முகப்பு / 2018 / ஜூன்

மாதாந்திர ஆவண தொகுப்பு காப்பகம்: ஜூன் 2018

நா மணக்கும் நாச்சியார் தமிழ் -14

‘ஒருமகள் தன்னை உடையேன், உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன், செங்கண்மால் தான் கொண்டு போனான், பெருமகனாய்க் குடிவாழ்ந்து பெரும்பிள்ளை பெற்ற அசோதை மருமகளைக் கண்டு மணாட்டுப் புறம் செய்யும்’ மானிடனை மணக்க மாட்டேன் என அரங்கனை அடைய எண்ணிய தன் மகளைப் பற்றி, பெரியாழ்வார் பாடியது. பக்தியின் பெருக்கம் பாடவைக்கும் சரி! மற்றவர்களுக்காகவும் உருகி,உருகவும் வைக்குமா? ஆம்! அப்படி உருகியதால்தான் நம்பாடவல்ல நாச்சியார் கோதை,ஆண்டாள் ஆனாள். தமிழை …

மேலும் படிக்க »

கடவுள் எப்படி கை கொடுப்பார்?

ஆற்றின் கரை உடைப்பால், அந்தக் கிராமமே மூழ்க ஆரம்பித்துவிட்டது. எல்லோரும் வெளியேறத் தொடங்கிவிட்டனர். ஒருவன் மட்டும், “நான் உங்களைப் போல பயந்து ஓடமாட்டேன். நான் பக்தன்; கடவுளை நம்புகிறவன். கடவுள் என்னைக் காப்பாற்றுவார்” என்று சொல்லிவிட்டு அங்கேயே தங்கிவிடுகிறான். அன்று இரவு, வீட்டுக்குள் வெள்ளம் புகுந்துவிட்டது. அவன், கூரை மீது ஏறி நின்றுகொண்டு கடவுளை நோக்கிப் பிரார்த்தனை செய்தான். அப்போது, கிராமத்தினர் சிலர் படகில் ஏறி, தப்பிச் சென்றுகொண்டிருந்தனர். பக்தனைப் …

மேலும் படிக்க »

திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவ சுவாமி திருக்கோயில் -2

ஒரு சமயத்தில் ஆதிஷேசனுக்கும், வாயுதேவனுக்கும் தங்களில் யார் பலசாலி என்ற போட்டி ஏற்பட்டது. தங்கள் பலத்தை நிரூபிக்க பர்வத மலையை தேர்ந்தெடுத்துக் கொண்டனர் அவர்கள். பர்வதமலையை ஆதிஷேசன் இறுகப் பற்றிக்கொள்ள, ஆதிஷேசனிடமிருந்து அந்த மலையை வாயுதேவன் பறித்து விட்டால், தான் தோற்றதாக அர்த்தம் என ஆதிஷேசன் சவால் விட்டான். அதனை உற்சாகமாக ஏற்றுக்கொண்டான் வாயு. அதன் படி பர்வதமலையை தன் கரங்களால் ஆதிஷேசன்மிக இறுகப் பற்றிக்கொனடான். வாயு தன் பலம் …

மேலும் படிக்க »

ஆதிசேஷனின் அவதாரம் – 29

என்ன ஆச்சர்யம்! ராமானுஜரின் உடலுக்குள் புகுந்த நஞ்சு அவரை ஒன்றும் செய்யவில்லை. அப்பொழுதுதான் ராமானுஜரின் சக்தி அந்த அர்ச்சகருக்கு புரிந்தது. எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என்பதை உணர்ந்து அழுதார். ராமானுஜரின் திருவடிகளை பற்றிக்கொண்டு, மன்னிக்கும்படி கதறினார். தரையில் விழுந்து புலம்பினார். ‘எல்லாம் இறைவன் செயல்’ என்றெண்ணிய ராமானுஜர், அர்ச்சகரை மன்னித்துவிட்டு புறப்பட்டார். நாட்கள் ஓடின. அன்றைக்கு யக்ஞமூர்த்தி என்கிற அத்வைத சன்யாசி ஸ்ரீரங்கத்திற்குள் நுழைந்தார். அவர் பல மாயாவாதங்களை …

மேலும் படிக்க »

வள்ளிமலை சுவாமிகள் – 1

குழந்தைகள், பெரியவர்கள் என கூட்டம் நிரம்பிய அந்த திருமண வீடு களைகட்டி இருந்தது. அனைவரிடமும் மகிழ்ச்சி அளவில்லாமல் நிரம்பி வழிந்தது. “பொண்ணை அழைச்சிண்டு வாங்கோ…” புரோகிதர் கூறிய அடுத்த சில நிமிடங்களில், மணப்பெண் நஞ்சம்மா முகத்தில் பூசிய வெட்கத்தோடு வெளியே வந்தாள். அதேநேரம் மணமேடையில் சலசலப்பு. “சீக்கிரம்… அந்த சாவிக்கொத்தை எடுத்து மாப்பிள்ளை கையில் கொடுங்க…” யாரோ ஒருவர் பெருங்குரலில் கத்தினார். வலிப்பின் காரணமாக நுரை தள்ளிய வாயுடன் மணமேடையில் …

