முகப்பு / 2018 / ஏப்ரல்

மாதாந்திர ஆவண தொகுப்பு காப்பகம்: ஏப்ரல் 2018

ஷீரடி பாபா -18 -வித்தியாசமான மருத்துவர்

“ சார் ! சார் ! மிஸ்டர் பிள்ளை!” பிள்ளை என்பவரின் வீட்டில் வாசற்புறம் நின்று கொண்டு அவருடைய நெருங்கிய நண்பர் தீட்சித் உள் நோக்கி குரலெழுப்பினார். ஷீரடி மகானின் திவிர பக்தரான அவர் அடிக்கடி ஷீரடி சென்று பாபாவை தரிசிக்கும் பழக்கமுடையவர். சில நாட்களுக்கு முன்னால் , பிள்ளையின் உடல்நிலை குறித்து விசாரிக்க வந்திருந்த தீட்சித் , தற்போது அவர் உடல்நிலை என்னவென்பதை அறிந்துகொள்ளவே மீண்டும் வந்திருந்தார். தீட்சித்தின் …

மேலும் படிக்க »

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் -19

மணம் மனதைக் கொள்ளை கொண்டது. அதன் நறுமணம் நெஞ்சை நிறைத்தது. அதன் பசுமை கண்களைப் பறித்தது. மனதின் ஒலி யாழின் மீட்டலைப் போல காதுகளில் நுழைந்து புத்தியை பரவசப்படுத்தியது. உடம்பு முழுவதும் வெவ்வேறு விதமான வாசனை உள்ள காற்று தழுவியது. காலின் கீழ் மெத்தென்று ஈர மண்ணும், புல்லும் உணரப்பட்டன. எந்த மரத்தைப் பார்த்தாலும் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும் போல் தோன்றியது. ஒவ்வொரு செடியும் ஒவ்வொரு அழகை வெளிப்படுத்தியது. பறவைகளை …

மேலும் படிக்க »

சிவன் விளையாடல் – 3

மதுரையை ஆண்ட சுந்தரபாண்டியன் மதுரையை ஆட்சி செய்யத்தொடங்கினாள் மீனாட்சி. ஆட்சி மாறியவுடன் மதுரையில் காட்சிகளும் மாறின. ஆம் மதுரையின் பேரரசியாக மீனாட்சி முடிசூட்டிக் கொண்ட பின்னர், மதுரையின் செல்வச் செழிப்பு பெருகியது. பேரும் புகழும் கொண்ட கடம்பவன நகரான மதுரை, சீரும் சிறப்பும் பெறத் தொடங்கியது. மதுரை மக்களின் வாழ்வு வளம் பெற்றது, வாக்கு நலம் உற்றது, மண் பலம் பெற்றது. ஆயிரம் இருந்தாலும் பெண்ணாட்சிதானே! அது என்னாச்சு என்று …

மேலும் படிக்க »

ஆதிசேஷனின் அவதாரம் – 18

தான் கல்வி புகட்டிய மாணவனை எப்படி வணங்கி வலம் வருவது? அவனையே குருவாக ஏற்றுக்கொள்ள வேண்டுமாமே. இது நன்றாகே இருக்கிறதே. உண்மையில் கனவு வந்ததா? அல்லது நேற்று அன்னையிடம் பேசிய பேச்சுகள் நினைவில் வந்து, அதை கனவு என தவறாக எண்ணுகிறேனா? முடிவுக்கு வரவிடாமல் மூளை போர்க்கொடி தூக்கியது. சட்டென அந்நேரத்தில் நினைவுக்கு வந்தார் திருக்கச்சி நம்பிகள். பெருமாளிடம் பேசும் அந்த பெரியவரிடம் சொல்லி, இதற்கு விடை கேட்டால் என்ன? …

மேலும் படிக்க »

ஞானமித்ரர் – 6

புதிய விருட்சத்தில் பூத்த புதுநம்பிக்கை சாலையின் இரு மருங்கிலும், பெரும்பாலான மரங்களை, சமீபத்தில் வீசிய புயல் வேரோடு பிடுங்கி வீசியிருந்தது. ஒடிந்து விழுந்த மரங்கள் அகற்றப்பட்டு, அந்த இடம் வெறுமையாக காட்சியளித்தது. ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்த இளைஞர்களின் மத்தியில் உரையாற்றுவதற்காக சுவாமி ஸ்ரீ ஞானமித்ரரை அழைத்திருந்தனர். சுவாமிகள் பேச ஆரம்பிக்கிறார். ‘நூறு இளைஞர்களை கொடுங்கள், இந்த உலகத்தையே மாற்றி காட்டுகிறேன்’ என்றார் விவேகானந்தர். அத்தகைய திறமை …

