முகப்பு / 2018 / ஜூலை

மாதாந்திர ஆவண தொகுப்பு காப்பகம்: ஜூலை 2018

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34

இராமருடைய சகோதரன் லக்ஷ்மணனுக்கு ஜனகபுரியை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்தது . ஆனால் அதை இராமரிடம் கேட்பதற்கு கொஞ்சம் பயம் இருந்தது . ஆனால் அதை புரிந்து கொண்ட இராமர், விஸ்வாமித்திரரிடம் போய் கை கூப்பி, ”நீங்கள் கட்டளையிட்டால் நானும் ,லக்ஷ்மணனும் ஜனகபுரியை சுற்றிப் பார்த்து விட்டு வருகிறோம்” என்று பவ்யமாகக் கேட்டார். ”உனக்கு நான்கட்டளை இடுவதா. ஜனகபுரியை சுற்றிப் பார்க்கவா. அவர்கள் கண்கள் சுகத்திற்காக நீ …

மேலும் படிக்க »

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33

“ஒரு வில்லை முன்னிட்டு வேள்வி செய்வதாக கேள்விப்பட்டோம். அந்த வில்லைப் பார்ப்பதற்கு ஸ்ரீ இராமர் விரும்புகிறார். அது என்ன வில், எங்கிருந்து உங்களுக்குக் கிடைத்தது என்ற விவரத்தைச் சொல்லுங்கள்” என்று விஸ்வாமித்திரர் கட்டளையிட,அந்த வில் பல சக்கரங்கள் வைத்த பெட்டியில் கொண்டுவரப்பட்டது. திறந்து ஸ்ரீ இராமருக்கு காட்டப்பட்டது. “தட்சனுடைய யாகத்தில் சிவன் புறக்கணிக்கப்பட, மற்ற தேவர்கள் தட்சனுடைய யாகத்தில் வந்து அவிஸை ஏற்றுக்கொள்ள, என்னை புறக்கணித்த யாகத்தில் நீங்கள் எப்படிப் …

மேலும் படிக்க »

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 32

பல்லாயிரக்கனக்கான ஆண்டுகள் தவம் செய்த பிறகு பிரம்மா அவர் முன் தோன்றி ரிஷி என்ற இடத்தை அடைந்திருக்கிறீர்கள். இன்னும், தொடர்ந்து செய்யுங்கள் என்று சொல்ல, அதனால் சஞ்சலமடைந்த விஸ்வாமித்திரர் இன்னும் கடுமையாக தன் தவத்தை செய்யத் துவங்கினார். அப்ஸர ஸ்தீரியில் சிறந்தவளான மேனகை அந்த புஷ்கரத்தில் குளிக்க வர, அவள் பேரழகைக் கண்டு விஸ்வாமித்திரர் மோகித்தார். அவருடன் பத்தாண்டுகள் கூடிக் குலவி சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். மறுபடியும் தவம் குறைந்தது. …

மேலும் படிக்க »

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 31

பலவிதமான மந்திரங்களால் அக்னியில் திரவியங்களை சொரிந்து அந்த அவிஸை தேவர்களுக்கு கொடுப்பதற்கு முயற்சி செய்தபோது எந்த தேவரும் அதை வாங்கவில்லை. விஸ்வாமித்திரருடைய இந்த முயற்சியை அவர்கள் ஆதரிக்கவில்லை. விஸ்வாமித்திரர் சினம் கொண்டார். யாகத்திற்கு நெய் ஊற்றும் மரக்கரண்டியை உயரே பிடித்து, “ திரிசங்கே, போ. சொர்க்கத்துக்கு போ” என்று உரக்க கத்த, திரிசங்கு பூமியிலிருந்து கிளம்பி நேரே தேவலோகத்திற்குப் போனான். அங்கே இந்திரன் அவனைப் பார்த்துத் திகைத்தான். “ இந்த …

மேலும் படிக்க »

நா மணக்கும் நாச்சியார் தமிழ் -15.

திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே! திருப்பாவை முப்பதுஞ் செப்பினாள் வாழியே! பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே! பெரும்புதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே ! ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே ! உயரரங்கர்க்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே! மருவாருந் திருமல்லி வளநாடி வாழியே! வன்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே! அன்னம் நடைபயிலும் திருவில்லிபுத்தூரில் கண்ணனின் கதை கேட்டு வளர்ந்தவள், துளசிச்செடியின் மடியில் அவதரித்தகோதை. ஆயர்பாடியில் கண்ணனை பாலையும் நெய்யயையும் ஊட்டி வளர்த்தாள் …

மேலும் படிக்க »

திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவ சுவாமி திருக்கோயில் -3

திருச்சியில் பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்த ரத்னாவதி, தன் தாய் அங்கு வராததால் தல இறைவனான செந்தில்நாதனை துதித்துக் கதறினாள். அவள் பால் கருணை பூண்ட சிவபிரான், ரத்னாவதியின் அன்னை வடிவில் உருமாறி , அவள் இல்லம் சென்றார்.,, அது தனது தாய்தான் என ரத்னாவதி நம்பிவிட்டாள். இறைவனே அம்மா வடிவில் பிரசவம் பார்க்க, அது சுக பிரசவமாகி ஒரு அழகான குழந்தை பிறந்தது. வெள்ளம் வடிந்த பிறகு, ரத்னாவதியின் தாய் …

மேலும் படிக்க »

வள்ளிமலை சுவாமிகள் – 2

கையில் தடியுடன் கோவணாண்டியாக காட்சியளித்த ரமண மகரிஷி, அர்த்தநாரியின் கண்களுக்கு பழனி தண்டாயுதபாணியாக தெரிந்தார். திருவண்ணாமலையில் சிறிது காலம் இருந்துவிட்டு சென்னை சென்றடைந்தார் அர்த்தநாரி. அங்கு வெங்கடேச அய்யர் என்பவரது வீட்டில் தங்கிக்கொண்டார். அன்றைய தினம் கந்தர் சஷ்டி விழா என்பதால் அய்யரின் வீட்டில் அடியார்கள் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. வந்திருந்தவர்களில் ஒருவர் மட்டும் தொழுநோயால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் மகிழும் வண்ணம் அர்த்தநாரியும் அவரது மனைவியும் கவனித்துக் கொண்டனர். …

மேலும் படிக்க »

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் -30

தான் தவம் செய்து பெற்ற அஸ்திரங்கள் அத்தனையும் தன்னுடைய தண்டத்தால் தடுத்து நிறுத்தி எதுவும் இல்லாமல் செய்ததை கண்ணாரக் கண்ட ஷத்திரியரான விஸ்வாமித்திரர், ஷத்திரியருடைய பலம் ஒரு பலமா, பிரம்ம தேஜஸ்தான் உண்மையான பலம். அந்தணருடைய தவத்திற்கு முன்பு ஷத்திரியருடைய அஸ்திரங்கள் எதற்கும் லாயக்கற்றவை என்று நொந்து வசிஷ்டரை விட்டு விலகிப் போனார். தோல்வியை ஒப்புக்கொண்டார். ஆனால் வசிஷ்டரை நோக்கிய அவருடைய பகைமை அழியவில்லை. வளர்ந்து கொண்டே இருந்தது. இனி …

மேலும் படிக்க »

ஞானமித்ரர் – 10

சாபமும் வரமாகட்டும் “வாழ்க்கை நமக்கு வழங்கப்பட்டிருக்கும் ஓர் அரிய வாய்ப்பு. அதை வரமாகக் கொண்டாடுவதும், சாபமாக மாற்றுவதும் நம் கைகளில் தான் உள்ளது!” சுவாமி ஸ்ரீ ஞானமித்ரர் அன்றைய பிரசங்கத்தை இப்படித்தான் ஆரம்பித்தார். ‘ஸ்ரீ ஞானாலயம்’ ஆசிரம வளாகத்தில், ஆசிரம சீடர்களும், பக்த அன்பர்களும் சுவாமிகளின் சொற்பொழிவை கேட்பதற்குத் திரளாக அமர்ந்திருந்தனர். அரங்கம் மௌனத்தால் நிறைந்திருந்தது. ஆசிரமத்திற்கு வெளியில், வான வில்லினினின்று மழை அம்புகள் சடசடவென்று வந்திறங்கியது. தூறல் பெருமழையாக …

மேலும் படிக்க »