜஸ்தம்பம் கண்ணைக் கவரும் வகையில் உள்ளது. இது கி.பி 1717ம் ஆண்டில் …

மேலும் படிக்க »

அறுபத்துமூவர் -4

மானக்கஞ்சாற நாயனார் கொம்புத் தேனும் கொழுங்கனிச்சாறும் வடிந்து திரண்டு வாய்க்கால்கள் வழி பாய்ந்தோடிக் கழனிகளில் கரும்புச் சாறுடன் கலந்து மணக்கும். அறுவகை ஆகமம் அறிந்த அந்தணர் அளவற்ற பெருமையுடை அவ்வூர் கஞ்சாறூர். மணி ஒளிவீசும் மாடங்களும் மதிதொடும் மதில்களும் மண்டிக்கிடக்கும் கழனி வளமும் கலைவளமும் நிறைந்து கிடக்கும் கஞ்சாறூரில் வேள்வி சிறக்கவும் வேளாண்மை தழைக்கவும் வெள்ளி முளைத்தாற்போல் வேளாளர் குலத்தில் மகனாய் பிறந்தவர் மானக்கஞ்சாறனார். வன்தோள் மன்னர்க்கு வழிவழியாய் வாட்படைத் …

மேலும் படிக்க »