முகப்பு / 2018 / மார்ச்

மாதாந்திர ஆவண தொகுப்பு காப்பகம்: மார்ச் 2018

திருவாரூர் தியாகேசன் திருக்கோயில் -5

தியாகேசன் திருக்கோயில், பிரம்மாண்டம் பெறும் வகையில், இரண்டாம் ராஜராஜன் தன் ஆட்சிக்காலத்தில் இவாலயத்தில் பெரிய கோபுரமும், சபாபதி மண்டபமும் உருவாக்கினான். மகாராணி செம்பியன்மாதேவி அறநெறிக் கோயிலை கற்றளியாக்கினார். அந்த மகாராணியின் மந்திரி, தன் பங்கிற்கு ஒரு கோபுரம் அமைத்தார். அரசன் இரண்டாம் ராஜேந்திரன் வீதி விடங்கரின் கர்ப்பகிரகம் அமைத்து வன்மீக நாதருக்கு கோயில் கட்டினான். காவிரி நதியின் தென்கரைத் தலங்களில் 87வது வரிசையில் இடம் பெற்றுள்ள திருவாரூர் ஆலயத்தில்,, பூக்கோயில், …

மேலும் படிக்க »

அடுத்தவர் கருத்து

தேசீய அளவில் என்றால் நாடு விடுதலை அடைந்து பல ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சியின் ஆட்சி. பின் அதற்கு மாற்றாக பி.ஜே.பி.வெற்றி பெற்று, அதன் ஆட்சி. மீண்டும் காங்கிரஸ். அதை வீழ்த்தி பி.ஜே.பி. மாநில அளவில் கடந்த பல ஆண்டுகளாக தி.மு.க. அதற்கு மாற்றாக அதிமுக என்று இரண்டே கட்சிகள்தான் மாறி மாறி தேர்ந்தெடுக்கபட்டிருக்கிறார்கள். பொருளாதார சித்தாந்தம் என்றால் ’கேபிடலிஸ்ட்’ என்ற வலது சாரி சிந்தனை. அதற்கு மாற்றாக கம்யூனிச நாடுகளில் …

மேலும் படிக்க »

ஷீரடி பாபா -10

“ கருணைக்கல்” பல ஊர்களைச் சுற்றி அலைந்து அந்த இளைஞன் தலைவிரி கோலமாகவும் அழுக்கடைந்த ஆடைகளுடனும் மிகச் சோர்வாகவும் வந்தடைந்த இடம் மகான் ஷீரடி சாய் பாபா எழுந்தருளி பக்தர்களின் குறைகளைக் கேட்டு , நிவர்த்தியளித்துக் கொண்டிருந்த ஷீரடி சிற்றூர். இளைஞன் , ஷீரடிவாசிகள் ஒவ்வொருவரையும் பொறுமையுடன் அனுகி தான் ஒரு நபரைத் தேடுவதாகவும், அவர் ஒரு பக்கீர் எனவும், மெலிந்த தோற்றமும் , கனிவான பார்வையும் கொண்டவர் என …

மேலும் படிக்க »

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் 11

’’தசரதரே, இங்கு வந்திருக்கின்ற நான் பிரஜாபதி தொடர்புடைய மனிதன் என்பதை அறிந்து கொள்வீராக’’ என்று உரத்த குரலில் சொல்லிற்று. தசரதர் கை கூப்பிக் கொண்டு, ’’வருக வருக ஐயனே. உங்கள் வரவு நல்வரவாகுக. எனக்கு இடும் பணி என்னவோ அதைச் செய்ய தயாராக இருக்கிறேன்’’ என்றார். ’’மன்னா, இந்த யாகத்தில் தெய்வங்களை பூஜித்து வந்த பலன்களை நீங்கள் அடைந்து விட்டீர்கள். இதோ என் கையில் இருக்கிறது தேவர்களால் உண்டான பாயஸம் …

மேலும் படிக்க »

ஆதிசேஷனின் அவதாரம் -10

“என் மந்திரங்களுக்கு நீ கட்டுப்பட்டுத்தான் ஆகவேண்டும். ம்…இளவரசியை விட்டுவிட்டு வெளியே போ…” முன்னைக்காட்டிலும் வேகமாய் மந்திரங்களை உச்சரிக்க ஆரம்பித்தார் பிரகாசர். “ஹ…ஹ…ஹா… உன் மந்திரங்கள் என்னை கட்டுப்படுத்தாது. இதோ பார்…” அவர் உச்சரித்த அதே மந்திரங்களை அதுவும் உச்சரித்தது. யாதவப்பிரகாசர் விக்கித்துப்போனார். தன் தோல்வியை வெளியே காட்டாமல் சமாளிக்க முயன்றார். “ஏய்… பிரம்ம ராட்சஸமே… நான் யார் தெரியுமா?” அதட்டிப் பார்த்தார். “டேய்… யாதவப்பிரசாகா… இப்பிறவியில் மட்டுமில்லை, முற்பிறவியிலும் உன்னை …

