முகப்பு / கீதா சுப்பிரமணியன்

கீதா சுப்பிரமணியன்

கீதா சுப்பிரமணியன்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்தவர் கீதா சுப்பிரமணியன். இயற்பெயர் நாராயணி. எழுத்தாளரான இவருடைய கணவரின் விருப்பப்படி கீதா என பெயரை மாற்றிக்கொண்டார். மேலும் அறிய

திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவ சுவாமி திருக்கோயில் -3

திருச்சியில் பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்த ரத்னாவதி, தன் தாய் அங்கு வராததால் தல இறைவனான செந்தில்நாதனை துதித்துக் கதறினாள். அவள் பால் கருணை பூண்ட சிவபிரான், ரத்னாவதியின் அன்னை வடிவில் உருமாறி , அவள் இல்லம் சென்றார்.,, அது தனது தாய்தான் என ரத்னாவதி நம்பிவிட்டாள். இறைவனே அம்மா வடிவில் பிரசவம் பார்க்க, அது சுக பிரசவமாகி ஒரு அழகான குழந்தை பிறந்தது. வெள்ளம் வடிந்த பிறகு, ரத்னாவதியின் தாய் …

மேலும் படிக்க »

திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவ சுவாமி திருக்கோயில் -2

ஒரு சமயத்தில் ஆதிஷேசனுக்கும், வாயுதேவனுக்கும் தங்களில் யார் பலசாலி என்ற போட்டி ஏற்பட்டது. தங்கள் பலத்தை நிரூபிக்க பர்வத மலையை தேர்ந்தெடுத்துக் கொண்டனர் அவர்கள். பர்வதமலையை ஆதிஷேசன் இறுகப் பற்றிக்கொள்ள, ஆதிஷேசனிடமிருந்து அந்த மலையை வாயுதேவன் பறித்து விட்டால், தான் தோற்றதாக அர்த்தம் என ஆதிஷேசன் சவால் விட்டான். அதனை உற்சாகமாக ஏற்றுக்கொண்டான் வாயு. அதன் படி பர்வதமலையை தன் கரங்களால் ஆதிஷேசன்மிக இறுகப் பற்றிக்கொனடான். வாயு தன் பலம் …

மேலும் படிக்க »

திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவ சுவாமி திருக்கோயில் -1

சக்கரவர்த்தி ராஜராஜ சோழன் ஆலய கல்வெட்டில் ” சிற்றம்பர்” எனவும், வேறு சில மன்னர்கள் “திரிசிரபுரம்“ எனவும் தங்கள் கால கல்வெட்டுகளில் பதிவு செய்ததும், மகான் அருணகிரி நாதர் அருளிய பாடல் ஒன்றில் ” சிரகிரி” என போற்றியதும் 10ம் நூற்றாண்டுக்காரரான நாராயண வேம்பர்கோன் என்பவர் ”சிராமலை” என்று குறிப்பிட்டதுவுமான ஒரு தலம், நம்மை அடிமையாக்கி ஆண்ட வெள்ளையர் காலத்தில் டிரிச்சினாப்பள்ளி“ என பெயர் திரிந்து அழைக்கப்பட்டது. அந்த பிரசித்தி …

மேலும் படிக்க »

வடுவூர் ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருக்கோயில்

  “ கற்பார் இராம பிரானையலால் மற்றும் புற்பா முதலாப் புல்லேறும் பாதி றந்தின்றியே நற்பால யோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுனே ” என திருவாய்மொழி ( ஏழாம் பத்து 5ல்) ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தி, பிரிய பிராட்டி சீதா தேவி , அருமை இளவல் இலக்குவனுடன் எழுந்தருளிய திருத்தலம் வடுவூர். வடுவூர் என்றால் ”அழகிய ஊர்” , …

மேலும் படிக்க »

திருமாகறலில் திருக்காட்சியருளும் ஈசுவரன்!!

”காலையொடு துந்துபிகள் சங்குழல் யாழ் முழுவு காமருவுசீர் மாலை வழி பாடு செய்து மாதவர்கள் ஏந்தி மகிழ் மாகறலுனான் தோலையுடை பேணியதன் மேலோர் சுடர் நாக மசை யாவழகிதாப் பாலையன நீரு புனை வானடியை யேத்த வினை பறையுடை மூலனே” என பெருமையாக திருஞானசம்பந்த சுவாமிகளால் தேவாரப் பாடல் பெற்ற சர்வேஸ்வரன், 12 திருநாமங்கள் பூண்டு எழுந்தருளிய சிறப்புத் தலமாக விளங்குகிறது திருமாகறல் தலம். அத்தனை நாமங்களும் காரணப் பெயராகவே …

மேலும் படிக்க »

