முகப்பு / அறுபத்து மூவர் / அறுபத்து மூவர்- 9

அறுபத்து மூவர்- 9

தூ சான்றோர்கள்
தொண்டாற்றிப்
புகழ் சேர்த்த
தொண்டை நாடு.

வாய்மையிற் சிறந்த
வழிவழியாக
வளமார் செல்வத்துடன்
வாழ்வதுமான ஊர்
வளம்சேர் திருமயிலை.

விளைந்த முத்தும்
விளங்கிடு மணியும்
வளமாய்க் கொண்ட
வங்கக் கடலது
வலம்புரிச் சங்கை
வாரிக் கொணர்ந்து
வளர்கரையில்.குவிக்கும்.

கடற்கரை நெடுக
மரக்கலங்கள் குவித்த
அயல் நாட்டெருமைகளும்
அழகிய யானைகளும்
அணிவகுத்து நிற்கும்.
களிறுகளும்
கன்றெருமைகளும்
கடலினில் படிந்து
கருமேகக் கூட்டம் போல்
கவினுறு காட்சி தரும்.

வீதிகள் எங்கும்
விழாச் சிறப்புகள்
விளங்கத் தோன்றும்.
மாதர் கூந்தலில்
மலர்கள் மீது
மண்டிடும் வண்டுகள்.
கருங்கூந்தல் வண்டுகள்
காளையருக்குத் தூதாகும்.

அழகிய மாளிகைகளில்
அணிகளும் நிதிகளும்
அகலாது நிலைக்கும்.
வளமார் மயிலையில்
வேளாளர் குலத்தில்
வந்துதித்தார்
வாயிலார் எனும்
வள்ளல் பெருமான்.

Sorkoyil-சொற்கோயில்
Aanmeegathin Puthiya Parinamam.

பெருங்குடியில் பிறந்த
பெருமான் வாயிலார்
பெருவிருப்புக் கொண்டு
திருநெறி சிறக்க
திருத்தொண்டாற்றினார்.

மறவாமை கருவியால்
மனமெனும் கோயிலில்
மதிசடையானை இருத்தி
ஞானச் சுடர்விளக்கு
நாளும் ஏற்றித்
திருப்பேரானந்தத்
திருமஞ்சனமாட்டித்
திருமன அன்பால்
திருவமுது படைத்து
நன்மலர்ப் பூசை
நாளும் செய்தார்.


அகத்தினுள் இருத்தி
அன்புடன் பூசை
அனுதினம் செய்த
அடியார் வாயிலார்க்கு
அருள் புரிந்தான்
அம்பலத்தான்.
அவனடி சேர்ந்தார்
அருட்திரு வாயிலார்.

About இரா. குமார்

இரா. குமார்
சொற்கோயில் இணைய இதழின் ஆசிரியர். தினமலர் நாளிதழின் செய்தி ஆசிரியர், தினகரன் நாளிதழின் இணையாசிரியர் என முன்னணி நாளிதழ்களில் செய்திப்பிரிவின் உயர் பொறுப்பில் இருந்தவர். மேலும் அறிய

மேலும் படிக்கவும்

அறுபத்துமூவர் -5

மூர்த்தி நாயனார் தாமிரபரணி தாவிக் குதித்தோடும் கடலில் கலக்கும் நீர்த்துறை தன்னில் நீர்முத்து விளையும் அன்ன நடைபோடும் அழகுப் பெண்களின் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன