முகப்பு / அறுபத்து மூவர் / இளையான்குடி மாற நாயனார் – 3

இளையான்குடி மாற நாயனார் – 3

சிவனடியார் வேடமிட்டு
சோதிக்க வந்த
சிவபெருமானோ
ஜோதிமயமாய்
ஜொலித்து நின்றார்.

அமுதுண்ண வந்தவர்
அருட்பெருஞ் ஜோதியாய்
ஆனது கண்டு
திகைத்தார் மாறனார் – அவர்
மனைவியும்
மனம் பதைத்தார்.

உள்ளம் மகிழ்ந்த
உலகெலாம் உணர்ந்தவன்
உமையொருபாகனாய்
காட்சி தந்தார் பெரும்
மாட்சி தந்தார்.
“அறுசுவை உணவை
அடியார்க்குப்
படைக்கும்
அன்பனே! 

– என்
அடியவர்க்கு
நண்பனே!
மாறனே – நின்
மனைவியுடன் – என்
பேருலகடைந்து
எம்மிடம் வருக!

அங்கே
செல்வத்தில்
சிறந்த குபேரன்
சங்கநிதி
பதுமநிதி
கையில் ஏந்தி
காத்திருப்பான்.
உன் சொற்கேட்டு
பணிபுரிவான்.

எல்லையில்லா
இன்பம் காண்பீர்’ ‘ – என
அருளுரைத்தார்
ஐந்தொழிலார்
சிவனடி வணங்கி
சிந்தை மகிழ்ந்து – ஈசன்
இணையடி நிழலில்
இருக்க விரும்பினார்
மாறனாரும் மனைவியும்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

பேரின்ப
வீடு பெற்று
சிவபெருமானின்
சீரடி அடைந்தனர்
சிவனருளில் திளைத்தனர்.

(முற்றும்)

About இரா. குமார்

இரா. குமார்
சொற்கோயில் இணைய இதழின் ஆசிரியர். தினமலர் நாளிதழின் செய்தி ஆசிரியர், தினகரன் நாளிதழின் இணையாசிரியர் என முன்னணி நாளிதழ்களில் செய்திப்பிரிவின் உயர் பொறுப்பில் இருந்தவர். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

அறுபத்துமூவர் -6

விறன்மிண்ட நாயனார் அரச வம்சத்தை அடியோடு அழிக்க ஆவேசம் கொண்ட பரசுராமனின் பாசமிகு தந்தை ஜமதக்கினி முனிவர் அம்முனிவரை அழித்து …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன