முகப்பு / 2018 / ஆகஸ்ட்

மாதாந்திர ஆவண தொகுப்பு காப்பகம்: ஆகஸ்ட் 2018

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37

அந்த வில்லினுடைய பிரவாகத்தை மானுடர்கள் சொல்லத் துவங்குகிறhர்கள். ” பாணாசுரன் போன்ற வீரர்கள் கூட இதை அசைக்க முடியவில்லை. ராஜாக்களுனுடைய பலம் சந்திரன். அந்த சந்திரனையே விழுங்கும் இராகுவை போன்றது இந்த சிவதனுசு . வில்லினுடைய கனமும், கொடுர தன்மையும் எல்லோரும் அறிந்ததே. வலிவு உள்ள வீரர்கள் முயற்சி செய்து பார்க்கலாம். வில்லை வளைத்து யார் நாணேற்றுகிறார்களோ அவர்கள் ஜானகியை வரிக்கலாம் என்று எங்கள் மன்னரான ஜனகர் சொல்கிறார்” என்று …

மேலும் படிக்க »

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36

சீதை நாணத்துடன் கண் திறந்து இராமரின் கால் நகத்திலிருந்து கழுத்து வரை ஆழமாக ஊடுருவி பார்க்கிறாள். அந்த இரண்டு சிங்கங்களையும் தரிசிக்கிறாள். அவளுக்கு தன் தந்தையினுடைய பயங்கரமான சபதம் ஞாபகம் வந்தது . இந்த இளைஞன் வில் வளைக்க வேண்டுமே என்ற கவலை ஏற்பட்டது . வேறு யாரும் வளைக்கக் கூடாதே என்ற பயம் வந்தது . மயக்கமான ஒரு நிலையில் சீதை இருப்பதை கண்டு மற்ற தோழிகள் பயந்தார்கள் …

மேலும் படிக்க »

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35

தன்னைச் சுற்றி வந்த சிறுவர்களை தன் மாளிகை வாசலில் நிறுத்தி விடை கொடுத்து அனுப்பி விட்டு இராமரும், லக்ஷ்மணரும் உள்ளே வந்து விஸ்வாமித்திரரை விழுந்து வணங்கினார்கள். சந்தியா காலம் நெருங்கி விட்டதே என்று சந்தியாவந்தனம் செய்தார்கள். விஸ்வாமித்திரர் எதிரே உட்கார்ந்து கொண்டு தொடர்ந்து அவரோடு சம்பாஷனையில் ஈடுபட்டார்கள். அவர் கண்ணயர்ந்து கால்நீட்டி படுக்கையில் சாய, இராமரும், லக்ஷ்மணரும் அவருக்கு கால் பிடித்து விட்டார்கள். ” இராமா, நடுநிசி வந்து விட்டது …

மேலும் படிக்க »