மேலும் படிக்க »

இசை வழிபாடு – 7

ஆறுமுகனைப் பற்றிய அரியதகவல்கள் பலவும் இடம்பெற்ற பாடல் இது. ஒவ்வொன்றாக அனுபவிக்கலாம். திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் திருச்செந்தூரிலே வேலாடும் உன் திருப்புகழ் பாடியே கடலாடும் பழனியிலே இருக்கும் கந்தப்பழம் நீ பார்வையிலே கொடுக்கும் அன்புப்பழம் பழமுதிர்சோலையில் முதிர்ந்த பழம் பக்தி பசியோடு வருவோர்க்கு ஞானப்பழம் சிறப்புடனே கந்தக்கோட்டமுண்டு உன் சிங்கார மயிலாட தோட்டமுண்டு உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை …

மேலும் படிக்க »

நா மணக்கும் நாச்சியார் தமிழ் -7

மின்னார் தடமதிள் சூழ் வில்லிப்பூத்தூர் என்றொருகால் சொன்னார் கழற் கமலம் சூடினோம் – முன்னாள் கிழியறுத்தான் என்றுரைத்தோம் கீழ்மையினற்சேரும் வழியறுத்தோம் நெஞ்சமே ! வந்து பாண்டியனது அரசவையில், நாராயணனே பரப்ரும்மம் என்று நிர்ணயம் செய்து, பொற்கிழியை அறுத்தஎடுத்த பெரியாழ்வார், வாழ்ந்த அவரது பெருமையை சொல்லும், நீண்ட நெடிய மதில்களைக் கொண்ட திருவில்லிப்புத்தூர் என்று சொல்லும் வைணவர்களது பாத கமலங்களை தலையில் கொள்ளலாம். இதனால் நரகத்திற்கு செல்லாமல் பிழைக்கலாம். என்னே! ஆழ்வாரின் …

மேலும் படிக்க »

சாழல் பாசுரங்களைக் கூடிப் பாடிடுவோம்! – பாசுரம் 19

ஆழ்வார்களும், நாயன்மார்களும் தாங்கள் எழுதும் பாசுரங்களும், பதிகங்களும் பாமர மக்களைச் சென்று அடைய வேண்டும் என்று விரும்பினார்கள். இதனால் இனிய, எளிய தமிழ் நடையில் தங்கள் ஆக்கங்களைச் செய்தார்கள். இதே கருத்துடன், பிற்காலத்தில், துளஸிதாஸ், சூர்தாஸ் போன்றவர்கள், இலக்கிய மொழியான சம்ஸ்கிருதத்தைத் தவிர்த்து, அந்தக்கால மக்கள் பேசும் அவதி, விரஜ மொழிகளில் தங்கள் காவியங்களைப் படைத்தனர். ஆனால் இன்று நம் நடைமுறை ஹிந்திக்கும் இம்மொழிகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. துளஸி …

மேலும் படிக்க »

வாழ்வு, தேவை, ஆசை

மன்னர் பொன்னரசன் ஒரு நாள், அரசகுரு ஆளுடை நம்பியிடம், வாழ்வு, தேவை, ஆசை இவற்றுக்கான வாழ்வியல் தத்துவத்தைக் கூறுமாறு கேட்டார். சில குறிப்புகளைக் கூறினார் குரு. அதன்படி, அரசனுக்கு முன் பாதுகாப்புக்கும் பாதை காட்டவும் செல்லும் குதிரை வீரன் வல்லவன் வரவழைக்கப்பட்டான். மன்னன் அவனைப் பார்த்து, “ உனக்கு எவ்வளவு நிலம் வேண்டுமோ அவ்வளவு தூரம் குதிரையில் சென்று, அடையாளம் இட்டுவா. அவ்வளவு இடத்தையும் உனக்கே தருகிறேன்” என்றான். “மாமன்னரே! …

மேலும் படிக்க »

அறுபத்துமூவர் -6

விறன்மிண்ட நாயனார் அரச வம்சத்தை அடியோடு அழிக்க ஆவேசம் கொண்ட பரசுராமனின் பாசமிகு தந்தை ஜமதக்கினி முனிவர் அம்முனிவரை அழித்து ஒழித்தான் அரசன் காத்தவீரியன். அன்புத் தந்தையின் ஆருயிர் பறித்த அரச வம்சத்தை அழிப்பேன் என சபதம் செய்தார் பரசுராமன். தன்வினை முடிக்க தண்நிலவு தரித்த சடையனை தாள் பணிந்தார் தவம் செய்தார். மன்னர் குலம் அழிக்க மழு ஆயுதம் பெற்றார் மதி சடையனிடம். அரசர் பலரை அழித்து ஒழித்து …

மேலும் படிக்க »