திருப்பனங்காட்டு ஈசுவரன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அடங்கும் செய்யாறு வட்டத்தில் உள்ளது திருப்பனங்காடு. தேவாரத் திருத்தலங்களில் 9ம் தலமாக இடம்பெற்றுள்ளது. இவ்வூர் அக்காலத்தில் “ திருவன்பார்த்தான் பனங்காட்டூர் “ என்று அழைக்கப்பட்டது. இத்தலச் சிறப்பு என்னவென்றால் பரமேஸ்வரன் தாலபுரீசுவரர் என்றும் திரிபாபுரீசுவரர் என்றும் இரு தனித்தனி சந்நிதிகளில் லிங்க வடிவில் எழுந்தருள, அம்பாளும் முறையே கிருபாநாயகி, அமிர்தவல்லி என்று இரண்டு நாமங்களை பூண்டு குடியேறி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். இங்கே கயிலாய நாதனையும் பார்வதி …

மேலும் படிக்க »

பொங்கு சனீஸ்வரர் மகிழ்ச்சி பொங்க அருளும் திருக்கொள்ளிக்காடு.

நிணம் படு சுடலை மினீறு பூசி நின் றிணங் குவர் போய்களோடி டுவர் மாநடம் உணங்கல வெண் டலை தன்னில் உண்பாராயினும் குணம் பெரி துடையர் நங் கொள்ளிக்காடரே! என்று தொடங்கும் முதல் பதிகத்தோடு திருஞான சம்பந்தர் இயற்றியருளிய மொத்தம் 11 திருப்பதிகங்களிலும் துதித்து வணங்கிய தலமாக விளங்குகிறது திருக்கொள்ளுக்காடு.   “கொள்ளி” என்ற சொல் தமிழில் அக்னி , தீ என்ற பொருளைத் தரும். அது பஞ்ச பூதங்களில் …

மேலும் படிக்க »

ஏழு கடல்கள் எழுந்த திருநல்லூர் திருத்தலம் -1

நீத்த நெறியானை நீங்கா தவத்தானை  நாத்த நெறியானை நல்லூர் பெருமானை காத்த நெறியானை, கை கூப்பி  ஏத்தும் அடியார்க்கு இல்லை இடர்தானே என்று திருஞானசம்பந்தரால் போற்றப்பெற்றதும், தேவார நூலில் திருநாவுக்கரசரால் பல பாடல்களால் புகழப்பெற்றதுமான ஒரு திருத்தலமாக திகழ்கிறது திருநல்லூர். தஞ்சை – கும்பகோணம் நெடுஞ்சாலையில் பாபநாசத்திற்கு கிழக்கே வாழைப்பழக் கடை என்ற பகுதியிலிருந்து தெற்கே சுமார் ஒரு கி. மீ. தூரத்தில் திருநல்லூர் அமைந்துள்ளது. Sorkoyil-சொற்கோயில்Aanmeegathin Puthiya Parinamam.JOIN …

மேலும் படிக்க »

திருவாரூர் தியாகேசன் திருக்கோயில் -14

தோண்டத் தோண்டக் கிடைக்கும் தங்கப் புதையல் போல ஆரூரில் கிடைத்து வரும் அற்புதத் தகவல்களைத் தொடர்ந்து, அங்குள்ள வேறு சில கோயில்கள், தனிக் கோஷ்டங்கள் , ஆகியவற்றைப் பார்ப்போம். தியாகராஜர் எழுந்தருளியுள்ள ஆலய இரண்டாம் சுற்றின் தென்புறத்தில் உள்ள ஆடகேசுவரம் கோயிலும் சில சிறப்புக்களைக் கொண்டுள்ளது. நாகபிலம் என்பது இங்குள்ள சிறப்புக்களில் ஒன்றாக, ஈசன் தேவியுடன் குடிகொண்டு அருளாசி வழங்குகிறார். இந்த ஈசுவரனை முழு மனதுடன் பூஜித்து வழிபடுவோர், இந்திரப் …

மேலும் படிக்க »

திருவாரூர் தியாகேசன் திருக்கோயில் -13

அருள்மிகு வன்மீகநாதர் குடிகொண்ட பூங்கோயிலின் வட மேற்கில் , தேவதீர்த்ததிற்கு கிழக்கில் அருள்மிகு கமலாம்பாள் சந்நிதியின் தென் கிழக்கில் வாணி தீர்த்தம் அருகே தனிக் கோயில் கொண்டுள்ளார் அருள்மிகு ஆனந்தேசுவரர். பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கமலமுனி இக்கோயிலில் யோக நிஷ்டையில் அமர்ந்துள்ளார். இவ்வாலய தென்படிக்கட்டுகள் வழியாக நுழைந்து திரும்ப , இடது புறத்தில் காட்சி தருவார் குனிந்து கும்பிடும் விநாயகர். இங்குள்ள நுழைவாயிலின் வலது புறத்தில் ஸ்ரீ மகாலெட்சுமியின் மூத்த …

மேலும் படிக்க »