மாதாந்திர ஆவண தொகுப்பு காப்பகம்: மே 2018

ஷீரடி பாபா 22

ஒரு தவறு செய்தால்… பாபாவை பக்தர்கள் தரிசித்துக் கொண்டிருந்தனர். அப்போது அக்கூட்டத்திலிருந்த ஒருவர் மட்டும் மகானின் முகத்தை தன்பால் ஈர்க்க முயற்சிப்பதை அவர் கண்டுகொண்டுவிட்டார்.  அந்த பக்தரை தன்னருகே அன்புடன் அழைத்த பாபா, “ ஏதாவது என்னிடம் சொல்லவேண்டுமா? பயமின்றி சொல்.” என்று அன்பொழுகக் கேட்டார்.  சற்று தயங்கிய பக்தர், ”நான் தங்கள் முன்பு ஒரு பாட்டுப் பாட வேண்டும்”  என்று தன் ஆசையை  வெளியிட்டார்.  “அப்படியா! “ என …

மேலும் படிக்க »

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் -26

தன்னுடைய குழந்தைகள் கொல்லப்படுவதை அறிந்த திதி வருத்தப்பட்டாள். மறுபடியும் கருவுற்றாள். கடுந்தவம் புரிந்தாள். சிறிது கூட ஆசாரக் குறை இல்லாமல் கர்ப்பத்தைத் தாங்கிவந்தாள். சூதவனான இந்திரன் தன்னுடைய சிற்றன்னைக்கு பணிவிடை செய்துவந்தான். திதி அந்த பணிவிடையை ஏற்றுக்கொண்டாள். அவளுடைய கர்ப்பம் வளர்வதை கண்டு இந்திரன் கவலை கொண்டான். ஒரு நாள் தன் தலைமுடி பாதத்தில் படும் வண்ணம் அவள் சுருண்டு படுத்திருப்பதைப் பார்த்து வாய் விட்டு சிரித்தான். இது ஆசாரக்குறைவு …

மேலும் படிக்க »

ஆதிசேஷனின் அவதாரம் – 25

திருக்கோஷ்டியூர் நம்பிகளின் பதில் திருமலையாண்டானை திகைப்படைய வைத்தது. அவர் திடுக்கிட்டு நிமிர்ந்தார். “என்ன சொல்கிறீர்கள்..?” “ஆம்… ஸ்ரீஆளவந்தார் நமக்கு வாயால் சொல்லிக்கொடுத்தார். ஆனால், ராமானுஜருக்கு கண்களாலேயே அனைத்தையும் உணரவைத்துவிட்டார். ஆகையால் எம்பெருமானாரின் கூற்றை ஆளவந்தாரின் உரையாகவே எடுத்துக் கொள்ளுங்கள்…” என்ற திருக்கோஷ்டியூர் நம்பிகளை வியப்பாய் பார்த்தார் திருமலையாண்டான். அவருடைய பதில் திருமலையாண்டானின் மனதில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. இருவரும் புறப்பட்டு ராமானுஜரின் மடத்திற்கு வந்து சேர்ந்தனர். எவ்வித முகச்சுழிப்பும் …

மேலும் படிக்க »

ஷீரடி பாபா 21

ருசி பேதம். மகான் ஷீரடி பாபாவின் அதீத பக்தரான பாபு சகேப் ஜோக்குற்கு அதற்கிணையான பக்தி, மதிப்பு, பிரேமை , இவற்றை அக்காலகட்டத்திலேயே ஒரு மடம் ஸ்தாபித்து வாழ்ந்துகொண்டிருந்த மகான் ஸ்ரீ ஸகாராம் மகாராஜிடமும் கொண்டிருந்தவர். அவர் அடிக்கடி ஷீரடி சென்று பாபாவை தரிசிப்பது போலவே, அந்த மடம் சென்று மகான் ஸ்ரீ ஸகாராம்ஜியியும் வணங்கி வருவார். ஒரு சமயம் மகான் ஸகாராமை தரிசிப்பதற்காக அவரின் இருப்பிடமான மடத்திற்கு சென்றிருந்தார் …

மேலும் படிக்க »

அறநீர் – சிறுகதை

அப்பாவிற்கு ஆரம்பத்தில் இருந்தே இந்த வேலை பிடிக்கவில்லை. பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த போது நான் நர்ஸிங்கில் சேருகின்றேன் என்ற போது கடுமையாக எதிர்த்தார். எனக்கு அந்த சேவை மீது அளப்பறிய ஆவல் இருந்தது. அதே போல, கிட்டத்தட்ட அதே போல இப்போது இந்த வேலை. சைக்காலஜியில் முதுகலை பெற்றிருந்தேன் அந்த சமயம் தான் இந்த நிறுவனத்தில் இருந்து பணிக்கு அழைத்தார்கள். பணி என்றாலும் இது ஒரு சமூகத்திற்கான சேவை தான். …

மேலும் படிக்க »

ஸ்ரீ அன்னை-2

“மிர்ரா… காத்து பலமா அடிக்குது. இந்த பக்கம் வந்துடு…” தோழிகள் கத்தினர். அதற்குள் அந்த பலத்த காற்று மீராவை நிலைகுலையச் செய்து மலையிலிருந்து தள்ளியது. கீழே….அதல பாதாளத்தை நேக்கி பயணிக்க ஆரம்பித்தாள் மிர்ரா. “மிர்ரா… மிர்ரா… ஐயோ யாராவது காப்பாத்துங்களேன்…” கத்திகொண்டே மலையிலிருந்து தபதபவென இறங்க ஆரம்பித்தனர் தோழிகள். அலறியடித்துக்கொண்டு மலையடிவாரம் வந்துசேர்ந்த பொழுது, மிர்ரா ஒன்றுமே நடக்காததுபோல் நின்றுகொண்டிருந்தாள். உடலில் சிறு சிராய்ப்பும் இல்லை. ‘எப்படி இது சாத்தியம்? …

மேலும் படிக்க »

சிவன் விளையாடல் – 6

வைகை பிறந்ததும். . . மதுரை சிறந்ததும். . . தமிழகத்தில், ஏன் தென் இந்தியாவிலேயே பழமையான நகரம் என்று மதுரையை சொல்ல முடியும். உலகின் பழம்- பெருமை வாய்ந்த நகரம் என்று ஏதென்ஸ் நகரத்தைக் குறிப்பிடுகிறார்கள். ஏதென்ஸ் கிரேக்க நாகரிகத்தின் செல்லப்பிள்ளை. கிரேக்க நாட்டின் மூத்தகுடி. 2500 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றைக் கொண்டது. இந்த ஏதென்ஸ் நகரம். பழைய ஒலிம்பிக் விளையாட்டுகள் இந்த நகரில்தான் தொடங்கின. ஏன் ஏதென்ஸ் …

மேலும் படிக்க »

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் -25

ஸ்ரீ இராமா, யாக தீட்சையில் இருந்த அவர் கங்கையின் சரித்திரத்தைத் தெரிந்து கொண்டு அவள் நீர் பெருக்கு முழுவதையும் குடித்துவிட்டார். பகீரதன் திகைத்துப் போனான். சகலரும் பூமியின் நலன் கருதி ஜான்ஹுவை பிரார்த்தித்தார்கள். கங்கை உங்கள் மகள் போல அல்லவா என்று கெஞ்சினார்கள். அதனால் மனம் மகிழ்ந்த ஜான்ஹு தன் செவி வழியாக கங்கையை வெளிப்படுத்தினார். அன்று முதல் ஜான்ஹுவின் மகள் என்ற புகழோடும் ஜான்ஹவி என்றும் அழைக்கப்படலானாள். பகீரதன் …

மேலும் படிக்க »

ஆதிசேஷனின் அவதாரம்- ராமானுஜர்- 24

‘ஆகா… ராமானுஜரால் அனுப்பட்டவரா அவர்!’ உடனே ராமானுஜரை அணுகினார். மீண்டும் மன்னிப்பு கோரிக்கை வைக்கப்பட்டது. ராமானுஜர், பெரியவரை நிதானமாய் நிமிர்ந்து பார்த்தார். “முதலியாண்டானை தவிர வேறு வேலையாள் எம்மிடம் இல்லை.உங்களுக்கு அவரை பிடிக்கவில்லை என்றால்,அவருக்கு பதில் நானே உங்கள் வீட்டிற்கு சீதன வெள்ளாட்டியாக வருகிறேன்” என்றார். அடுத்த நொடி நெடுஞ்சாண்கிடையாக ராமானுஜரின் முன் விழுந்தார் பெரியவர். “சுவாமி தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்” எனக் கதறினார். “முதலியாண்டானை திரும்பவும் அழைத்துக்கொள்வது …

மேலும் படிக்க »

நா மணக்கும் நாச்சியார் தமிழ் -9

காறை பூணும் கண்ணாடி காணும்,தன் கையில் வலை குலுக்கும் கூறை உடுக்கும் அயர்க்கும்,தன் கொவ்வைச் செவ்வாய் திருத்தும் தேறித்தேறி நின்று ஆயிரம் பேர்த் தேவன் திறம் பிதற்றும் மாறில் மாமணி வண்ணன் மேல் இவன் மால் ஊறுகின்றாளே ! அழகிய கூறைப் பட்டாடை உடுத்தி, காறை போன்ற ஆபரணங்களை அணிந்து கண்ணாடி முன் நிற்பாள்.கைகள் நிறைய வளையல்கள் அணிந்து அவை ஓசையெழ, குலுக்கிப்பார்ப்பாள். பின் அயர்ச்சியுறுவாள். கோவைக்கனி போன்ற சிவந்த …

மேலும் படிக்க »