முகப்பு / ஆசிரியர் – இரா. குமார்

ஆசிரியர் – இரா. குமார்

சொற்கோயில் இணைய இதழின் ஆசிரியர் இரா. குமார். தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ., எம்.ஃபில். பட்டம் பெற்றவர். 33 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றி வருகிறார். தினமலர், தினகரன் ஆகிய நாளிதழ்களின் செய்திப் பிரிவின் உயர் பொறுப்புகளை வகித்து திறம்படப் பணியாற்ற்றியவர். சொற்கோயில் என்ற மாதம் இருமுறை ஆன்மீக இதழை சொந்தமாகத் தொடங்கி நடத்தி வந்தார். சொற்கோயில் இதழ் இப்போது இணைய இதழாக வருகிறது. இதற்கும் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுள்ளார்.
இதழியல் துறையில் தனக்கெனத் தனிமுத்திரை பதித்துள்ள இவர் எழுதிய ’நடைமுறை இதழியல்’ நூல் பல பல்கலைக்கழகங்களில் இதழியல் மாணவர்களுக்கு பாடநூலாக உள்ளது. ஆன்மீகம் உடபட பல தளங்களில் இதுவரை பத்து நூல்கள் எழுதியுள்ளார்.
இவர் எழுதிய ஆன்மீக நூல்களைப் பாரட்டி, தருமை ஆதீனம் இளைய சன்னிதானம் முத்துக்குமாரசாமித் தம்பிரான் அவர்கள், இவருக்கு ‘இறைத்தமிழ் வேந்தர்’ என்ற பட்டமளித்துச் சிறப்பித்தார். புதுக்கோட்டை இலக்கியப் பேரவை, இவருக்கு, ;ஆன்மீகச்சுடர்’ என்ற பட்டமளித்து மகிழ்ந்துள்ளது. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் சார்பில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில், 2014 ஆம் ஆண்டுக்கான் சிறந்த எழுத்தாளர் விருதை இவர் பெற்றுள்ளார். இன்னும் பல் விருதுகளையும் பட்டங்களையும் பெற்றுள்ளார்.