மேலும் படிக்க »

ஒவ்வொரு பாசுரமும் சொல்லோவியம்தான் ! -பாசுரம் -10

காரைக்குடி கம்பன் கழகம்‘ 1939ம் ஆண்டு கம்பன் அடிப்பொடி திரு சா.கணேசன் அவர்களால் தொடங்கப்பெற்றது. கம்பனை வம்பனாக்கித் தாழ்த்த சில தலைவர்கள் முயற்சி செய்த அந்தக்காலத்தில், கவிச்சக்கிரவர்த்தி கம்பனுக்காகத் தனிக் கழகம் அமைத்து, பிற்காலத்தில் பல கம்பன் கழகங்களுக்கு வழிகாட்டி இலக்கணமாக, சாதி சமய பாகுபாடு இன்றி எல்லோரும் பங்கு கொள்ளும் அரங்கமாக ஆக்கியது அவரது சீரிய முயற்சி. எந்த இலக்கிய அமைப்பின் சரித்திரத்திலும் நிகழ்ந்திரா வண்ணம், எழுபத்தைந்து ஆண்டுகள் …

மேலும் படிக்க »

ரமண மகரிஷி -2

வீட்டைவிட்டுக் கிளம்பிய வெங்கட்ராமன் கிடைத்த ரயிலில் ஏறினான். திருவண்ணாமலை செல்லும் முடிவோடு இருந்தவன், பாதி தூரத்தை ரயிலிலும், மீதி தூரத்தை நடையிலுமாகக் கடந்தான். கையிலிருந்த மூன்று ரூபாய் ரயில் டிக்கெட்டாக மாறியிருந்தது. எதிரில் தென்படும் கோயிலில் பிரசாதங்களை வாங்கி உண்டு பசியை போக்கிக்கொண்டான்.உணவு கிடைக்காதபோது பட்டினி கிடக்க நேரிட்டது. அதனால் தன் காதில் கிடந்த கடுக்கனை கழற்றி ஒரு பிராமணரிடம் விற்றுவிட்டு பணம் வாங்கிக்கொண்டு ஒரு அதிகாலைப்பொழுதில் திருவண்ணாமலையை அடைந்தான். …

மேலும் படிக்க »

திருவாரூர் தியாகேசன் திருக்கோயில் -4

தியாகேசன் திருக்கோயிலுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதத்தில் கோயிலுக்குள் பல மண்டபங்கள் அமைந்துள்ளன்.வற்றைப் பற்றிப் பார்க்கலாமா?. ஆயிரங்கால் மண்டபம் இவ்வாலயத்தின் கிழக்கு கோபுரம் தாண்டி மூன்றாம் பிரகாரம் சென்றால், , வட திசையில் காட்சியளிக்கும் நூற்றுக்கணக்கான கல் தூண்களைக் கொண்ட பெரிய மண்டபம் உள்ளது. ஆயிரங்கால் மண்டபம் என்ற இதன் பெயரே இதன் பெருமையை விளக்கும். சுமார் 210 அடி நீளமும் 140 அடி அகலமும் கொண்ட இந்த மண்டபத்தின் …

மேலும் படிக்க »

கடவுள் எங்கே? எப்படி இருப்பார்?

கடவுள் எப்படி இருப்பார் என அரசன் கேள்விக்கு துறவி சொன்ன விளக்கம். அரசனுக்கு கடவுள் எப்படி இருப்பார் என சந்தேகம் .அவரின் சந்தேகத்தை யாரும் புரியும்படி சொல்லவில்லை அச்சமயம், துறவி ஒருவர் கடவுள் பற்றி தங்களுக்கு பதில் அளிக்கிறேன் என சொன்னார் , ஒரு மெழுகு வர்த்தியை ஏத்தி, அரசே இந்த மெழுகு வர்த்தியின் தீபம் எந்த திசையைக் காட்டுகிறதுன்னு கேட்டார். அவர், அது மேல் நோக்கி காட்டுகிறது… எந்த …

மேலும் படிக்க »

சிவன் விளையாட்டு – 1

மதுரை தோன்றியது அவர்கள் மூத்தோர்களை மதிப்பவர்கள், அறிஞர்களை ஆதரிப்பவர்கள். எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துபவர்கள். முக்காலமும் சிவபூஜை செய்பவர்கள். படையெடுத்துச் சென்று பலம் காட்டுபவர்கள். பக்தி மார்க்கம் பெருகிட பாடுபட்டவர்கள். இலங்கை வரை எல்லையை விரிவுபடுத்தியிருந்த தமிழ் மன்னர்கள். இன்னும் பல சிறப்புக்கு உரியவர்கள். அப்போது பாண்டிய நாடு மணவூர் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு இலங்கை வரை தனது எல்லையை விரிவு படுத்தியிருந்தது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வெளிநாடுகளுடன் …

மேலும் படிக்க »