மேலும் படிக்க »

ஞானமித்ரர் – 9

நிலவொளியில் குளிர்ந்த மனம் வானத்தில் சூரியன் முழுமையாக மறையாததால், நிலா நாணப்பட்டு மெல்ல மெல்ல எட்டிப் பார்த்தது, அந்த நாணத்திற்கு சாட்சியாக மேல் வானம் சிவந்திருந்தது. ‘ஸ்ரீ ஞானாலயம்’ ஆசிரமத்தின் தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்த, சுவாமி ஸ்ரீ ஞானமித்ரரை தொழிலதிபர் ஒருவர் தனிமையில் சந்தித்துப் பேசினார். “சுவாமி, நான் பிறக்கும்போதே பணக்காரன் இல்லை. சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவன்தான். அல்லும் பகலும் மிகக் கடுமையாக உழைத்து இன்று பல தொழிற்சாலைகளை நிறுவியுள்ளேன். …

மேலும் படிக்க »

நா மணக்கும் நாச்சியார் தமிழ் -13

ஆண்டாள் வந்தாள்! ஆழ்வார் திருமகளார் வந்தாள்! சூடிக்கொடுத்தாள் வந்தாள்! சுரும்பார் குழற்கோதை வந்தாள்! திருப்பாவை பாடிய செல்வி வந்தாள்! தென்னரங்கம் தொழும் தேசுடையாள் வந்தாள்! சூடிக்கொடுத்த சுடர்கொடியாள் நம் கோதைப்பெண் சிறுமி, பாடவல்ல நாச்சியார் ஆகி இன்னிசையுடன் கூடிய முப்பது தமிழ் மாலையாகிய பாசுரங்களை நமக்காக பாடித் தந்தாள். இசைக்கு மயங்காத உயிர்கள் ஏது ! அவை ஆண்டுகள் கடந்தும் அழியாச் செல்வமாக இல்லந்தோறும்,ஆலயங்கள் தோறும் ஒலிப்பது அதன் சிறப்பு. …

மேலும் படிக்க »

துணை வருவாள் துர்க்கையம்மன்-2

ஆமா. . . கெணத்துத் தண்ணிய வெள்ளமா கொண்டு போகப்போகுது. . . நீ நல்லபடியாக வேலையில சேர்ந்து. . .பயம் இல்லாமல் பத்திரமா. . . இருக்கணும் ஆத்தா.. . பட்டீஸ்வரம் துர்க்கைன்னா. . . பகையாளி பத்து மைல் தூரத்திற்கு ஓடிடுவான். . உங்க அப்பனுக்கு இது ஒண்ணுல தான் புத்தி ஒழுங்கா வேலை செஞ்சிருக்கு. . . இல்லைன்னா வெட்டி வீராப்பு பேசிகிட்டு திரிவான். . …

மேலும் படிக்க »

திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவ சுவாமி திருக்கோயில் -1

சக்கரவர்த்தி ராஜராஜ சோழன் ஆலய கல்வெட்டில் ” சிற்றம்பர்” எனவும், வேறு சில மன்னர்கள் “திரிசிரபுரம்“ எனவும் தங்கள் கால கல்வெட்டுகளில் பதிவு செய்ததும், மகான் அருணகிரி நாதர் அருளிய பாடல் ஒன்றில் ” சிரகிரி” என போற்றியதும் 10ம் நூற்றாண்டுக்காரரான நாராயண வேம்பர்கோன் என்பவர் ”சிராமலை” என்று குறிப்பிட்டதுவுமான ஒரு தலம், நம்மை அடிமையாக்கி ஆண்ட வெள்ளையர் காலத்தில் டிரிச்சினாப்பள்ளி“ என பெயர் திரிந்து அழைக்கப்பட்டது. அந்த பிரசித்தி …

மேலும் படிக்க »

ஷீரடி பாபா 25

எதிர்பாராதது தவ்லே என்ற ஊரின் மாம்பலத்தாரான பி. வி. தேவ் என்பவர் மகான் பாபாவின் தீவிர பக்தர். அடிக்கடி ஷீரடி சென்று மகானின் தரிசனம் பெறும் வழக்கமுள்ளவர். இந்த முறை அவருக்கு மிகவும் வேண்டியவரான படேல் என்பவர் முதன்முறையாக பாபாவை வணங்க வந்திருந்தார். தெய்வ பக்தி அதிகம் கொண்ட படேல் அன்று ஷீரடி சென்று மகானின் தரிசனம் பெற வந்த காரணம் , அவர் புதிதாக ஒரு கோயிலைக் கட்டிக்கொண்டிருந்தார். …

மேலும் படிக்க »